|
|||||
புளிச்சக் கீரையில் 10 மருத்துவ பயன்கள் !! |
|||||
பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. புளிச்சக்கீரைக்கு காசினிக் கீரை என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆந்திர மக்கள் இதனை கோங்குரா என்று கூறுவர். புளிச்சக் கீரையின் முக்கிய பயன்கள் பற்றி இங்கு காண்போம். உடல் வலிமை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள். இந்த கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன. சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். உடல் வெப்பத்தை குறைத்து சமப்படுத்துவதில் புளிச்ச கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு. வாயு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் புளிச்ச கீரை குணப்படுத்தும். காய்ச்சல் காரணமாக நாவில் ருசி மறைந்துவிட்டால் புளிச்ச கீரை இழந்த ருசியை உணரவைக்கும். மஞ்சள் காமாலைக்கு ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சகீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகிவர மஞ்சள் காமாலை குணமடையும். காசநோய் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தும் தன்மை இந்த கீரைக்கு இருப்பதால், இந்த கீரையை உடலையும் குடலையும் குணமாக்கும் கீரை என்கின்றனர். புளிச்ச கீரையின் கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும். குறிப்பு : இந்த கீரை பித்தத்தை அதிகப்படுத்தும் தன்மையுடையது என்பதால் பித்தம் அதிகமாக உள்ளவர்கள் இந்த கீரையை தவிர்ப்பது நல்லது. |
|||||
by Swathi on 13 Nov 2013 8 Comments | |||||
Tags: புளிச்ச கீரை கோங்குரா காசினிக் கீரை Pulicha Keerai புளிச்ச கீரை பயன்கள் Pulicha Keerai Benefits Gongura | |||||
Disclaimer: |
|||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|