|
||||||||
புடலங்காய் துவையல் (snake gourd thuvaiyal) |
||||||||
தேவையானவை: புடலங்காய் துண்டுகள்-1/2 கப் தேங்காய் துருவல்-3 டே.ஸ்பூன் புளி- சிறு நெல்லிக்காய் அளவு மிளகாய் வற்றல்-4 கடலைப்பருப்பு, துவரம்பருப்பு -தலா 1 டே.ஸ்பூன் பெருங்காயத்தூள்-1 டீஸ்பூன் கறிவேப்பிலை-சிறிது இஞ்சி-சிறு துண்டு எண்ணெய்-1 டே.ஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை: 1.முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி,கடைசியாகப் புடலங்காய் துண்டுகள்போட்டு வறுத்து எடுத்து, 2.ஆறியவுடன் அதனுடன் புளி, தேங்காய் துருவல், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து எடுக்கவும். புடலங்காய் துவையல் ரெடி. |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|