LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- மற்ற தமிழ் தொண்டுகள்

ஏடகம் அமைப்பின் நிறுவனர் மணிமாறனுக்கு பிரதமர் பாராட்டு

 

 மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடையே பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 124-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி சமீபத்தில் ஒலிபரப்​பானது.

அதில், "தமிழ்​நாட்​டின் தஞ்​சாவூரை சேர்ந்த மணி.மாறன் இந்தச் பணியில் ஈடுபட்​டிருக்​கிறார். தமிழில் இருக்​கும் ஓலைச்​சுவடிகளை இளம்​தலை​முறை​யினர் படித்து கற்​றுக் கொள்​ள​வில்லை என்​றால் விலைமதிப்பில்​லாத மரபுச் செல்​வத்தை நாம் இழக்க நேரிடும் என்று அவர் கரு​தி​னார். இதற்​காக அவர் மாலைநேர வகுப்​பு​களை தொடங்​கி​னார்.

தமிழ்ச் சுவடிகளை எவ்​வாறு படிப்​பது, புரிந்து கொள்​வது என்பது குறித்து மணி.மாறன் கற்​பித்​தார். அவரது வழி​காட்​டு​தலால் ஏராள​மான மாணவர்​கள் ஓலைச்​சுவடிகளை கற்​கும் அறி​வில் தேர்ச்சி பெற்று உள்​ளனர். இப்​படிப்​பட்ட முயற்சிகள் நாடு முழுவதும் நடை​பெற்​றால் நமது பண்​டைய ஞானம் நான்கு சுவர்​களுக்​குள் முடங்கிக் கிடக்​காமல், புதிய தலை​முறையினரை சென்றடை​யும்.

இந்த சிந்​தனை​யால் உத்​வேகம் அடைந்து நடப்​பாண்டு மத்​திய பட்​ஜெட்​டில் ‘ஞான பாரத இயக்​கம்’ என்ற திட்​டம் அறிவிக்கப்பட்டது. புதிய இயக்​கத்​தின்​படி, பண்​டைய சுவடிகள் டிஜிட்​டல்​மய​மாக்​கப்​படும். ஒரு தேசிய டிஜிட்​டல் சேமிப்​பகம் உரு​வாக்​கப்​படும். இதன்​மூலம் உலகம் முழு​வதும் உள்ள மாணவர்​கள், ஆய்​வாளர்​கள்​ இந்​தி​யா​வின்​ ஞான பாரம்​பரி​யத்​தோடு தங்​களை இணைத்​துக்​ கொள்​ள முடி​யும்​” என்று பிரதமர்​ நரேந்​திர மோடி குறிப்பிட்டார். 

இது தொடர்பாகப் பேசிய மணிமாறன்,  "நான் தமிழ்ப் பண்டிதராகப் பணிக்கு வந்த 10 ஆண்டுகளில், தமிழ்ச் சுவடியியல் பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராக இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஓலைச்சுவடி படிப்பதற்கான பயிற்சியை அளித்துள்ளேன். தமிழகத்திலும், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் புதைந்து கிடந்த சிற்பங்கள், கல்வெட்டுகளை ஆய்வு செய்து வெளி உலகத்துக்குக் கொண்டு வந்துள்ளேன். தற்போது ஏடகம் என்ற அமைப்பை உருவாக்கி, இலவசமாகப் பலருக்குச் சுவடிகள் படிப்பதற்கான பயிற்சிகள் அளித்து வருகிறேன்.

இதனால், வரலாறு, தொல்லியல் சார்ந்த மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். பொதுமக்களுக்கும் வரலாறு சார்ந்த தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை உலகம் முழுக்க அறியச் செய்த பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் பாராட்டு எனக்கு மிகவும் ஊக்கம் அளித்துள்ளது. இவ்வாறு மணி.மாறன் தெரிவித்துள்ளார்.

 

 

by hemavathi   on 28 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கண்ணகி கோட்டம் - சி.கோவிந்தராசனார் கண்ணகி கோட்டம் - சி.கோவிந்தராசனார்
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்
மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார் மேனாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முனைவர் ஏ.ஆர்.இலட்சுமணன் காலமானார்
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி சமூக செயல்பாட்டாளர், மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவி
மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி மேனாள் துணைவேந்தர் முனைவர் வசந்தி தேவிக்கு எமது புகழஞ்சலி
இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக  எஸ்.கிருஷ்ணன் தேர்வு இந்திய ஆட்சிப் பணி மத்தியச் சங்கத்தின் தலைவராக எஸ்.கிருஷ்ணன் தேர்வு
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சுந்தர் பிச்சை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.