|
||||||||
பிரமதர் நரேந்திர மோடிக்குக் கானாவின் தேசிய விருது |
||||||||
![]()
இரண்டு நாள் பயணமாக ஜூலை 2ஆம் தேதி கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தங்கள் நாட்டின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”-வை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.
விருதைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "கானாவின் தேசிய விருதான "தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா" விருது கானா அதிபரால் வழங்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கானா அதிபர் மகாமாவுக்கும், கானா அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்தக் கவுரவத்தை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
நமது இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், அவர்களின் நம்பிக்கைக்குரிய எதிர்காலம், நமது வளமான கலாச்சாரப் பன்முகத்தன்மை, மரபுகள், இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான நீடித்த வரலாற்றுப் பிணைப்புகள் ஆகியவற்றுக்கு இந்த கவுரவத்தை நான் அர்ப்பணிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இது பிரதமர் நரேந்திர மோடி பெற்ற 24-ஆவது சர்வதேசக் கவுரவம் ஆகும்.
|
||||||||
by hemavathi on 03 Jul 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|