|
|||||
ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி |
|||||
![]() பிரதமர் நரேந்திர மோடி ‘ட்ரூத்’ சமூக வலைத்தளத்தில் இன்று இணைந்தார்.
தனது ட்ரூத் பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி சொல்லி உள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த லெக்ஸ் பிரிட்மேன், கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களை நேர்காணல் செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி உடனான அவரது நேர்காணல் அண்மையில் சமூக வலைத்தளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதை ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து அதில் இணைந்த பிரதமர் மோடி, ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்தார்.
“ட்ரூத் சோஷியல் சமூகத்தில் இணைவதில் மகிழ்ச்சி! இந்தத் தளத்தில் உள்ள அனைவருடனும் தொடர்பு கொள்ளவும், வரும் நாட்களில் அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பிரதமர் மோடி தனது முதல் ட்ரூத் பதிவில் கூறியுள்ளார்.
கடந்த 2021-ல் ட்ரம்ப் மீடியா மற்றும் தொழில்நுட்பக் குழுமம் ட்ரூத் சோஷியல் எனும் சமூக வலைத்தளத்தை நிறுவியது. ட்விட்டர் (இப்போது எக்ஸ்) மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கணக்கு
முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இதை உருவாக்கி இருந்தார். 2022 முதல் பொதுப் பயன்பாட்டுக்கு ட்ரூத் கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டின் தரவுகளின் படி சமூக வலைத்தளச் செயலிகளுக்கான ஆப்பிள் ஆப் ஸ்டோர் தரவரிசையில் 38-ஆவது இடத்தை ட்ரூத் சோஷியல் பிடித்திருந்தது.
|
|||||
by hemavathi on 17 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|