LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-13

 

301. அறிந்தோர் யார்?
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
திணை: தும்பை 
துறை : தானை மறம் 
பல் சான்றீரே ! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய,
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே!
முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்; 5
ஒளிறு ஏந்து ,மருப்பின்நும் களிறும் போற்றுமின்!
எனைநாள் தங்கும்நும் போரே, அனைநாள்
எறியர் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால்
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே! 10
பலம் என்று இகழ்தல் ஓம்புமின்! உதுக்காண்
நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி,
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி,
எல்லிடைப் படர்தந் தோனே ; கல்லென
வேந்தூர் யானைக்கு அல்லது, 15
ஏந்துவன் போலான், தன் இலங்கிலை வேலே!  
302. வேலின் அட்ட களிறு?
பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்).
திணை: தும்பை 
துறை : குதிரை மறம் 
வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் 5
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
விண்ணிவர் விசும்பின் மீனும், 10
தண்பெயல் உறையும், உறையாற் றாவே.  
303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!
பாடியவர்: எருமை வெளியனார்
திணை: தும்பை 
துறை : குதிரை மறம் 
நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே; நெருநை, 5
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்,
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப,
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.  
304. எம்முன் தப்பியோன்!
பாடியவர்: அரிசில்கிழார்
திணை: தும்பை 
துறை : குதிரை மறம் 
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே;நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு 5
நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்,
புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று; 10
இரண்டா காது அவன் கூறியது எனவே.  
305. சொல்லோ சிலவே!
பாடியவர்: மதுரை வேளாசான்
திணை: வாகை 
துறை : பார்ப்பன வாகை 
வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,
உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி, 5
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.  
306. ஒண்ணுதல் அரிவை!
பாடியவர்: அள்ளூர் நன் முல்லையார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,
அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் 5
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு,
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.  
307. யாண்டுளன் கொல்லோ!
பாடியவர்: பெயர் புலனாகவில்லை
திணை: தும்பை 
துறை : களிற்றுடனிலை 
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;
வேனல் வரி அணில் வாலத்து அன்ன;
கான ஊகின் கழன்றுகு முதுவீ 5
அரியல் வான்குழல் சுரியல் தங்க,
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு, 10
வெஞ்சின யானை வேந்தனும், இக்களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் எனப்,
பண் கொளற்கு அருமை நோக்கி,
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.  
308. நாணின மடப்பிடி!
பாடியவர்: கோவூர் கிழார்
திணை: வாகை 
துறை : மூதின் முல்லை 
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,
மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எகம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே; 5
வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை
சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக், 10
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.  
309. என்னைகண் அதுவே!
பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
திணை: தும்பை 
துறை : நூழிலாட்டு 
இரும்புமுகம் சிதைய நூறி, ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்லரா உறையும் புற்றம் போலவும்,
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்,
மாற்றருந் துப்பின் மாற்றோர், பாசறை 5
உளன் என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.  
310. உரவோர் மகனே!
பாடியவர்: பொன்முடியார்
திணை: தும்பை 
துறை : நூழிலாட்டு 
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, 5
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.  
311. சால்பு உடையோனே!
பாடியவர்: அவ்வையார்
திணை: தும்பை 
துறை : பாண் பாட்டு 
களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை;
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து,
பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ , செருவத்துச்; 5
சிறப்புடைச் செங்கண் புகைய, வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.  
312. காளைக்குக் கடனே!
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், 5
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.  
313. வேண்டினும் கடவன்!
பாடியவர்: மாங்குடி மருதனார்
திணை: வாகை 
துறை : வல்லான் முல்லை 
அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவன் மாக்கள்
களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ;
உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட 5
கழிமுரி குன்றத்து அற்றே,
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.  
314. மனைக்கு விளக்கு!
பாடியவர்: ஐயூர் முடவனார்
திணை: வாகை 
துறை : வல்லான் முல்லை 
மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை,
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து 5
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே.  
315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை. 
துறை : வல்லான் முல்லை. 
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் 5
கான்றுபடு கனைஎரி போலத்,
தோன்றவும் வல்லன்_ தான் தோன்றுங் காலே.  
316. சீறியாழ் பனையம்!
பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 
கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் 5
இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது, நீயும்;
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்,
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச், 10
சென்று வாய் சிவந்துமேல் வருக_
சிறுகண் யானை வேந்து விழுமுறவே.  
317. யாதுண்டாயினும் கொடுமின்!
பாடியவர்: மவேம்ப்ற்றூர்க் குமரனார்
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 
வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும்,
யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .. .. .. .. 5
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே.  
318. பெடையொடு வதியும்!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 
கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க,
மயில்அம் சாயல் மாஅ யோளொடு
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே_
மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்,
பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான் 5
குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்,
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்
புன்புறப் பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும்_வேந்துவிழு முறினே.  
319. முயல் சுட்டவாயினும் தருவோம்!
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 
பூவற் படுவிற் கூவல் தோண்டிய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி,
யாம் கடு உண்டென, வறிது மாசின்று;
படலை முன்றிற் சிறுதினை உணங்கல் 5
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,
முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி 10
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின்
பாடினி மாலை யணிய,
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. 15
320. கண்ட மனையோள்!
பாடியவர்: வீரை வெளியனார்
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்,
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்,
பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட, 5
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இவ்வழங் காமையின், கல்லென ஒலித்து,
மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி 10
கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாறத்
தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்,
தங்கினை சென்மோ, பாண! தங்காது, 15
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.  
321. வன்புல வைப்பினது!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக், 5
கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்,
வன்புல வைப்பி னதுவே_சென்று
தின்பழம் பசீஇ.. .. .. ..ன்னோ, பாண!
வாள்வடு விளங்கிய சென்னிச்
செருவெங் குருசில் ஓம்பும் ஊரே. 10
322. கண்படை ஈயான்!
பாடியவர்: ஆவூர்கிழார்
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 
உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்,
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்,
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய 5
மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது,
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்,
தண்பணை யாளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே. 10
323. உள்ளியது சுரக்கும் ஈகை!
பாடியவர் பாடப்பட்டோர் : பெயர்கள் தெரிந்தில.
திணை: வாகை. 
துறை : வல்லாண் முல்லை. 
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா .. .. .. .. .. .. .. .. .. க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் 5
கறையடி யானைக்கு அல்லது
உறைகழிப் பறியா,வேலோன் ஊரே.  
324. உலந்துழி உலக்கும்!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 
வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்,
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
ஊக நுண்கோற் செறித்த அம்பின், 5
வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்,
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்,
குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த
வெண்வாழ் தாய வண்காற் பந்தர், 10
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்,
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை,
வலம்படு தானை வேந்தற்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.  
325. வேந்து தலைவரினும் தாங்கம்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
திணை: வாகை 
துறை : வல்லாண் முல்லை 
களிறுநீ றாடிய விடுநில மருங்கின்,
வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்,
குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்,
செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை, 5
முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்,
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, 10
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே.

301. அறிந்தோர் யார்?
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்திணை: தும்பை துறை : தானை மறம் 
பல் சான்றீரே ! பல் சான்றீரே!குமரி மகளிர் கூந்தல் புரைய,அமரின் இட்ட அருமுள் வேலிக்கல்லென் பாசறைப் பல்சான் றீரே!முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்; 5ஒளிறு ஏந்து ,மருப்பின்நும் களிறும் போற்றுமின்!எனைநாள் தங்கும்நும் போரே, அனைநாள்எறியர் எறிதல் யாவணது? எறிந்தோர்எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால்அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே! 10பலம் என்று இகழ்தல் ஓம்புமின்! உதுக்காண்நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி,வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி,எல்லிடைப் படர்தந் தோனே ; கல்லெனவேந்தூர் யானைக்கு அல்லது, 15ஏந்துவன் போலான், தன் இலங்கிலை வேலே!  


302. வேலின் அட்ட களிறு?
பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்).திணை: தும்பை துறை : குதிரை மறம் 
வெடிவேய் கொள்வது போல ஓடித்தாவுபு உகளும், மாவே; பூவே,விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றியஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் 5கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய,நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,விண்ணிவர் விசும்பின் மீனும், 10தண்பெயல் உறையும், உறையாற் றாவே.  


303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!
பாடியவர்: எருமை வெளியனார்திணை: தும்பை துறை : குதிரை மறம் 
நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉஉள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்தவெந்திறல் எகம் நெஞ்சுவடு விளைப்பஆட்டிக் காணிய வருமே; நெருநை, 5உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்,கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர்கயந்தலை மடப்பிடி புலம்ப,இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.  


304. எம்முன் தப்பியோன்!
பாடியவர்: அரிசில்கிழார்திணை: தும்பை துறை : குதிரை மறம் 
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவிபண்ணற்கு விரைதி, நீயே;நெருநைஎம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு 5நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்,புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்இலங்கு இரும் பாசறை நடுங்கின்று; 10இரண்டா காது அவன் கூறியது எனவே.  


305. சொல்லோ சிலவே!
பாடியவர்: மதுரை வேளாசான்திணை: வாகை துறை : பார்ப்பன வாகை 
வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான்எல்லி வந்து நில்லாது புக்குச்,சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கேஏணியும் சீப்பும் மாற்றி, 5மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.  


306. ஒண்ணுதல் அரிவை!
பாடியவர்: அள்ளூர் நன் முல்லையார்திணை: வாகை துறை : மூதின் முல்லை 
களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவைநடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் 5ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு,நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.  


307. யாண்டுளன் கொல்லோ!
பாடியவர்: பெயர் புலனாகவில்லைதிணை: தும்பை துறை : களிற்றுடனிலை 
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;வேனல் வரி அணில் வாலத்து அன்ன;கான ஊகின் கழன்றுகு முதுவீ 5அரியல் வான்குழல் சுரியல் தங்க,நீரும் புல்லும் ஈயாது உமணர்யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்தவாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர்பேருயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு, 10வெஞ்சின யானை வேந்தனும், இக்களத்துஎஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் எனப்,பண் கொளற்கு அருமை நோக்கி,நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.  


308. நாணின மடப்பிடி!
பாடியவர்: கோவூர் கிழார்திணை: வாகை துறை : மூதின் முல்லை 
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்நன்மை நிறைந்த நயவரு பாண!சீறூர் மன்னன் சிறியிலை எகம்வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே; 5வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னைசார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்புன்தலை மடப்பிடி நாணக், 10குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.  


309. என்னைகண் அதுவே!
பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்திணை: தும்பை துறை : நூழிலாட்டு 
இரும்புமுகம் சிதைய நூறி, ஒன்னார்இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;நல்லரா உறையும் புற்றம் போலவும்,கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்,மாற்றருந் துப்பின் மாற்றோர், பாசறை 5உளன் என வெரூஉம் ஓர்ஒளிவலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.  


310. உரவோர் மகனே!
பாடியவர்: பொன்முடியார்திணை: தும்பை துறை : நூழிலாட்டு 
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு,உயவொடு வருந்தும் மன்னே! இனியேபுகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, 5உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_மான்உளை அன்ன குடுமித்தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.  


311. சால்பு உடையோனே!
பாடியவர்: அவ்வையார்திணை: தும்பை துறை : பாண் பாட்டு 
களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்,புலைத்தி கழீஇய தூவெள் அறுவை;தாதுஎரு மறுகின் மாசுண இருந்து,பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்குஒருவரும் இல்லை மாதோ , செருவத்துச்; 5சிறப்புடைச் செங்கண் புகைய, வோர்தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.  


312. காளைக்குக் கடனே!
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், 5களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.  


313. வேண்டினும் கடவன்!
பாடியவர்: மாங்குடி மருதனார்திணை: வாகை துறை : வல்லான் முல்லை 
அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்காணிய சென்ற இரவன் மாக்கள்களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ;உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட 5கழிமுரி குன்றத்து அற்றே,எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.  


314. மனைக்கு விளக்கு!
பாடியவர்: ஐயூர் முடவனார்திணை: வாகை துறை : வல்லான் முல்லை 
மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை,நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து 5நிறையழிந்து எழுதரு தானைக்குச்சிறையும் தானே_ தன் இறைவிழு முறினே.  


315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: வாகை. துறை : வல்லான் முல்லை. 
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் 5கான்றுபடு கனைஎரி போலத்,தோன்றவும் வல்லன்_ தான் தோன்றுங் காலே.  


316. சீறியாழ் பனையம்!
பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்திணை: வாகை துறை : வல்லாண் முல்லை 
கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்;நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் 5இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டுஈவது இலாளன் என்னாது, நீயும்;வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்,கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச், 10சென்று வாய் சிவந்துமேல் வருக_சிறுகண் யானை வேந்து விழுமுறவே.  


317. யாதுண்டாயினும் கொடுமின்!
பாடியவர்: மவேம்ப்ற்றூர்க் குமரனார்திணை: வாகை துறை : வல்லாண் முல்லை 
வென்வேல் .. .. .. .. .. .. நதுமுன்றில் கிடந்த பெருங்களி யாளற்குஅதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும்,யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே;வேட்கை மீளப .. .. .. .. .. .. 5.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே.  


318. பெடையொடு வதியும்!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்திணை: வாகை துறை : வல்லாண் முல்லை 
கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க,மயில்அம் சாயல் மாஅ யோளொடுபசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே_மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்,பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான் 5குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்,பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்புன்புறப் பெடையொடு வதியும்யாணர்த்து ஆகும்_வேந்துவிழு முறினே.  


319. முயல் சுட்டவாயினும் தருவோம்!
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்திணை: வாகை துறை : வல்லாண் முல்லை 
பூவற் படுவிற் கூவல் தோண்டியசெங்கண் சின்னீர் பெய்த சீறில்முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி,யாம் கடு உண்டென, வறிது மாசின்று;படலை முன்றிற் சிறுதினை உணங்கல் 5புறவும் இதலும் அறவும் உண்கெனப்பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்துஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி 10புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின்பாடினி மாலை யணிய,வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. 15


320. கண்ட மனையோள்!
பாடியவர்: வீரை வெளியனார்திணை: வாகை துறை : வல்லாண் முல்லை 
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்,பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்,கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்,பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட, 5இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்கணவன் எழுதலும் அஞ்சிக், கலையேபிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,இவ்வழங் காமையின், கல்லென ஒலித்து,மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி 10கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென,ஆர நெருப்பின், ஆரல் நாறத்தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்,தங்கினை சென்மோ, பாண! தங்காது, 15வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்அருகாது ஈயும் வண்மைஉரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.  


321. வன்புல வைப்பினது!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்திணை: வாகை துறை : வல்லாண் முல்லை 
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்னகுடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக், 5கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்,வன்புல வைப்பி னதுவே_சென்றுதின்பழம் பசீஇ.. .. .. ..ன்னோ, பாண!வாள்வடு விளங்கிய சென்னிச்செருவெங் குருசில் ஓம்பும் ஊரே. 10


322. கண்படை ஈயான்!
பாடியவர்: ஆவூர்கிழார்திணை: வாகை துறை : வல்லாண் முல்லை 
உழுதூர் காளை ஊழ்கோடு அன்னகவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்,புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்,பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய 5மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது,இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்,தண்பணை யாளும் வேந்தர்க்குக்கண்படை ஈயா வேலோன் ஊரே. 10


323. உள்ளியது சுரக்கும் ஈகை!
பாடியவர் பாடப்பட்டோர் : பெயர்கள் தெரிந்தில.திணை: வாகை. துறை : வல்லாண் முல்லை. 
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்கா .. .. .. .. .. .. .. .. .. க்குஉள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் 5கறையடி யானைக்கு அல்லதுஉறைகழிப் பறியா,வேலோன் ஊரே.  


324. உலந்துழி உலக்கும்!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்திணை: வாகை துறை : வல்லாண் முல்லை 
வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்,வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்ஊக நுண்கோற் செறித்த அம்பின், 5வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்,பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்,குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்தவெண்வாழ் தாய வண்காற் பந்தர், 10இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்,பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை,வலம்படு தானை வேந்தற்குஉலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.  


325. வேந்து தலைவரினும் தாங்கம்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்திணை: வாகை துறை : வல்லாண் முல்லை 
களிறுநீ றாடிய விடுநில மருங்கின்,வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்,குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்,செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை, 5முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர்உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்,கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, 10அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.