|
||||||||
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு செய்திக் குறிப்பு |
||||||||
![]() உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு செய்திக் குறிப்பு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு விழா கரூரில் வள்ளுவர் கலை ,அறிவியல் & மேலாண்மைக் கல்லூரியில் பெரு நிகழ்வாக 25/05/25 அன்று நடக்க இருக்கிறது., தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மனன முற்றோதல் பயிற்சி வழங்கி வரும் ஆசிரியர்களும் அனைத்து மாவட்ட திருக்குறள் அமைப்புகளும் ,மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளை தமிழர்கள் முழுமையாக உள்வாங்கி செயல் பட்டால், அருளும் பொருளும் நிறைந்த சமுதாயமாக தமிழ்நாடு மாறும். "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றார் பாரதியார் . ஆனால் வள்ளுவத்தை தமிழர்கள் தங்கள் வாழ்வில் முழுமையாக உள்வாங்கிக் கொண்டார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே ,அறம் சார்ந்த, குறள் சார்ந்த ஒரு சமுதாயத்தை படைக்க வேண்டும் என்றால் குறள் நெறி மக்களிடையே சென்றடைய வேண்டும் . திருக்குறளை மேற்கோளுக்காகவும் மேடைப்பேச்சுகாகவும் மட்டுமே பயன்படுத்துவதை விடுத்து வள்ளுவத்தை முழுமையாக வாழ்வியலாக்க வேண்டுமென்றால் வள்ளுவத்தை முறைப்படி பொருளுணர்ந்து படிக்க வேண்டும் . அப்போதுதான் , குறள் நெறி ஆழமாக வேரூன்றி நிற்கும் வள்ளுவத்தை முறைப்படி படிப்பதற்கும், மனனம் செய்வதற்கும் ஏற்ற வயது 7 முதல் 14 வயது வரை . பொருள் உணர்ந்து படிக்கும் பருவம் 10 வயது முதல் தொடங்கும். இந்த வயதில் வள்ளுவத்தை முழுமையாக மனனம் செய்து முழுமையாக உள்வாங்கி விட்டால் ,காலம் செல்லச்செல்ல தானாகவே அதன் பொருள் விளங்க ஆரம்பிக்கும். அவ்வாறு கற்றவர்கள் இந்த சமுதாயத்தில் நன்மக்களாக வளர்வார்கள். காலப் போக்கில் நாம் குறளறம் சார்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும். இதை மனத்தில் கொண்டு , ஐந்தாண்டுகளுக்கு முன் வலைத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம், சர்வீஸ் டு சொசைட்டி என்ற மூன்று அமைப்புக்களால் ,உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் தொடங்கப்பட்டது.
இயக்கத்தின் நோக்கம்,
வாருங்கள் சந்திப்போம் ;வரும் தலைமுறையினர் குறித்து சிந்திப்போம் |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 29 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|