LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி என்பது எதற்கு? -டாக்டர் பொன்முடி வடிவேல்

   

தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி  என்பது எதற்கு?

                                                                         -டாக்டர் பொன்முடி வடிவேல் 

 

இக்காலத்தில் தமிழறிஞர்யாவரும் புணர்ச்சியை ஓOOர் இலக்கணமென்றுமட்டுமேபார்க்கின்-றனர். உரைநடையில் அதன் பயன்பாடு எத்தகையதென்பதையும் அதனை சரியாகப்பயன்படுத்-துவது எப்படியென்பதையும் தமிழில் உரைநடையென்பது எழுதப்பட்டகாலத்திலிருந்தே எவரும் சரியாக அறிந்திருக்கவில்லை. அந்த இலக்கணத்தில் அவர்கள் நினைவில்வைத்திருப்பதெல்-லாம் என்னவென்றால், எங்கெல்லாம் வலி  மிகுமென்பதும் எங்கெல்லாம் மகரவீறு கெடுமென்-பதுந்தான்!

 

         மகரவீறு  கெடுமிடங்களிலெல்லாம் கெடுத்துவிடுவார்களேயன்றி அந்த நிலைமொழியை வருமொழியோடு புணர்த்துவார்களாவென்றால் புணர்த்தமாட்டார்கள்! ‘சங்ககால இலக்கியம்” என்றெழுதுவார்கள். இதில் மகரவீறு கெட்டிருப்பதைப்பார்த்தால் புணர்ச்சி நடந்திருப்பதைப்-போலிருக்கிறது, ஆனால் வருமொழியானது உயிர்முதன்மொழியாயிருப்பதைப்பார்த்தால், அது புணராதுநிற்பதைப்போலிருக்கிறது. இப்போது, ஒருவர் இதில் புணர்ச்சி இருக்கிறதென்பாரா இல்லையென்பாரா? நீங்களும் எண்ணிப்பாருங்களேன்?

 

       இதைப்போலவே,  வலிமிகுந்துபுணருமிடங்களிலெல்லாம் வலிமிகுத்துவிடுவார்கள், ஆனால் மிகுந்த வலியை நிலைமொழியோடுவிட்டுவிட்டு, வருமொழியை தனியேயெழுதியிருப்பார்கள். இதிலும் புணர்ச்சி நடைபெற்றிருக்கிறதா, இல்லையாவென்பது உறுதியாகச்சொல்லமுடியாத-தாகவேயிருக்கும்.  ‘பனிக்  காலம்’  என்பதில்  புணர்ச்சி இருக்கிறதென்றால்,  நிலைமொழியும் வருமொழியும் தனித்தனியேநிற்பதேனென்பதற்குவிடையில்லை,  இல்லையென்றாலோ,  வலி மிகுந்திருப்பதேனென்பதற்குவிடையில்லாமற்போகிறது. என்னசெய்வது?  

 

   இதில் மூன்றாவதாக இன்னொருவினாவுமெழுகிறது.  அதாவது, தமிழ்மொழிக்குள்ள  இலக்கணத்தின்படி, எந்தவொருசொல்லுக்கும் வல்லினமெய்யானது ஈற்றெழுத்தாய்நிற்பதற்கு தகுதியற்றது. இந்த கருத்தை மறுக்கக்கூடிய தமிழறிஞர் எவருமிலர். அவ்வாறிருக்க, ‘பனிக்’  என்பதில் ஒரு வல்லினமெய் அந்த சொல்லுக்கு ஈற்றெழுத்தானதெவ்வாறென்றால், இன்றைய தமிழறிஞரெல்லாம் அப்படியெழுதுவதுதான் இப்போது வழக்கத்திலுள்ளதென்றும் அதில் பிழையேதுமில்லையென்றும் விளக்கமளிக்கின்றனர்! இவர்களெல்லாம் தமிழ்மொழியின் இனிமையை கெடுக்காமல்விடமாட்டார்கள்!

 

   இதுவரை நாம் பார்த்த இரண்டும் தோன்றல் கெடுதல் ஆகிய விகாரப்புணர்ச்-
சிகள். திரிதற்புணர்ச்சியைப்பொருத்தவரை, என்னென்னதிரிபுகளுள்ளனவோ அனைத்துத்-திரிபுகளும் செய்யப்பட்டாலும், புணர்ச்சியிருப்பதில்லை!

 

   தமிழ்நாடுமுழுவதிலும்,  ‘பயணிகள் நிழற் குடை’ என்றிருப்பதை பேருந்துநிறுத்தங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதில் ’நிழல்’ என்பது ‘நிழற்’ என்று மாற்றப்பட்டிருந்தும் தனித்தேநிற்பதைப்பாருங்கள்!

 

    ’பரிதிமால்’ என்ற சொல் சூரியனையும் திருமாலையுங்குறிக்கும். வடமொழிச்சொல்லான ‘நாறாயணன்’ என்பதற்கிணையான தமிழ்ச்சொல்லுக்கு ‘மால்’ என்றுவைத்துக்கொண்டார்,    சூரியநாறாயணசாஸ்திரியார். ‘சாஸ்திரி’  என்றசொல்லுக்கு ’கலைஞர்’  என்றசொல்லைக்- கொண்டு  தம்முடைய பெயரை ‘பரிதிமாற்கலைஞர்’ என்றெழுதினார், அந்த தமிழ்மொழிப்-பற்றாளர். இன்றிருப்போர், தமிழறிஞர்களென்று தம்மை சொல்லிக்கொள்வோர் அந்த பெயரை ‘பரிதிமாற் கலைஞர்’ என்றெழுதிமகிழ்கின்றனர்! இதிலும் வல்லொற்று சொல்லின் ஈற்றெழுத்-தாய்நிற்பது எண்ணிப்பார்க்கத்தக்கது. ஆனால் அதுபற்றியெல்லாம் இவர்களுக்கு கவலையே-யில்லை! ‘மால்’  என்றிருக்கவேண்டியது ஏன் ‘மாற்’ என்றானதென்றுமட்டும் இவர்களுக்கு நன்றாகத்தெரியும்!

 

   ’உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ எனும்விதிப்படி சொற்கள் புணர்வ-துண்டன்றோ? இந்த புணர்ச்சியை இக்காலத்தில் காணவேமுடிவதில்லை!

 

   தமிழிலக்கணம்’ என்றிருக்கவேண்டியவிடங்களிலெல்லாம், ‘தமிழ் இலக்கணம்’ என்றெழுதி-வருகிறார்கள்! இது நான்காம்வேற்றுமையின் தொகைநிலைத்தொடரென்பதை இவர்கள் மறந்துவிட்டனர்போலும்! தொகைநிலைத்தொடரை பிரித்தால் பொருளில் குழப்பம்வருமென்பது இக்காலத்தறிஞர்கள் இன்னும் அறியாததாயிருக்கிறது.

 

   ’தமிழிலக்கணத்தை கற்கவேண்டும்’ என்றெழுதினால், தமிழுக்கான இலக்கணத்தை ஒருவன் கற்கவேண்டுமென்பதே பொருளாகும். ஆனால், ’தமிழ் இலக்கணத்தை கற்கவேண்டும்’ என்றெழுதினால்? இதற்கென்னபொருளென்றால், இலக்கணத்தை தமிழ்தான்கற்கவேண்டுமென்ப-தாகும்! தமிழ் என்பது ஒருவருடைய பெயராய்வைத்துக்கொண்டால், அவர் கற்கவேண்டியது எந்தமொழியினுடையவிலககணத்தையென்பது இதில் சொல்லப்படாததாயிருக்கிறது.

 

   இவ்வாறு, ஒரு தொடர்மொழியை பிரித்தால் பொருள் மாறுபடுகிறதென்பதை அறியாத-வராயிருப்பதாலேயே இக்காலத்துத்தமிழறிஞர்கள் ‘தமிழ் இலக்கணம்’ என்றெழுதுகிறார்க-ளென்பது தெற்றெனவிளங்குகிறதன்றோ? இதில் இதைவிடக்கொடுமையானதென்னவென்றால், சில தமிழறிஞர்கள் தொகைநிலைத்தொடர்மொழிகளை பிரித்தெழுதுவதில் குற்றமேதுமில்லை-யென்று வாதிட்டுக்கொண்டிருப்பதுதான்! அவர்களும் தங்களை தமிழறிஞர்களென்றுசொல்லிக்-கொள்வதில் பெருமைப்பட்டுக்கொண்டுதானிருக்கின்றனர்.

 

   இக்காலத்தில், எல்லாவேற்றுமைத்தொகைகளையும் பிரித்தேதானெழுதுகிறார்கள். அதுமட்-டுமன்றி, உருபும் பயனும் உடன்றொக்கத்தொகைகளைக்கூடப்பிரித்துவிடுகிறார்கள். மொத்தத்-தில், புணர்ச்சியென்பது இன்று காணாமற்போய்விட்டதென்றுசொல்வது சாலப்பொருந்தும்!

 

   உடம்படுமெய்ப்புணர்ச்சியென்பது ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டவொன்று! அதை காணவே-முடியாது. இதனோடு, எழுவாய்த்தொடரென்பதையும் இக்காலத்தில் எந்தநூலிலும் அறவே-
காணமுடியாது. அப்படியொரு தொடர் இருக்கிறதென்பதையும் அதை பயன்படுத்தவேண்டியது தேவையானதாகவுமிருக்குமென்பதையும் தமிழறிஞர்கள் அறவேமறந்துவிட்டனர்.

 

   எந்தவொருநூலிலாவது எழுவாய்த்தொடரென்பது இன்று எழுதப்பட்டிருக்கிறதா, நீங்கள் கற்றநூற்களிலோ படித்தநூற்களிலோ அதை பார்த்திருக்கிறீர்களாவென்று இன்றிருக்கின்ற தமிழறிஞர்களில் யாரைக்கேட்டாலும் இல்லையென்றேசொல்வர்!

 

   ஒரு குழந்தைகூட, ‘ஒங்க வீட்டுக்கு யார்வந்திருக்காங்க?’ என்றுகேட்டால், ‘எங்க மாமா-வந்திருக்காங்க’ என்றுசொல்லும். ‘மாமாவந்திருக்காங்க’ என்ற இந்த தொடர்மொழியை குழந்தைகூடப்பிரித்துப்பேசாது! அதாவது ‘மாமா வந்திருக்காங்க’ என்றுசொல்லாது.

 

   ’மாமாவந்திருக்காங்க’ என்பதில் ’மாமா’ என்பது எழுவாய், ’வந்திருக்காங்க’  என்பது பயனிலை, அன்றோ? இவ்வாறு, ஒரு எழுவாயும் அதனுடைய பயனிலையும் ஒன்றாய்ச்-சேர்ந்திருந்தால், இலக்கணம் அதை ‘எழுவாய்த்தொடர்’  என்கிறது.

 

   ஒரு வினையெச்சம் ஒரு தொடர்மொழிக்கு நிலைமொழியானால் அந்த தொடர்மொழியை வினையெச்சத்தொடரென்பதும் ஒரு பெயரெச்சமானதுநிலைமொழியானால் பெயரெச்சத்தொட-ரென்பதும்போல, எழுவாய்நிலைமொழியாய்நின்ற இந்தத்தொடர்மொழியானது எழுவாய்த்-தொடரெனப்பட்டது.

 

   இலக்கணத்தில் தொடர்மொழிகள் இருபத்தாறுவகைப்படுமென்றுதந்து, ஒவ்வொன்றும் வரிசையாகவிளக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதலாவதாகநிற்பது இந்த எழுவாய்த்தொடரே!

 

   எல்லாத்தொடர்மொழிகளுமே பிரித்தெழுதப்படுகிறபோது இந்த எழுவாய்த்தொடரைமட்டுந்-தானா மறக்காமல் சேர்த்தெழுதிவிடப்போகின்றனர்? அதனால் அது காணாமற்போய்விட்டது!

 

   விகாரப்புணர்ச்சியுள்ளவிடங்களில் புணர்ச்சிக்கடையாளமாக விகாரங்களைமட்டுமாவது இவர்கள் செய்துவிடுவதால், அங்கெல்லாம் புணர்ச்சி இருக்கிறதென்று எண்ணிக்கொள்வதற்-காவதுவாய்ப்புண்டு. ஆனால், இயல்புபுணர்ச்சியுள்ளவிடங்களிலோ, இவர்கள் புணர்த்தியுமெ-ழுதுவதில்லை, அவற்றில் விகாரமுமில்லையாதலால், புணர்ச்சி காணாமற்போய்விடுகிறது.

 

   எழுவாய்த்தொடரிலும் இரண்டாம்வேற்றுமைத்தொகையிலும் உயிர்முன் கசதபவந்தாலும் வலிமிகாமலேபுணரும். விகாரப்படுஞ்சொற்களையே சேர்த்தெழுதாமல் இவர்கள் பிரித்தெழுதிக்-கொண்டிருக்கும்போது, இயல்புபுணர்ச்சியில் சொற்களை சேர்த்தெழுதுவார்களென்பது எதிர்-பார்க்கமுடியாதது. ஆதலால், இரண்டாம்வேற்றுமைத்தொகை இன்று அரிதாகிவிட்டது!

 

   சொற்கள்  பொருளுக்கு பொருந்தாவண்ணம் தனித்தனியேநின்றாலும், புணர்ச்சி காணாமலே-போயிருந்தாலும், சொல்லவந்தபொருளை சரியாகப்புரிந்துகொள்வதில் இன்றிருக்கும் இந்தத்-தமிழரைப்போல், தமிழ்மொழியின் வரலாற்றில் எந்தக்காலத்திலும் தமிழர் இருந்திருக்க-முடியாது! காட்டாக, ’அவள் ஒரு பெண் குழந்தை பெற்றாள்’  என்றெழுதியிருந்தால், பொருளை சரியாகப்புரிந்துகொண்டு, ‘அவள் ஒரு பெண்குழந்தைபெற்றாள்’ என்றுபடித்துவிடுவார்கள். 

 

   எழுதப்பட்டிருப்பதை அப்படியேபடித்தால் அதில் பொருளேயில்லையென்பதை கற்றோரறிவர். ‘அவள் ஒரு பெண்’ என்பதுடன் பொருள் நிறைவுபெற்றுவிடுவதைப்பாருங்கள்!   குழந்தை’ என்பது தனித்துநிற்பதால் அதை தனிவாக்கியமாகத்தான்பார்க்கவேண்டும். ‘குழந்தை பெற்றாள்’ என்பது ஒரு குழந்தை எதையோ பெற்றாளென்பதைச்சொல்கிறது.

 

   இப்படி இரண்டுவாக்கியங்களாகப்பார்த்தாலும் ஏதோ பொருளென்று ஒன்றை கொள்ள-முடிகிறது. ஆனால் நான்குசொற்களையும் ஒரேவாக்கியமாகப்பார்த்தால், குழப்பந்தான்மிஞ்சும்.

 

       ‘பெண்குழந்தை’ என்று இந்த இரண்டுசொற்களையும் சேர்த்தெழுதினால், அது இருபெய-ரொட்டுப்பண்புத்தொகையாகப்பொருளாகும். எவ்வாறெனில், குழந்தையென்பது பொதுப்பெயர், பெண்ணென்பது சிறப்புப்பெயர். ஆக, சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னுமாயமை-யுந்தொடர்மொழியானது இருபெயரொட்டுப்பண்புத்தொகைதானே? இதன் பொருளென்னவென்-றால், ’பெண்ணாகியகுழந்தை’ என்பதாகும். ‘ஆகிய’ என்ற பண்புருபு இதில் மறைந்ததால் பண்புத்தொகையாயிற்று. இரண்டு பெயர்ச்சொற்கள் ஒட்டிநின்றதால் இருபெயரொட்டாயிற்று.

   அடுத்து, ‘குழந்தைபெற்றாள்’ என்று சேர்த்தெழுதினால் இது இரண்டாம்வேற்றுமையின் தொகைநிலைத்தொடராகும். அதாவது, ‘குழந்தையைப்பெற்றாள்’ என்றிருக்கவேண்டியதிலுள்ள ‘ஐ’ என்னும் இரண்டாம்வேற்றுமையின் உருபானது மறைந்திருப்பதாகப்பொருள். ஆனால், அந்த தொடர்மொழியை பிரித்து ‘குழந்தை பெற்றாள்’ என்றெழுதினால், அப்படியாகாது.  பெற்றவள் குழந்தையென்றாகிவிடும்! அதாவது ’பெற்றாள்’ என்ற வினைமுற்றுக்கு ‘குழந்தை’ என்பது எழுவாயாகிவிடும்!     பெற்றவள்     குழந்தையா,    அன்னையா?     எப்படிவருகிறதுபாருங்கள்!

 

        இப்போதுசொல்லுங்கள், ’அவள் ஒரு பெண் குழந்தை பெற்றாள்’  என்பதில்பொருள் விளங்க-வில்லையன்றோ? ஆனால் அதையே, ’அவள் ஒரு பெண்குழந்தைபெற்றாள்’ என்றெழுதினால், பொருள் தெளிவாயிருக்கிறதுபாருங்கள்! இதுதான் புணர்ச்சியின் பயன்பாடு.

 

   இன்றையதமிழர்களோ, ’அவள் ஒரு பெண் குழந்தை பெற்றாள்’ என்றெழுதப்பட்டிருப்பதை, ’அவள் ஒரு பெண்குழந்தைபெற்றாள்’ என்று சரியாகப்படித்துவிடுகிறார்கள்! இது விந்தை-யாயில்லை? புணர்ச்சியை அறிந்திருந்தால் புணராதசொற்களை புணர்த்திப்படிக்கமாட்டார்கள்!

   இப்படியெல்லாமெழுதுபவர்கள் ஏதோ கதையெழுதுகின்ற எழுத்தாளர்களென்றுசொன்னால் அதை மன்னிக்கலாம். ஏனெனில் அவர்கள் தமிழில் பட்டம்பெறாதவர்களாகக்கூடவிருக்கலாம்.
ஆனால் தமிழில் பற்பல பட்டங்களைப்பெற்றிருப்பதுடன், தமிழுலகத்தால் தமிழறிஞரென்று போற்றப்படுபவரெல்லாங்கூட இவ்வாறேயெழுதுகிறார்கள்!

 

   அவர்களில் சிலர், தமிழ்மொழியின் இலக்கணம்பற்றி நூலெழுதியிருக்கிறார்கள். அந்த நூற்களில், ‘தமிழ் இலக்கணம்’  என்றெழுதுகிறார்கள்! இது பிழை. இதனை ஒரு தொடர்-மொழியாக, ‘தமிழிலக்கணம்’ என்றுதானெழுதவேண்டும். ஏனெனில், ‘தமிழுக்கு இலக்கணம்’ என்பது தொடர்மொழியானால்,  ‘தமிழுக்கிலக்கணம்’ என்றாகும். இதிலுள்ள ’கு’ என்னும்

 

நான்காம்வேற்றுமையின் உருபை மறைத்தால், அதாவது தொகையாக்கினால் அது ‘தமிழிலக்கணம்’  என்றாகும். இதுபற்றி முன்புபார்த்ததை மீண்டும் எண்ணிப்பாருங்கள்.

 

   ’தமிழிலக்கணம்’ என்றெழுதினால்,  ‘தமிழுக்கிலக்கணம்’ என்றுபொருள்வரும். ஆனால், ‘தமிழ் இலக்கணம்’  என்றெழுதினால் அது அந்தப்பொருளைத்தராது! ‘தமிழ்தான் இலக்கணம்’ என்றபொருளையேதரும்! எனவே, ‘தமிழ் இலக்கணம்’ என்பது பிழையென்பதை உங்களால் அறிந்துகொள்ளமுடிகிறதன்றோ? இதை இந்த தமிழறிஞர்கள் அறியாமலிருப்பது விந்தை!

   சென்னையிலுள்ள தரமணியில், ‘உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம்’ என்று ஒரு ஆராய்ச்சிநிறு-வனமுள்ளது. இந்த நிறுவனம், ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்’ என்றுதான் தன்னுடைய பெயரை எழுதிவைத்திருக்கிறது.

 

   இதில் ‘த்’ என்பது புணர்ச்சியால்வந்தது. அங்கே பிரித்தது முதற்குற்றம். அடுத்தது, ’தமிழாராய்ச்சிக்கு நிறுவனம்’ என்றிருக்கவேண்டியதுதான் தொகைநிலைப்படுத்தப்பட்டதால் தன் ‘கு’ என்ற உருபை இழந்திருக்கிறது. தொகைநிலைத்தொடரை பிரித்தால் பொருள் மாறிவிடுமென்பதை சற்றுமுன் பார்த்தோமன்றோ? அதனால், ’தமிழாராய்ச்சிநிறுவனம்’  என்றவாறு, இந்த சொற்களை சேர்த்தேயெழுதியிருக்கவேண்டும். இது இரண்டாவது குற்றம்.

 

   இந்த நிறுவனத்தின் பெயரிலேயே இரண்டுகுற்றங்கள்! இந்த நிறுவனம் தொல்காப்பியம்’
என்ற இலக்கணநூலை’’ ‘கணேசையர்பதிப்பு’ என்று வெளியிட்டுள்ளது. அதில், அட்டையிலேயே ‘எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்’ என்றுதந்திருக்கிறது!

   இதில், ‘எழுத்ததிகார’ என்றசொல் தனிச்சொல்லன்று. இது, ‘எழுத்ததிகாரம்’  என்றசொல்லி-லிருக்கும் இறுதியெழுத்தான ‘ம்’ என்பது நீங்கியதால்வந்தது. இதை, ‘மகரவீறுகெட்டுப்புணர்தல்’ என்கிறது, புணர்ச்சியிலக்கணம்.

 

   எடுத்துக்காட்டாக, நாம் ‘மரப்பட்டை’ என்றுசொல்கிறோமன்றோ? இது, எப்படிவந்ததென்றால், மரம் + பட்டை =  மர + பட்டை (ம் கெட்டது) = மரப்பட்டை (வலிமிகுந்தது) என்றேவந்தது.
இலக்கணவிளக்கத்தைப்பார்த்தால் ‘மரத்தினுடைய பட்டை’ என்றிருக்கவேண்டியது, அதிலுள்ள அத்து, இன், உடைய ஆகியவற்றை இழந்ததால் ‘மரப்பட்டை’ என்றாகியிருக்கிறது. இவற்றுள் ’அத்து’  என்பது, ’இன்’ என்ற சாரியை ‘மர’ என்பதுடன் புணர்வதற்கேதுவாய் அவையிரண்டிற்கும் நடுவில்வந்தது. ‘அத்து’ என்பதும் ஒரு சாரியையேயாகும். ’உடைய’ என்பது ஆறாம்வேற்றுமைக்கான சொல்லுருபு. இந்த உருபை மறைக்கும்போது, அத்து  இன் ஆகியவையும் சேர்ந்தேமறைந்துபோகும். ஆக, இது ஒரு தொகைநிலைத்தொடர்மொழியாகும்.

   இப்படியாகவந்த இந்த ‘மரப்பட்டை’ என்பதனை நாம் ‘மர பட்டை’  என்று பிரித்-
தெழுதலாமோ? அதேபோல், ‘எழுத்ததிகாரத்தினுடைய மூலம்’  என்பதன் தொகைநிலைத்-தொடர்தான்  ‘எழுத்ததிகாரமூலம்’ என்பது. இதனை என்னவென்றறிந்து சரியாகவெழுதக்கூடிய- வராகிய தமிழாராய்ச்சிநிறுவனத்தாரே, ‘எழுத்ததிகார மூலம்’ என்று பிரித்தெழுதியிருப்பது எதைக்காட்டுகிறது? இவர்களும் புணர்ச்சியை புறக்கணித்துவிட்டார்களென்பதைத்தானே?

 

   அதேபோன்று, ‘நச்சினார்க்கினியருடைய உரை’ என்பதில் அதே ஆறாம்வேற்றுமையின் ’உடைய’ என்ற சொல்லுருபு மறையுமானால், ‘நச்சினார்க்கினியருரை’ என்றுதானிருக்க-வேண்டுமென்பது நமக்கு இப்போது தெளிவாகத்தெரிகிறது. ஆனால் இந்த நூலை அதுவும் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கணநூலையெழுதியோருக்கு இது விளங்காமற்போனதெவ்-வாறென்பது புரியாத புதிராகத்தானேயிருக்கிறது?

 

   தமிழ்ப்பல்கலைக்கழகம், தன் பெயரை ‘தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்’ என்றெழுதியி-ருக்கிறது. இப்படியெழுதுவதற்கு ஒரு பல்கலைகழகம் தேவையா? அங்கு பணியாற்றும் தமிழறிஞர்கள் இப்படி எழுதுவதை சரியென்றுதானேநினைத்துகொண்டிருக்கிறார்கள்?

 

   சில அறிஞர்களுடைய இலக்கணநூற்களில் ‘தமிழ் இலக்கணம்’ என்றிருக்கிறதென்று சற்று-முன் கண்டோமல்லவா? அந்நூற்கள் தனிநூற்கள். ஆனால் பாடநூற்களில், அதுவும் இலக்கண-நூற்களில் ‘தமிழ் இலக்கணம்’  என்றுதான்காணப்படுகிறது!

 

   இருபெயரொட்டுப்பண்புத்தொகையென்றால் என்னவென்பது இப்போது உங்களுக்கு தெரியும். ‘தமிழ்மொழி’ என்பதிலும் சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும்நின்று இரண்டும் ஒட்டிநிற்பதைப்பாருங்கள். இதுவும் ஒரு தொடர்மொழியென்பதை உங்களுக்கு சொல்லத்-தேவையில்லை. இதைக்கூட இக்காலத்தில், ‘தமிழ் மொழி’ என்று பிரித்துத்தானெழுதுகிறார்கள்! தொகைநிலைத்தொடரை பிரிக்கலாமா?

 

            ‘தமிழ்மொழியை கற்கவேண்டும்’ என்பதும்

        ‘தமிழ் மொழியை கற்கவேண்டும்’ என்பதும்

 

   எவ்வளவிற்கு வேறுபட்டபொருளைத்தருகின்றனபாருங்கள்! இரண்டாவதில் தமிழ் ஏதோ-வொருமொழியை கற்கவேண்டுமென்பதுபோலில்லை? தமிழ் கற்குமா? இதையெல்லாம் தமிழறிஞர்கள் எப்படி அறியாமலிருக்கிறார்கள்?

 

   புணர்ச்சியும் பொருள்வேறுபாடும்பற்றி சில செய்திகளை இங்கே காண்போம். ஒரு தொடர்-மொழியையோ தனிமொழியையே நாம் பேசும்போது, பொதுவாக அதனுடைய முதலைசையை அழுத்திப்பேசுவது இயல்பு. இதைப்பாருங்கள்:

 

                        ’வா ஒரு டீகுடிச்சிட்டுப்போலாம்’

                        ’போய் ஒரு வாழப்பழம்வாங்கிக்கிட்டுவா’

 

       இவற்றில், ’டீகுடிச்சிட்டுப்போலாம்’ என்பதும் ’வாழப்பழம்வாங்கிக்கிட்டுவா’ என்பதும் தொடர்மொழிகள். இந்த இரண்டுதொடர்மொழிகளும் எப்படிப்பேசப்படுமென்பது உங்களுக்கு தெரிந்ததுதான். நீங்கள் இதை நீங்களேபேசுவதுபோல் பேசிப்பார்த்தீர்களானால், ‘டீ’ என்பதிலும் வா’ என்பதிலும் அழுத்தம் மிகுதியாயிருப்பதை உங்களால் உணரமுடியும். இதுபோல் நாம் சேர்த்துப்பேசுகின்ற பிறவற்றையும் பேசிப்பார்த்துக்கொள்ளுங்கள்.

 

 

   இப்படி பேசிப்பார்த்தால் ஓரளவிற்கு புரிந்துகொள்ளலாமென்றாலும், உணர்ச்சிபொங்கப்-பேசும்போது இது நன்றாகவெளிப்படும். “எங்களோடு வயலுக்குவந்தாயா...” என்ற கட்டபொம்-மன்வசனத்தை மனத்தில் எண்ணிப்பாருங்கள்!

 

   ’வயலுக்குவந்தாயா?’  என்ற இந்த தொடர்மொழியில், ‘வய’  என்ற முதலசை அழுத்திப்-பேசப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் இதையே, ’வயலுக்கு வந்தாயா?’ என்று பிரித்துவிட்டால், முதற்சொல்லின் ‘வய’ என்பதற்கு எவ்வளவிற்கழுத்தமிருந்ததோ, அதேயளவிற்கு இரண்டாவதுசொல்லின் ‘வந்’ என்பதற்கும்வந்துவிடும்! ‘வந்தாயா’ என்றசொல் வருமொழியாயிருந்தபோது அழுத்தமேதுமில்லாமலிருந்தது, அது தனிமொழியானவுடன் அதன் முதலசைக்கு அழுத்தம் வந்துவிட்டது! இதுதான் தமிழை நாம் பேசுகின்ற மரபாகும்.

 

   இதிலிருந்து என்னதெரிகிறதென்றால், நாம் பேசும்போது தொடர்மொழிகளை தொடர்ந்தும் தனிமொழிகளை தனித்தும்பேசுகிறோமென்பதுதான். அதுமட்டுமன்றி அவற்றின் முதலசைகளை அழுத்திப்பேசுகிறோமென்பதும் நாம் அறிந்துகொள்ளத்தக்கதாகும்.

 

   ‘நாங்கள் மாங்காயைப்பறித்துத்தின்னவில்லை’  என்பதற்கு பொருளென்ன? ‘நாங்கள் ஒரு காயை தின்றதென்னவோ உண்மை, ஆனல் அது மாங்காயில்லை, கொய்யாக்காய்.’ என்பதாக, ‘நாங்கள் மாங்கயைப்பறித்துத்தின்னவில்லை, கொய்யாக்காயைத்தான்பறித்துத்தின்றோம்’ என்றுபோகிறது, இதன் பொருள்.

 

   இதையே,

                    ‘நாங்கள் மாங்கயை பறித்துத்தின்னவில்லை’  என்றால்?

 

   ‘மாங்காயைப்பறித்துத்தின்னவில்லை’         என்றிருந்தபோது, ‘மாங்’ என்ற அந்த தொடரின் முதலசைமட்டும் அழுத்திப்பேசப்பட்டிருக்கும். மற்றவை அழுத்தமின்றிவந்திருக்கும். இப்போது, ‘பறித்துத்தின்னவில்லை என்பது பிரிந்துவிட்டதால், இதனுடையமுதலசையான ‘பறி’ என்பது-மழுத்திப்பேசப்படுகிறது. இதனால், பொருளானது ‘பறித்து’ என்பதற்குமிகுதியாகிவிடுகிறது!

 

           ‘மாங்காயைப்பறித்துத்தின்னவில்லை’ என்றிருந்தபோது, ‘மாங்காயை’ என்பதற்குப்பொருட்-சிறப்பிருந்ததால், ‘மாங்காயைத்தின்னவில்லை’ என்றபொருளைவற்புறுத்தியது. இப்போது ‘மாங்காய்’ தனியாகநிற்க, ‘பறித்துத்தின்னவில்லை’ என்பதில் ‘பறித்து’ என்பது சிறப்புப்-பொருளானதால் ‘பறித்துத்தின்னவில்லை, கீழேகிடந்தை எடுத்துத்தின்றோம்’ என்பதுபோலாகி-விடுகிறது!          

 

”’  ‘மாங்காயை’ என்பது சேர்ந்திருந்தபோது தின்றது மாங்காயேயில்லையென்றிருந்த அதனு-டைய பொருளானது, அது பிரிந்தவுடன், தின்றது மாங்காயைத்தானென்றாகிவிட்டதுபாருங்கள்!

 

    இரண்டிலும் ‘தின்னவில்லை’ என்றேமுடிந்தாலும், தின்றதாகத்தானேபொருளாகிறது? இப்போதுபாருங்கள், தின்னவில்லையென்றேயாவதை:

 

   ‘நாங்கள் மாங்காயை பறித்து தின்னவில்லை’ இதில் தின்னவில்லையென்பதுதான்பொருள். அவர்கள் பறித்தார்களென்பதும் பறித்தது மாங்காயையென்பதும் உறுதியாகிவிட்டது!

 

      மூன்று சொற்கள் வெவ்வேறாகப்புணர்ந்தபோது அந்த புணர்ச்சி எவ்வாறமைகிறதோ அதற்கேற்றவாறு அந்த வாக்கியத்தின் பொருளில் மாற்றமுண்டாகிறதென்பதும், நாம் பேசும்போது சில சொற்களுக்கு அழுத்தங்கொடுத்துப்பேசுவது புணர்ச்சியைப்பொருத்ததேயென்பதும் நாம் அறிந்துகொள்ளத்தக்கதன்றோ?

 

       பேச்சுத்தமிழென்பது குழந்தைகளுக்கும்பொதுவானதென்பதால், சொற்களை புணர்த்திப்-பேசுவதாலும் பிரித்துப்பேசுவதாலும் பொருள் மாறுபட்டிருக்குமென்பதையும் அந்த மாறுபாடு எத்தகையதென்பதையும்     அவர்களுங்கூட     அறிந்தேபேசுவார்கள்!     எடுத்துக்காட்டாக,

 

    ‘இது எங்கவீட்டுலசெஞ்சதில்ல, எங்க மாமாவீட்டுலசெஞ்சது’ என்பார்கள். இதற்கும், அதுபோல், ‘இது எங்க வீட்டுலசெஞ்சதில்ல, கடையிலவாங்கினது’ என்பதற்கும் பொருளில் என்னவேறுபாடிருக்கிறதென்பதை குழந்தைகள் அறிந்தேபேசுவர்.

 

      ‘எங்கவீட்டுலசெஞ்சதில்ல’  என்றுபேசும்போது ‘எங்க’ என்பதிலும் ‘எங்க வீட்டுல’  என்று பிரித்துப்பேசும்போது ‘எங்க’ என்பதில்மட்டுமன்றி, ‘வீட்டுல’ என்பதிலுமழுத்தங்கொடுத்துப்பேசு-வார்கள். எப்படிப்பேசினால் என்னபொருள்வருமென்பதை அவர்கள் அறிந்தேபேசுகிறார்கள்.

 

   கற்றோருங்கூட, பேசுகின்றபோது சரியாகத்தான்பேசுவார்கள். தொடர்மொழிகளையல்லாங்-கூட மிகவும் சரியாகப்பேசுவார்கள். குழந்தைகளேபேசும்போது அவர்களுக்கென்ன, அவர்களும் நன்றாகத்தானேபேசுவார்கள்? கல்லாதவருங்கூட, புணர்ச்சிக்கேற்ற ஏற்றவிறக்கங்களுடன் மிகவும் சரியாகவேபேசுவர். அவர்களுடைய உரையாடைலை உற்றுக்கேட்டால், புணர்ச்சியின் பயன்பாட்டை நன்றாயறிந்துகொள்ளலாம்.

 

   ஆனால் கற்றோரெல்லாம் புணர்ச்சியின் பயன்பாட்டை மறந்துவிட்டு மனம்போனபடியெல்-லாமெழுதிக்கொண்டிருக்கிறார்கள்! எழுதும்போது புணர்ச்சியை இவர்கள் கொன்றுவிடுவார்கள்.

 

   உணர்ச்சியையும் பொருளையும் குறையின்றிவெளிப்படுத்தக்கூடிய தமிழ்மொழியின் இயல்பானநடையை எழுத்தில் வெளிப்படுத்துவதற்கு பெரிதும் தேவையானதான இந்த புணர்ச்சியை புறக்கணித்தால், எழுதும்போது நம்மால் தெளிவானபொருளை காட்டமுடியாமற்- போய்விடும். இன்றைய தமிழ் அப்படித்தானிருக்கிறதென்பதை அறியாமல் நாமெல்லாம் புணர்ச்சிக்கேற்றவாறு நாமேபுணர்த்திப்படித்துக்கொண்டிருக்கிறோம்.

 

        தமிழ்மொழியின் இயல்பானநடை அழிந்துவிட்டது! இப்போது அதற்கென வரையறுக்கப்பட்ட-தான ஒரு நடை இல்லவேயில்லை! ஒருவர் சேர்த்ததை வேறொருவர் பிரிப்பார். தேவையற்ற-விடங்களிலுங்கூட சேர்த்தெழுதிவிடுவதும் இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது! (எங்கே சேர்த்தெ-ழுதுகிறார்கள்? வலிமிகுத்தெழுதுவார்கள், அவ்வளவுதான். சொற்கள் பிரிந்தேதானிருக்கும்!)

 

   முதல்வகுப்புநூலிலிருந்து முதுகலைத்தமிழ்ப்பாடநூல்வரை அனைத்துநூற்களும் புணர்ச்சிப்-பிழைமிகுந்தனவாகவேகாணப்படுகின்றன. இதுதான் இன்று தமிழின் நிலை.

 

   பாடநூற்களே இப்படி பிழைபட்டிருக்கும்போது, பிறநூற்களைப்பற்றி சொல்லவேவேண்டி-யதில்லை. எனினும் புகழ்பெற்ற ஒரு நூலைப்பற்றி இங்கு சொல்லிவிடுவது நன்றாயிருக்கும். அதாவது, ‘பொன்னியின் செல்வன்’ என்றநூலில், தேவையின்றிப்புணர்த்தப்பட்டிருக்குமிடங்-கள்மட்டும் ஐயாயிரத்துக்குமேல்! தேவையிருந்தும் புணர்த்தாதுவிடுத்தவற்றையுஞ்சேர்த்தால், புணர்ச்சிப்பிழைகள் ஐம்பதினாயிரமுமிருக்கும், அறுபதினாயிரத்தையும் தாண்டும்! ஆனால் இத்தனைப்பிழைகளிருக்கின்றனவென்பதை எவரும் அறியவில்லை. பாடநூற்களிலிருக்கின்ற அத்தனைப்பிழைகளையும் பிழையென்றேயறியாமல் பாடத்தை நடத்திக்கொண்டிருக்கின்ற இந்த தமிழாசிரியர்களுக்கு எதுதான்பிழையென்றுதெரியும்? அந்த நூலில், பொருளை குழப்புகின்ற ஒரு வாக்கியத்தை இதோ, பாருங்கள்;

 

”நான் ஆதித்த கரிகாலனைக் கொல்லவில்லை”

 

   இதில் ‘க்’ இருப்பதால், ‘ஆதித்தகரிகாலனைக்கொல்லவில்லை’ என்றாகிறது. ‘அப்படியானால் வேறுயாரைக்கொன்றாய்?’ என்று ஒரு வினா எழுகிறதுபாருங்கள்! (நாங்கள் மாங்காயைப்-பறித்துத்தின்னவில்லை என்றால் ‘வேறெந்தக்காயைபறித்துத்தின்றாய்?’ என்பது போல)

 

   இதை புணர்த்தாமல், ‘நான் ஆதித்தகரிகாலனை கொல்லவில்லை” என்றெழுதினால், ‘கொல்லவில்லையென்றால் வேறென்னசெய்தாய்?’ என்றவினாவரும்! எப்படித்தானெழுதுவ-தென்கிறீர்களா? ‘ஆதித்தகரிகாலனை நான்கொல்லவில்லை’ என்றுதானெழுதவேண்டும். ‘நீகொல்லவில்லையென்றால் வேறுயாரோதான்கொன்றிருக்கவேண்டும்.’ என்றுவருமன்றோ?

 

   ஓர் எழுவாய்த்தொடரானது எவ்வளவிற்கு இன்றியமையாததாகவிருக்கிறதுபாருங்கள்!

 

   தமிழை காப்பாற்றவேண்டியநிலையில் நாம் இருக்கிறோமென்பதை உங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டுவதற்காகவே இந்த செய்திகளெல்லாம் இங்கு சொல்லப்படுகிறது. இந்த செய்தி-களை நன்கு ஆராய்ந்துபார்த்தால் எல்லாம் உண்மையேயென்பது உங்களுக்கு புலப்படும்.

 

   தமிழை கற்றோரும் கற்பிப்போரும் இந்த உண்மையை உணர்ந்து செயற்பட்டால் தமிழை நாம் மீட்டுவிடமுடியும். இல்லையென்றால் அது அழிந்துபோவதை பார்த்துக்கொண்டிருப்-பதைத்தவிர வேறு வழியேயில்லை.

 

   தமிழகமெங்கும் ‘காவல் நிலையம்’ ‘அஞ்சல் நிலையம்’ ‘பேருந்து நிலையம்’ போன்றவை காணப்படுகின்றன. இவை தொடர்மொழிகளாயெழுதப்படவேண்டியவை. இவற்றை சரியாயெ-ழுதவேண்டுமானல், முதலில் இவை பிழையென்பதை தெரியப்படுத்தவேண்டும். அதை தமிழ்- கற்றோரன்றோசெய்யவேண்டும்? ‘சைவ உணவகம்’ என்றிருக்கும். இது ‘சைவவுணவகம்’ என்றிருக்கவேண்டுமென்பதை உணவுவிடுதிக்காரருக்கும் நாம் அறிவிக்கத்தானேவேண்டும்? தமிழ் எப்படியாவதிருக்கட்டுமென்று விட்டுவிடமுடியுமா?

 

   அவ்வளவேன், ‘தொடக்கப் பள்ளி’  ‘உயர்நிலைப் பள்ளி’  ‘மேனிலைப் பள்ளி’ என்றெல்லாந்-தானேயெழுதுகிறார்கள்? இவற்றையெல்லாம் பிரித்தெழுதக்கூடாதென்பது அந்தந்தப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கெல்லாம் தெரியாதிருப்பதேன்? கல்லூரிகளில் ‘கலைக் கல்லூரி’ என்றெழுதுகிறார்கள்! அங்கெல்லாமிருக்கின்ற தமிழறிஞர்கள் என்னசெய்கிறார்கள்?

 

   எல்லாமிருக்கட்டும், ‘தமிழ்நாடு அரசு’ என்றெழுதப்பட்டிருப்பதை தமிழகமுழுவதும் பார்த்திருப்பீர்கள். பேருந்துகளில், ‘தமிழ்நாடு அரசுப் பேருந்து’ என்றிருக்கும்.

 

   ‘தமிழ்நாடு அரசுப்பேருந்தில் செல்லவேண்டும்’ என்பதற்கு பொருளென்ன?

 

   தமிழ்நாடுசெல்லவேண்டுமென்பதுபோலாகவில்லை? இதையே, ‘தமிழ்நாட்டரசுப்பேருந்தில் செல்லவேண்டும்’ என்றெழுதிப்பாருங்கள்? இப்போதுதானே பொருள் தெளிவாயிருக்கிறது? எனவே, ‘தமிழ்நாடு அரசு’ என்றெழுதுவது பிழையென்பதை நாம் அறிந்துகொள்ளமுடி-கிறதன்றோ?

 

   ‘தமிழ்நாடு அரசு’ என்றெழுதினால், தமிழ்நாடுதான் அரசென்றுபொருளாகும்.

 

   தமிழ்நாடென்பது ஒரு மாநிலம். அது அரசாகாதன்றோ? ஆனால், ‘தமிழ்நாட்டரசு’ என்றெழுதினால், இதை நான்காம்வேற்றுமையின் தொகைநிலைத்தொடராய்க்கொள்ளலாம். தொகைநிலையை விரிநிலையாக்கினால், ‘தமிழ்நாட்டுக்கு அரசு’ என்று சரியானபொருளைத்-தரும்! 

         ‘தமிழ்நாடு அரசு’ என்பது தலைமைச்செயலகத்தில் இன்றுங்காணப்படுகிறது. ‘தமிழ்நாடு’ என்றபெயர் எப்போதுவந்ததோ அப்போதுமுதல் ‘தமிழ்நாடு அரசு’ என்றுதானிருக்கிறது.

 

   இத்தனையாண்டுகளாக, இது பிழையென்பதையும் இதனை நான்காம்வேற்றுமையின் தொகைநிலைத்தொடராகத்தானெழுதவேண்டுமென்பதையும் தமிழ்நாட்டில் இருந்தவர்களும் இருக்கிறவர்களுமாகிய தமிழறிஞர்கள் இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லையே?

 

   மொழிப்பற்றென்றும் நாட்டுப்பற்றென்றுங்கூறுகிறோம். நம் மொழியை ‘தமிழ்மொழி’ என்றும் நம் நாட்டின் அரசை ‘தமிழ்நாட்டரசு’ என்றும் சரியாயெழுதாமல் பிழையாயெழுதிக்கொண்-டிருப்பதுடன் பிழையென்பதை அறியாமலுமிருக்கிறோம்! மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் நமக்கெல்லாம் இல்லையென்றுசொல்லிவிடமுடியாது. ஆனால் நம்முடையமொழியை நாமேபுறக்கணித்துவிட்டோமென்பதை நாம் மறுக்கவுமுடியாது.

 

   இனியாவது புணர்ச்சியை கற்று உணர்வதற்கும் அதை சரியாகப்பயன்படுத்துவதற்கும் நாம் முயல்வோமாக; தமிழ்மொழிக்கு அதனுடைய இயல்பானநடையை மீட்டுத்தருவோமாக!  

 

வாழ்க புணர்ச்சியிலக்கணம், வெல்க தமிழ்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

by Swathi   on 02 Apr 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா
தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி
வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ்
கருத்துகள்
06-Jul-2014 18:31:45 பழமைபேசி said : Report Abuse
மிகவும் பயனுள்ள கட்டுரை. நன்றி!!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.