LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !!

நம் நாட்டில் மிக பெரிய பிரச்சனைகளுள் ஒன்று லஞ்சம். அரசு மருத்துவமனை பியுனில் தொடங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி வரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதமாக இருக்கிறது. லஞ்சத்திற்கு எந்தெந்த நாடுகள் என்ன விதமான தண்டணையை தருகின்றன என்பதை பற்றி இங்கு பார்ப்போமா ..... 


ஐஸ்லாந்து(ஊழல் குறைவான நாடுகளில் முதலிடம்)


இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ்சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். 


எகிப்து: 


இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்தி விடுவார்கள்.


அர்ஜெண்டினா: 


லஞ்சம் வாங்கினால் சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.


செக் குடியரசு: 


சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.


நைஜீரியா :


இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.


இங்கிலாந்து : 


சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.


சீனா : 


கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.


இதெல்லாம் இருக்கட்டும் நம் இந்தியாவில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா?


அரசு அதிகாரி லஞ்சம் வாங்கினால், அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... மன்னிக்கவும் அன்பளிப்பாக வாங்கினால் அபராதம் மட்டுமே.  '!

by Swathi   on 29 Oct 2013  6 Comments
Tags: தண்டனை   ஊழல்   லஞ்சம்   உலக நாடுகள்   Corruption   Punishments     
 தொடர்புடையவை-Related Articles
வருமோ  இப்புதிய   உலகு.. வருமோ இப்புதிய உலகு..
ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை : உச்சநீதி மன்றம் தீர்ப்பு !! ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை : உச்சநீதி மன்றம் தீர்ப்பு !!
லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை !! லஞ்சம் கொடுத்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை !!
விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !! விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !!
அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !! அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !!
லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !! லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !!
ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா?  அது பயன்தருமா? ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா? அது பயன்தருமா?
லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !! லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !!
கருத்துகள்
20-Dec-2014 00:25:32 தேவிகா said : Report Abuse
இது ஒரு நல்ல தண்டனை
 
24-Mar-2014 08:56:17 ARULPRAKASH.A said : Report Abuse
Sothukkalai Parimuthal Seithu... Kaiyai Vetti...Naadu Kadatha Vendum
 
07-Mar-2014 10:39:36 raghavan said : Report Abuse
Good punishment
 
20-Feb-2014 21:42:44 amar said : Report Abuse
குடயுரிமை பரிக்க வேண்டும்
 
11-Jan-2014 11:13:51 ர .suresh said : Report Abuse
லஞ்சம் வாங்குபவர்களுக்கு மரணபயம் காட்டவேண்டும் நம்நாட்டில் நன்றி
 
31-Dec-2013 08:54:34 Ch நமசிவாயம் said : Report Abuse
லஞ்சம் வாங்கியவர்களை மீண்டும் மீண்டும் பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்து, லஞ்சத்திற்கு நம் நாட்டில் பரிசு வழங்குகிறார்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.