|
||||||||
புளிச்ச கீரை துவையல் (brown indian hemp thuvaiyal) |
||||||||
தேவையானவை: புளிச்ச கீரை - ஒரு கட்டு காய்ந்த மிளகாய் - 10 முழு தனியா - 1 1/2 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 பூண்டு - 8 வெங்காயம் - ஒன்று வெந்தயம் - அரை டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவைக்கேற்ப காய்ந்த மிளகாய் - 6 பூண்டு - 6 பல் செய்முறை: 1.கடாயில் எண்ணெய் ஊற்றி கீரையை தவிர மற்ற பொருட்களை போட்டு வதக்கி கொள்ளவும். 2.வதங்கியதும் எடுத்து ஆற வைக்கவும்.அதே கடாயில் அலசி வைத்துள்ள கீரையை போட்டு நன்கு வதக்கவும். 3.வதங்கிய கீரையை எடுத்து ஆற வைக்கவும்.இப்போது முதலில் வதக்கி ஆற வைத்துள்ள மிளகாய் மற்றும் மற்ற பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். 4.அதனுடன் வதக்கி ஆற வைத்துள்ள கீரையை சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும். 5.அரைத்து வைத்துள்ள கீரை மற்றும் மிளகாய் விழுதை ஒரு கடாயில் போட்டு நன்கு வதக்கவும். 6.அரைத்த விழுது வதங்கி எண்ணெய் மேலே மிதக்கும் வரை நன்கு வதக்கவும். |
||||||||
by vani on 06 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|