LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    மரபு-தற்சார்பு வாழ்வியல் Print Friendly and PDF

புலி மார்க் சீயக்காய்

மாமியார் ஒருத்தி தன் தோழியிடம் கூறினாளாம் என் மகன் சனியோ...ட சனிதான் எண்ணெய் தேய்ச்சிக்கிறான். என் மருமகள் இருக்காளே தீவுளிக்கு தீவுளி, தீவுளிக்கு தீவுளி எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறாள். ( சனிக்கிழமை ஆண்டுக்கு ஒருமுறை வருவது போலும், தீபாவளி வாரா வாரம் வருவது போலும் சொல்வதை கவனிக்கவும்) புலி மார்க் சீயக்காய் எப்போதும் வீட்டில் இருக்கும். வாரா வாரம் சனிக்கிழமை வடக்குவெளிக்கு எங்களை அழைத்துச் சென்று அப்பா எண்ணெய் தேய்த்து விடுவார். அவர் அழுத்தித் தேய்ப்பது எங்களுக்கு எரிச்சலாக இருக்கும். தன் குழந்தைகள் நலமாக இருக்கவேண்டும் என்கிற அன்பின் வெளிப்பாடு அது. பிறகு குழாயில் பீறிட்டு அடிக்கும் நீரில் குளிப்பது அருவியில் குளிப்பது போல் ஆனந்தமாக இருக்கும். அவரோடு அந்த பழக்கம் மறைந்து போனது. நான் ஒருநாளும் என் குழந்தை களுக்கு அப்படி எண்ணெய் தேய்த்து விட்டது இல்லை. இப்போது தீபாவளியன்று மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நிலையில் புலி மார்க் சீயக்காய் பயன்பாடு குறைந்து வந்தாலும் 70 ஆண்டுகளைக் கடந்தும் அந்த நிறுவனம் தனது வணிகத்தை இந்தியாவில் மட்டுமல்லாமல் சிங்கப்பூர்,மலேசியா போன்ற நாடுகளிலும் நடத்திவருவது வியப்பளிக்கிறது. ஒரு பழக்கம் மக்களிடம் அருகி வருவதால் அது சார்ந்த வணிகமும் காலத்துக்கேற்ப மாறிவிடுகிறது. சீயக்காய் பொட்டலம் தாளிலிருந்து நெகிழிக்கு மாறியுள்ளது. திருக்குறளும் அதற்கான உரையும் கூட அச்சிடப்பட்டுள்ளது. வலம்புரி ஜான் மேற்கோள், மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம் போன்றவையும் வெளியிடப்பட்டுள்ளது.


சீயக்காயுக்கும் எண்ணெய்க்கும் உள்ள பந்தம் எப்போதும் மாறாதது. கீரனூர் செட்டியார் தனது மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்களை மிதிவண்டியில் வைத்து க்கொண்டு வெளக்கெண்ணெ, தேங்காண்ணெ, நல்லெண்ணேய் என்று கூவிக்கொண்டு தெருவில் நுழைந்ததும் அம்மா, பெரியம்மா, சின்னம்மா, ஆச்சிகள் என எல்லாரும் அவரவருக்குத் தேவையான எண்ணெய்களை வாங்குவர். வயலில் விளையும் எண்ணெய் வித்துகளை செக்கில் ஆட்டி எண்ணெயை குடத்தில் வைத்திருந்ததும் உண்டு. தலையில் சற்று கூடுதலாக எண்ணெய் தடவி வரும் மாணவர்களிடம், "என்னடா எண்ணெய் கொடத்துல தலைய விட்டாயா?" என்று ஆசிரியர் கேட்பார். 


ஹூம்... ஒரு சீயக்காய் இவ்வளவு நினைவுகளைக் கிளறுமா!?

 

நன்றி:ரத்தின புகழேந்தி..

by Swathi   on 04 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாமல் கிணறு வெட்டினார்கள்? அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாமல் கிணறு வெட்டினார்கள்?
தடம் புரண்டவர்கள் வாழ்வில் தடம் பதிக்கும் தடம் புரண்டவர்கள் வாழ்வில் தடம் பதிக்கும் "தடம்" அமைப்பின் பணிகளைப் போற்றுவோம்!
*கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வசிப்பிடத்திலேயே மாற்று வாழ்வாதாரம்* *கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வசிப்பிடத்திலேயே மாற்று வாழ்வாதாரம்*
உச்சி குளிரச்செய்யும் மூலிகை செருப்பு...வெட்டிவேர் மகத்துவம்! உச்சி குளிரச்செய்யும் மூலிகை செருப்பு...வெட்டிவேர் மகத்துவம்!
பசுமை கிராமம் உருவாக்க வழிமுறைகள் பசுமை கிராமம் உருவாக்க வழிமுறைகள்
சல்லிக்கட்டு தவிர, நாட்டு காளைகளை வெட்டுக்கு அனுப்பாமல் இப்படியும் உயிர்ப்பிக்கலாம். சல்லிக்கட்டு தவிர, நாட்டு காளைகளை வெட்டுக்கு அனுப்பாமல் இப்படியும் உயிர்ப்பிக்கலாம்.
துணிப்பை தூக்குவது  அவமானம் அல்ல  இயற்கையுடன் இயைந்த வாழ்வின் அடையாளம் துணிப்பை தூக்குவது  அவமானம் அல்ல இயற்கையுடன் இயைந்த வாழ்வின் அடையாளம்
பனை ஓலை திருமண அழைப்பிதழ் பனை ஓலை திருமண அழைப்பிதழ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.