LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-15

 

351. தாராது அமைகுவர் அல்லர்!
பாடியவர்: மதுரைப் படைமங்க மன்னியார்
திணை: காஞ்சி 
துறை: மகட்பாற் காஞ்சி 
படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்,
கொடிநுடங்கு மிசைய தேரும், மாவும்,
படைஅமை மறவரொடு, துவன்றிக் கல்லெனக்,
கடல்கண் டன்ன கண்அகன் தானை
வென்றுஎறி முரசின் வேந்தர், என்றும், 5
வண்கை எயினன் வாகை அன்ன
இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்;
என்ஆ வதுகொல் தானே- தெண்ணீர்ப்
பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின், 10
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமம்சால் சிறப்பின், இப் பணைநல் லூரே?  
352. தித்தன் உறந்தை யன்ன!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி 
துறை: மகட்பாற் காஞ்சி 
குறிப்பு: இடையிடை சிதைவுற்ற செய்யுள் இது.
சிறப்பு: தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம். 
தேஎங் கொண்ட வெண்மண் டையான்,
வீ . . . . . கறக்குந்து;
அவல் வகுத்த பசுங் குடையான்,
புதன் முல்லைப் பூப்பறிக் குந்து;
ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் 5
குன்றுஏறிப் புனல் பாயின்
புறவாயால் புனல்வரை யுந்து;
. . . . . நொடை நறவின்
மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் நன்கலம் 10
கொடுப்பவும் கொளாஅ னெ. . . .
. . .ர்தந்த நாகிள வேங்கையின்,
கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும்
சிறுகோல் உளையும் புரவி . . . 15
. . . . . . . . . . . . . .யமரே.  
353. 'யார் மகள்?' என்போய்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
திணை: காஞ்சி 
துறை: மகட்பாற் காஞ்சி 
ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்,
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்,
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்,
தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை, 5
வினவல் ஆனா வெல்போர் அண்ணல்!
யார்மகள்? என்போய்; கூறக் கேள், இனிக்;
குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத் 10
தொல்குடி மன்னன் மகளே; முன்நாள்
கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
. . . . . . . . . . . . . .
. . . உழக்குக் குருதி ஓட்டிக்,
கதுவாய் போகிய நுதிவாய் எகமொடு, 15
பஞ்சியும் களையாப் புண்ணர்.
அஞ்சுதகவு உடையர், இவள் தன்னை மாரே.  
354. நாரை உகைத்த வாளை!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி 
துறை : மகட்பாற் காஞ்சி 
அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
நிரைகாழ் எகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தெனத், தந்தையும் பெயர்க்கும்;
வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்,
கயலார் நாரை உகைத்த வாளை 5
புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ-
சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை;
வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை
மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே? 10
355. ஊரது நிலைமையும் இதுவே?
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி 
துறை : பெயர் தெரிந்திலது. 
தோற்றக் கிடையாத போயின செய்யுள் இது.
மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,
நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே;
. . . . . . . . . . . . . 5
356. காதலர் அழுத கண்ணீர்!
பாடியவர்: தாயங்கண்ணனார்
திணை: காஞ்சி 
துறை: பெருங்காஞ்சி 
களரி பரந்து, கள்ளி போகிப்,
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல்,
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு;
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர் 5
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்,
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.  
357. தொக்குயிர் வௌவும்!
பாடியவர்: பிரமனார்
திணை: காஞ்சி 
துறை: பெருங்காஞ்சி 
குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்,
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்,
பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்,
மாண்ட வன்றே, ஆண்டுகள், துணையே
வைத்த தன்றே வெறுக்கை; 5
. . . . . . . . . . ணை
புணைகை விட்டோர்க்கு அரிதே, துணைஅழத்
தொக்குஉயிர் வெளவுங் காலை,
இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே.  
358. விடாஅள் திருவே!
பாடியவர்: வான்மீகியார்
திணை: காஞ்சி 
துறை: மனையறம், துறவறம் 
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு
ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,
கைவிட் டனரே காதலர்; அதனால் 5
விட்டோரை விடாஅள், திருவே;
விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.  
359. நீடு விளங்கும் புகழ்!
பாடியவர்: கரவட்டனார்.
பாடப்பட்டோன்: அந்துவன் கீரன்.
திணை: காஞ்சி. 
துறை: பெருங்காஞ்சி. 
பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்,
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு
பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல,
பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி,
விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர் 5
களரி மருங்கில் கால்பெயர்த் தாடி,
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடுமுன் னினரே, நாடுகொண் டோரும்!
நினக்கும் வருதல் வைகல் அற்றே;
வசையும் நிற்கும், இசையும் நிற்கும்; 10
அதனால் வசைநீக்கி இசைவேண்டியும்,
நசை வேண்டாது நன்று மொழிந்தும்,
நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு,
பொலம் படைய மா மயங்கிட,
இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது 15
கொள் என விடுவை யாயின், வெள்ளென
ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்,
ஈண்டுநீடு விளங்கும், நீ எய்திய புகழே.  
360. பலர் வாய்த்திரார்!
பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரியர்
திணை: காஞ்சி 
துறை: பெருங்காஞ்சி 
பெரிது ஆராச் சிறு சினத்தர்,
சில சொல்லால் பல கேள்வியர்,
நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர்
கலுழ் நனையால் தண் தேறலர்,
கனி குய்யாற் கொழுந் துவையர், 5
தாழ் உவந்து தழூஉ மொழியர்,
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி
ஏம மாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே; பெரும! கேள் இனி ; நாளும்,
பலரே தகை அது அறியா தோரே! 10
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப்
பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத 15
கள்ளி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நிறுத்த பின்றைக் , கள்ளொடு
புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி,
புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு,
அழல்வாய்ப் புக்க பின்னும், 20
பலர்வாய்த்து இராஅர், பகுத்துஉண் டோரே.  
361. முள் எயிற்று மகளிர்!
பாடியவர், பாடப்பட்டோர், திணை, துறை தெரிந்தில. 
கார் எதிர் உருமின் உரறிக், கல்லென,
ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!
நின்வரவு அஞ்சலன் மாதோ; நன்பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,
அருங்கலம் நீரொடு சிதறிப், பெருந்தகைத் 5
தாயின்நன்று பலர்க்கு ஈத்துத்,
தெருணடை மாகளிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,
உருள்நடைப் ப்றேர் ஒன்னார்க் கொன்றுதன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், 10
புரி மாலையர் பாடி னிக்குப்
பொலந் தாமரைப் பூம் பாணரொடு
கலந் தளைஇய நீள் இருக் கையால்
பொறையொடு மலிந்த கற்பின், மான்நோக்கின்,
வில்என விலங்கிய புருவத்து, வல்லென, 15
நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று, மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென
கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி,
அமிழ்தென மடுப்ப மாந்தி, இகழ்விலன்,
நில்லா உலகத்து நிலையாமைநீ 20
சொல்லா வேண்டா தோன்றல், முந்துஅறிந்த
முழுதுஉணர் கேள்வியன் ஆகலின் விரகினானே.  
362. உடம்பொடுஞ் சென்மார்!
பாடியவர்: சிறுவெண்டேரையார்
திணை: பொதுவியல் 
துறை: பெருங்காஞ்சி 
ஞாயிற்றுஅன்ன ஆய்மணி மிடைந்த
மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்,
பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்,
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி 5
அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை,
கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்,
ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகா மையின்
அறம்குறித் தன்று; பொருளா குதலின் 10
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇக்,
கைபெய்த நீர் கடற் பரப்ப,
ஆம் இருந்த அடை நல்கிச்,
சோறு கொடுத்து, மிகப் பெரிதும்
வீறுசான் நன்கலம் வீசி நன்றும், 15
சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்,
வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்,
காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல்என்று இல்வயின் பெயர ; மெல்ல 20
இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி,
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே.  
363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!
பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்
திணை: பொதுவியல் 
துறை: பெருங்காஞ்சி 
இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித், தத்தம் 5
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு. 10
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப் புழுக்கல்
கைக் கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலங்கல னாக, இலங்குபலி மிசையும் 15
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.  
364. மகிழகம் வம்மோ!
பாடியவர்: கூகைக் கோரியார்
திணை: பொதுவியல் 
துறை: பெருங்காஞ்சி 
வாடா மாலை பாடினி அணியப்,
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்,
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை 5
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்,
மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் 10
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.  
365. நிலமகள் அழுத காஞ்சி!
பாடியவர்: மார்க்கண்டேயனார்
திணை: பொதுவியல் 
துறை: பெருங்காஞ்சி 
மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக,
இயங்கிய இருசுடர் கண் எனப், பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்,
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப், 5
பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற,
உள்ளேன் வாழியர், யான் எனப் பன்மாண்
நிலமகள் அழுத காஞ்சியும் 10
உண்டென உரைப்பரால், உணர்ந்திசி னோரே.  
366. மாயமோ அன்றே!
பாடியவர்: கோதமனார்.
பாடப்பட்டோன்: தருமபுத்திரன்.
திணை : பொதுவியல். 
துறை: பெருங்காஞ்சி. 
விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக,
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப,
ஒருதா மாகிய பெருமை யோரும்,
தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே; 5
அதனால், அறிவோன் மகனே! மறவோர் செம்மால்!
. . . . . . . . . . உரைப்பக் கேண்மதி;
நின் ஊற்றம் பிறர் அறியாது,
பிறர் கூறிய மொழி தெரியா,
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, 10
இரவின் எல்லை வருவது நாடி,
உரை . . . . . . . . . . .
உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்,
செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ,
அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப, 15
கெடல் அருந் திருவ . . . . . . .
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,
நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக், 20
காவு தோறும் . . . . . . . .
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.  
367. வாழச் செய்த நல்வினை!
பாடியவர்: அவ்வையார்.
திணை: பாடாண். 
துறை: வாழ்த்தியல்.
சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும்,  சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்
ஒருங்கிருந்தாரைப் பாடியது.
நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, 5
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது, 10
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;
யான் அறி அளவையோ இவ்வே; வானத்து 15
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!  
368. பாடி வந்தது இதற்கோ?
பாடியவர்: கழாத் தலையார்
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன்
திணை: வாகை 
துறை: மறக்களவழி
குறிப்பு: இவன், சோழன் வேற்பறடக்கைப் பெருநற் கிள்ளியோடும் போர்ப்புறத்துப் பொருது , களத்து வீழ்ந்தனன். அவன் உயிர் போகா, முன்னர் அவனைக் களத்திடைக் கண்ட புலவர் பாடியது இச்செய்யுள். 
களிறு முகந்து பெயர்குவம் எனினே.
ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்,
கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன;
கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே;
கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி 5
நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந் தனவே;
கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே,
மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி,
வளிவழக் கறுத்த வங்கம் போலக்
குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே; ஆங்க 10
முகவை இன்மையின் உகவை இன்றி,
இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து,
ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ !
கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப், 15
பாடி வந்த தெல்லாம், கோடியர்
முழவுமருள் திருமணி மிடைந்தநின்
அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே.  
369. போர்க்களமும் ஏர்க்களமும்!
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்.
திணை: வாகை. 
துறை: மறக்களவழி. 
இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்,
கருங்கை யானை கொண்மூவாக,
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக, 5
அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்,
வெவ் விசைப் புரவி வீசுவளி யாக,
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை,
ஈரச் செறுவயின் தேர்ஏ ராக, 10
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்.
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி,
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்,
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு, 15
கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்,
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்,
பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள!
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை 20
அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்,
பாடி வந்திசின் பெரும; பாடான்று
எழிலி தோயும் இமிழிசை யருவிப்,
பொன்னுடை நெடுங்கோட்டு, இமையத் தன்ன
ஓடைநுதல, ஒல்குதல் அறியாத், 25
துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி;
தாழா ஈகைத், தகை வெய் யோயே!  
370. பழுமரம் உள்ளிய பறவை!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி.
திணை: வாகை. 
துறை: மறக்களவழி. 
. . . . . . . . . . . . . . . வி,
நாரும் போழும் செய்துண்டு, ஓராங்குப்
பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ,
வேர்உழந்து உலறி, மருங்கு செத்து ஒழியவந்து,
5
அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை,
வரிமரல் திரங்கிய கானம் பிற்படப், 10
பழுமரம் உள்ளிய பறவை போல,
ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்,
துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப,
விளைந்த செழுங்குரல் அரிந்து, கால் குவித்துப்
படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி 15
எருதுகளி றாக, வாள்மடல் ஓச்சி
அதரி திரித்த ஆளுகு கடாவின்,
அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி,
வெந்திறல் வியன்களம் பொலிக! என்று ஏத்தி
இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின் 20
வரைமருள் முகவைக்கு வந்தனென்; பெரும;
வடிநவில் எகம் பாய்ந்தெனக், கிடந்த
தொடியுடைத் தடக்கை ஓச்சி, வெருவார்
இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
அழுகுரற் பேய்மகள் அயரக், கழுகொடு 25
செஞ்செவி எருவை திரிதரும்;
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!  
371. பொருநனின் வறுமை!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. 
துறை: மறக்களவழி. 
போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்,
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப்
பறையொடு தகைத்த கலப்பையென், முரவுவாய்
ஆடுறு குழிசி பாடின்று தூக்கி,
மன்ற வேம்பின் ஒண்பூ உரைப்பக்,
5
குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்,
அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்,
கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப,
வருகணை வாளி . . . . . அன்பின்று தலைஇ,
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, 10
வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக்,
குறைத்தலைப் படுபிணன் எதிரப், போர்பு அழித்து
யானை எருத்தின் வாள்மட லோச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
மதியத் தன்ன என் விசியுறு தடாரி 15
அகன்கண் அதிர, ஆகுளி தொடாலின்,
பணைமருள் நெடுந்தாள், பல்பிணர்த் தடக்கைப்,
புகர்முக முகவைக்கு வந்திசின் - பெரும!
களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி,
விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள், 20
குடர்த்தலை மாலை சூடி, உணத்தின
ஆனாப் பெருவளம் செய்தோன் வானத்து
வயங்குபன் மீனினும் வாழியர், பல என,
உருகெழு பேய்மகள் அயரக்,
குருதித்துக ளாடிய களம்கிழ வோயே! 25
372. ஆரம் முகக்குவம் எனவே!
பாடியவர்: மாங்குடி கிழார்.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
திணை: வாகை. 
துறை: மறக்கள வேள்வி. 
விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி,
ஏத்தி வந்த தெல்லாம் முழுத்த
இலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்,
பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின், 5
கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்,
ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்,
ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த,
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் 10
வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்
புலவுக்களம் பொலிய வேட்டோய்! நின்
நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே.  
373. நின்னோர் அன்னோர் இலரே!
பாடியவர்: கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வாகை. 
துறை: மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்., 
உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்,
செருநவில் வேழம் கொண்மூ ஆகத்,
தேர்மா அழிதுளி தலைஇ , நாம் உறக்
கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை,
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள்வாள் 5
பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப,
மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்,
கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே!
. . . . . . தண்ட மாப்பொறி
மடக்கண் மயில் இயன் மறலி யாங்கு
10
நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து,
மென்தோள் மகளிர் மன்றம் பேணார்,
புண்ணுவ. . . . . . . . . . . . .
. . . . .அணியப் புரவி வாழ்கெனச்,
சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர,
15
நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்
அம்பழி பொழுதில் தமர்முகம் காணா,
. . . . . . . . . ற்றொக்கான
வேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை,
மாட மயங்கெரி மண்டிக், கோடிறுபு, 20
உரும் எறி மலையின், இருநிலம் சேரச்,
சென்றோன் மன்ற சொ . . . .
. . . . . ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப,
வஞ்சி முற்றம் வயக்கள னாக,
அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக் 25
கொண்டனை பெரும! குடபுலத்து அதரி;
பொலிக அத்தை நின் பணைதனற . . . ளம்!
விளங்குதிணை, வேந்தர் களந்தொறுஞ் சென்ற,
புகர்முக முகவை பொலிக! என்றி ஏத்திக்,
கொண்டனர் என்ப பெரியோர் : யானும் 30
அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற,
. . . . . லெனாயினுங் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்,
மன்னெயில் முகவைக்கு வந்திசின், பெரும!
பகைவர் புகழ்ந்த அண்மை, நகைவர்க்குத் 35
தாவின்று உதவும் பண்பின், பேயொடு
கணநரி திரிதரும் ஆங்கண், நிணன் அருந்து
செஞ்செவி எருவை குழீஇ,
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!  
374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?
பாடியவர்: உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். 
துறை: பூவைநிலை. 
கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்
புல்வாய் இரலை நெற்றி யன்ன,
பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்
தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி, என் 5
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,
இருங்கலை ஓர்ப்ப இசைஇக், காண்வரக்,
கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்,
புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறா அர்
மான்கண் மகளிர், கான்தேர் அகன்று உவா 10
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை,
விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்,
புகர்முக வேழத்து முருப்பொடு, மூன்றும்,
இருங்கேழ் வயப்புலி வரி அதள் குவைஇ,
விரிந்து இறை நல்கும் நாடன், எங்கோன், 15
கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல,
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன்விளங் குதியால் விசும்பி னானே!  
375. பாடன்மார் எமரே!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண் . 
துறை: வாழ்த்தியல். 
அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி
நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற்
பொதியில் ஒருசிறை பள்ளி யாக
முழாவரைப் போந்தை அரவாய் மாமடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி, 5
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ,
ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்? எனப்
புரசம் தூங்கும் அறாஅ யாணர்,
வரையணி படப்பை, நன்னாட்டுப் பொருந! 10
பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்!
யாவரும் இன்மையின் கிணைப்பத், தாவது,
பெருமழை கடல்பரந் தாஅங்கு, யானும்
ஒருநின் உள்ளி வந்தனென்; அதனால்
புலவர் புக்கில் ஆகி, நிலவரை 15
நிலீ இயர் அத்தை, நீயே! ஒன்றே
நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து,
நிலவன் மாரோ, புரவலர்! துன்னிப்,
பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடின்று பெருகிய திருவின், 20
பாடில், மன்னரைப் பாடன்மார் எமரே!


351. தாராது அமைகுவர் அல்லர்!
பாடியவர்: மதுரைப் படைமங்க மன்னியார்திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி 
படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்,கொடிநுடங்கு மிசைய தேரும், மாவும்,படைஅமை மறவரொடு, துவன்றிக் கல்லெனக்,கடல்கண் டன்ன கண்அகன் தானைவென்றுஎறி முரசின் வேந்தர், என்றும், 5வண்கை எயினன் வாகை அன்னஇவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்;என்ஆ வதுகொல் தானே- தெண்ணீர்ப்பொய்கை மேய்ந்த செவ்வரி நாரைதேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின், 10காமரு காஞ்சித் துஞ்சும்ஏமம்சால் சிறப்பின், இப் பணைநல் லூரே?  


352. தித்தன் உறந்தை யன்ன!
பாடியவர்: பரணர்திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி குறிப்பு: இடையிடை சிதைவுற்ற செய்யுள் இது.சிறப்பு: தித்தன் காலத்து உறந்தையின் நெல் வளம். 
தேஎங் கொண்ட வெண்மண் டையான்,வீ . . . . . கறக்குந்து;அவல் வகுத்த பசுங் குடையான்,புதன் முல்லைப் பூப்பறிக் குந்து;ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் 5குன்றுஏறிப் புனல் பாயின்புறவாயால் புனல்வரை யுந்து;. . . . . நொடை நறவின்மாவண் தித்தன் வெண்ணெல் வேலிஉறந்தை அன்ன உரைசால் நன்கலம் 10கொடுப்பவும் கொளாஅ னெ. . . .. . .ர்தந்த நாகிள வேங்கையின்,கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும்சிறுகோல் உளையும் புரவி . . . 15. . . . . . . . . . . . . .யமரே.  


353. 'யார் மகள்?' என்போய்!
பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்திணை: காஞ்சி துறை: மகட்பாற் காஞ்சி 
ஆசில் கம்மியன் மாசறப் புனைந்தபொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்,ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்,தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்,தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை, 5வினவல் ஆனா வெல்போர் அண்ணல்!யார்மகள்? என்போய்; கூறக் கேள், இனிக்;குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்புநாள்கடா அழித்த நனந்தலைக் குப்பைவல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத் 10தொல்குடி மன்னன் மகளே; முன்நாள்கூறி வந்த மாமுது வேந்தர்க்கு. . . . . . . . . . . . . .. . . உழக்குக் குருதி ஓட்டிக்,கதுவாய் போகிய நுதிவாய் எகமொடு, 15பஞ்சியும் களையாப் புண்ணர்.அஞ்சுதகவு உடையர், இவள் தன்னை மாரே.  


354. நாரை உகைத்த வாளை!
பாடியவர்: பரணர்திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி 
அரைசுதலை வரினும் அடங்கல் ஆனாநிரைகாழ் எகம் நீரின் மூழ்கப்புரையோர் சேர்ந்தெனத், தந்தையும் பெயர்க்கும்;வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்,கயலார் நாரை உகைத்த வாளை 5புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ-சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை;வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தைமான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே? 10


355. ஊரது நிலைமையும் இதுவே?
பாடியவர்: பெயர் தெரிந்திலது.திணை: காஞ்சி துறை : பெயர் தெரிந்திலது. 
தோற்றக் கிடையாத போயின செய்யுள் இது.மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்,நீஇர் இன்மையின், கன்றுமேய்ந்து உகளும்;ஊரது நிலைமையும் இதுவே;. . . . . . . . . . . . . 5


356. காதலர் அழுத கண்ணீர்!
பாடியவர்: தாயங்கண்ணனார்திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி 
களரி பரந்து, கள்ளி போகிப்,பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல்,ஈம விளக்கின், பேஎய் மகளிரொடுஅஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு;நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர் 5என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப,எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்துமன்பதைக் கெல்லாம் தானாய்த்,தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.  


357. தொக்குயிர் வௌவும்!
பாடியவர்: பிரமனார்திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி 
குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்,பொதுமை சுட்டிய மூவர் உலகமும்,பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்,மாண்ட வன்றே, ஆண்டுகள், துணையேவைத்த தன்றே வெறுக்கை; 5. . . . . . . . . . ணைபுணைகை விட்டோர்க்கு அரிதே, துணைஅழத்தொக்குஉயிர் வெளவுங் காலை,இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே.  


358. விடாஅள் திருவே!
பாடியவர்: வான்மீகியார்திணை: காஞ்சி துறை: மனையறம், துறவறம் 
பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்ஒருபகல் எழுவர் எய்தி யற்றே;வையமும் தவமும் தூக்கின், தவத்துக்குஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்,கைவிட் டனரே காதலர்; அதனால் 5விட்டோரை விடாஅள், திருவே;விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே.  


359. நீடு விளங்கும் புகழ்!
பாடியவர்: கரவட்டனார்.பாடப்பட்டோன்: அந்துவன் கீரன்.திணை: காஞ்சி. துறை: பெருங்காஞ்சி. 
பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்,வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடுபிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல,பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி,விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர் 5களரி மருங்கில் கால்பெயர்த் தாடி,ஈம விளக்கின் வெருவரப் பேரும்காடுமுன் னினரே, நாடுகொண் டோரும்!நினக்கும் வருதல் வைகல் அற்றே;வசையும் நிற்கும், இசையும் நிற்கும்; 10அதனால் வசைநீக்கி இசைவேண்டியும்,நசை வேண்டாது நன்று மொழிந்தும்,நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு,பொலம் படைய மா மயங்கிட,இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது 15கொள் என விடுவை யாயின், வெள்ளெனஆண்டுநீ பெயர்ந்த பின்னும்,ஈண்டுநீடு விளங்கும், நீ எய்திய புகழே.  


360. பலர் வாய்த்திரார்!
பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரியர்திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி 
பெரிது ஆராச் சிறு சினத்தர்,சில சொல்லால் பல கேள்வியர்,நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர்கலுழ் நனையால் தண் தேறலர்,கனி குய்யாற் கொழுந் துவையர், 5தாழ் உவந்து தழூஉ மொழியர்,பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றிஏம மாக இந்நிலம் ஆண்டோர்சிலரே; பெரும! கேள் இனி ; நாளும்,பலரே தகை அது அறியா தோரே! 10அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது;இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால்நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில்நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப்பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத 15கள்ளி போகிய களரி மருங்கின்,வெள்ளில் நிறுத்த பின்றைக் , கள்ளொடுபுல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி,புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு,அழல்வாய்ப் புக்க பின்னும், 20பலர்வாய்த்து இராஅர், பகுத்துஉண் டோரே.  


361. முள் எயிற்று மகளிர்!
பாடியவர், பாடப்பட்டோர், திணை, துறை தெரிந்தில. 
கார் எதிர் உருமின் உரறிக், கல்லென,ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!நின்வரவு அஞ்சலன் மாதோ; நன்பலகேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,அருங்கலம் நீரொடு சிதறிப், பெருந்தகைத் 5தாயின்நன்று பலர்க்கு ஈத்துத்,தெருணடை மாகளிறொடு தன்அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,உருள்நடைப் ப்றேர் ஒன்னார்க் கொன்றுதன்தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், 10புரி மாலையர் பாடி னிக்குப்பொலந் தாமரைப் பூம் பாணரொடுகலந் தளைஇய நீள் இருக் கையால்பொறையொடு மலிந்த கற்பின், மான்நோக்கின்,வில்என விலங்கிய புருவத்து, வல்லென, 15நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று, மகளிர்அல்குல் தாங்கா அசைஇ, மெல்லெனகலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி,அமிழ்தென மடுப்ப மாந்தி, இகழ்விலன்,நில்லா உலகத்து நிலையாமைநீ 20சொல்லா வேண்டா தோன்றல், முந்துஅறிந்தமுழுதுஉணர் கேள்வியன் ஆகலின் விரகினானே.  


362. உடம்பொடுஞ் சென்மார்!
பாடியவர்: சிறுவெண்டேரையார்திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி 
ஞாயிற்றுஅன்ன ஆய்மணி மிடைந்தமதியுறழ் ஆரம் மார்பில் புரளப்,பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்,பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி 5அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை,கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்,ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்நான்மறை குறித்தன்று அருளாகா மையின்அறம்குறித் தன்று; பொருளா குதலின் 10மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇக்,கைபெய்த நீர் கடற் பரப்ப,ஆம் இருந்த அடை நல்கிச்,சோறு கொடுத்து, மிகப் பெரிதும்வீறுசான் நன்கலம் வீசி நன்றும், 15சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்,வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்பகலும் கூவும் அகலுள் ஆங்கண்,காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடுஇல்என்று இல்வயின் பெயர ; மெல்ல 20இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி,உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே.  


363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!
பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி 
இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்,தாமே ஆண்ட ஏமம் காவலர்இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்காடுபதி யாகப் போகித், தத்தம் 5நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;அதனால் நீயும் கேண்மதி அத்தை ! வீயாதுஉடம்பொடு நின்ற உயிரும் இல்லை;மடங்கல் உண்மை மாயமோ அன்றே;கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு. 10வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,உப்பிலாஅ அவிப் புழுக்கல்கைக் கொண்டு, பிறக்கு நோக்காது,இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,நிலங்கல னாக, இலங்குபலி மிசையும் 15இன்னா வைகல் வாரா முன்னே,செய்ந்நீ முன்னிய வினையே,முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.  


364. மகிழகம் வம்மோ!
பாடியவர்: கூகைக் கோரியார்திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி 
வாடா மாலை பாடினி அணியப்,பாணன் சென்னிக் கேணி பூவாஎரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க,மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்,காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை 5நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்பஉண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும்,மகிழ்கம் வம்மோ, மறப்போ ரோயே!அரிய வாகலும் உரிய பெரும!நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் 10முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்கூகைக் கோழி ஆனாத்தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.  


365. நிலமகள் அழுத காஞ்சி!
பாடியவர்: மார்க்கண்டேயனார்திணை: பொதுவியல் துறை: பெருங்காஞ்சி 
மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக,இயங்கிய இருசுடர் கண் எனப், பெயரியவளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்,வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துபொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப், 5பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும்விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற,உள்ளேன் வாழியர், யான் எனப் பன்மாண்நிலமகள் அழுத காஞ்சியும் 10உண்டென உரைப்பரால், உணர்ந்திசி னோரே.  


366. மாயமோ அன்றே!
பாடியவர்: கோதமனார்.பாடப்பட்டோன்: தருமபுத்திரன்.திணை : பொதுவியல். துறை: பெருங்காஞ்சி. 
விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக,அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப,ஒருதா மாகிய பெருமை யோரும்,தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே; 5அதனால், அறிவோன் மகனே! மறவோர் செம்மால்!. . . . . . . . . . உரைப்பக் கேண்மதி;நின் ஊற்றம் பிறர் அறியாது,பிறர் கூறிய மொழி தெரியா,ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, 10இரவின் எல்லை வருவது நாடி,உரை . . . . . . . . . . .உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்,செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ,அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப, 15கெடல் அருந் திருவ . . . . . . .மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளிவிடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக், 20காவு தோறும் . . . . . . . .மடங்கல் உண்மை மாயமோ அன்றே.  


367. வாழச் செய்த நல்வினை!
பாடியவர்: அவ்வையார்.திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும்,  சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்ஒருங்கிருந்தாரைப் பாடியது.

நாகத் தன்ன பாகார் மண்டிலம்தமவே யாயினும் தம்மொடு செல்லா;வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து, 5பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்தியநாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;வாழச் செய்த நல்வினை அல்லது, 10ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்முத்தீப் புரையக் காண்தக இருந்தகொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;யான் அறி அளவையோ இவ்வே; வானத்து 15வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்பரந்து இயங்கும் மாமழை உறையினும்,உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!  


368. பாடி வந்தது இதற்கோ?
பாடியவர்: கழாத் தலையார்பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன்திணை: வாகை துறை: மறக்களவழிகுறிப்பு: இவன், சோழன் வேற்பறடக்கைப் பெருநற் கிள்ளியோடும் போர்ப்புறத்துப் பொருது , களத்து வீழ்ந்தனன். அவன் உயிர் போகா, முன்னர் அவனைக் களத்திடைக் கண்ட புலவர் பாடியது இச்செய்யுள். 
களிறு முகந்து பெயர்குவம் எனினே.ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்,கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன;கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே;கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி 5நெடும்பீடு அழிந்து, நிலம்சேர்ந் தனவே;கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே,மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி,வளிவழக் கறுத்த வங்கம் போலக்குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே; ஆங்க 10முகவை இன்மையின் உகவை இன்றி,இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து,ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ !கடாஅ யானைக் கால்வழி யன்னவென்தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப், 15பாடி வந்த தெல்லாம், கோடியர்முழவுமருள் திருமணி மிடைந்தநின்அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே.  


369. போர்க்களமும் ஏர்க்களமும்!
பாடியவர்: பரணர்.பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்.திணை: வாகை. துறை: மறக்களவழி. 
இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்,கருங்கை யானை கொண்மூவாக,நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்தவாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்தகுருதிப் பலிய முரசுமுழக் காக, 5அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்,வெவ் விசைப் புரவி வீசுவளி யாக,விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்தகணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை,ஈரச் செறுவயின் தேர்ஏ ராக, 10விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின்செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்.பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி,விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்,பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு, 15கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்,பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்,பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள!தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணிவேய்வை காணா விருந்தின் போர்வை 20அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்,பாடி வந்திசின் பெரும; பாடான்றுஎழிலி தோயும் இமிழிசை யருவிப்,பொன்னுடை நெடுங்கோட்டு, இமையத் தன்னஓடைநுதல, ஒல்குதல் அறியாத், 25துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்தவேழ முகவை நல்குமதி;தாழா ஈகைத், தகை வெய் யோயே!  


370. பழுமரம் உள்ளிய பறவை!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி.திணை: வாகை. துறை: மறக்களவழி. 
. . . . . . . . . . . . . . . வி,நாரும் போழும் செய்துண்டு, ஓராங்குப்பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்குஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ,வேர்உழந்து உலறி, மருங்கு செத்து ஒழியவந்து,
5அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை,வரிமரல் திரங்கிய கானம் பிற்படப், 10பழுமரம் உள்ளிய பறவை போல,ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்,துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப,விளைந்த செழுங்குரல் அரிந்து, கால் குவித்துப்படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி 15எருதுகளி றாக, வாள்மடல் ஓச்சிஅதரி திரித்த ஆளுகு கடாவின்,அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி,வெந்திறல் வியன்களம் பொலிக! என்று ஏத்திஇருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின் 20வரைமருள் முகவைக்கு வந்தனென்; பெரும;வடிநவில் எகம் பாய்ந்தெனக், கிடந்ததொடியுடைத் தடக்கை ஓச்சி, வெருவார்இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சிஅழுகுரற் பேய்மகள் அயரக், கழுகொடு 25செஞ்செவி எருவை திரிதரும்;அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!  


371. பொருநனின் வறுமை!
பாடியவர்: கல்லாடனார்.பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.திணை: வாகை. துறை: மறக்களவழி. 
போதவிழ் அலரி நாரின் தொடுத்துத்,தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப்பறையொடு தகைத்த கலப்பையென், முரவுவாய்ஆடுறு குழிசி பாடின்று தூக்கி,மன்ற வேம்பின் ஒண்பூ உரைப்பக்,
5குறைசெயல் வேண்டா நசைஇய இருக்கையேன்,அரிசி இன்மையின் ஆரிடை நீந்திக்,கூர்வாய் இருப்படை நீரின் மிளிர்ப்ப,வருகணை வாளி . . . . . அன்பின்று தலைஇ,இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, 10வில்லேர் உழவின் நின் நல்லிசை யுள்ளிக்,குறைத்தலைப் படுபிணன் எதிரப், போர்பு அழித்துயானை எருத்தின் வாள்மட லோச்சிஅதரி திரித்த ஆள் உகு கடாவின்,மதியத் தன்ன என் விசியுறு தடாரி 15அகன்கண் அதிர, ஆகுளி தொடாலின்,பணைமருள் நெடுந்தாள், பல்பிணர்த் தடக்கைப்,புகர்முக முகவைக்கு வந்திசின் - பெரும!களிற்றுக்கோட்ட டன்ன வாலெயிறு அழுத்தி,விழுக்கொடு விரை இய வெள்நிணச் சுவையினள், 20குடர்த்தலை மாலை சூடி, உணத்தினஆனாப் பெருவளம் செய்தோன் வானத்துவயங்குபன் மீனினும் வாழியர், பல என,உருகெழு பேய்மகள் அயரக்,குருதித்துக ளாடிய களம்கிழ வோயே! 25


372. ஆரம் முகக்குவம் எனவே!
பாடியவர்: மாங்குடி கிழார்.பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.திணை: வாகை. துறை: மறக்கள வேள்வி. 
விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி,ஏத்தி வந்த தெல்லாம் முழுத்தஇலங்குவாள் அவிரொளி வலம்பட மின்னிக்கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசறைப்,பொருந்தாத் தெவ்வர் அரிந்ததலை அடுப்பின், 5கூவிள விறகின் ஆக்குவரி நுடங்கல்,ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்,ஈனா வேண்மாள் இடந்துழந்து அட்டமாமறி பிண்டம் வாலுவன் ஏந்த,வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் 10வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க எனப்புலவுக்களம் பொலிய வேட்டோய்! நின்நிலவுத்திகழ் ஆரம் முகக்குவம் எனவே.  


373. நின்னோர் அன்னோர் இலரே!
பாடியவர்: கோவூர்கிழார்.பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன்.திணை: வாகை. துறை: மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்., 
உருமிசை முழக்கென முரசும் இசைப்பச்,செருநவில் வேழம் கொண்மூ ஆகத்,தேர்மா அழிதுளி தலைஇ , நாம் உறக்கணைக்காற் றொடுத்த கண்ணகன் பாசறை,இழிதரு குருதியொடு ஏந்திய ஒள்வாள் 5பிழிவது போலப் பிட்டைஊறு உவப்ப,மைந்தர் ஆடிய மயங்குபெருந் தானைக்,கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே!. . . . . . தண்ட மாப்பொறிமடக்கண் மயில் இயன் மறலி யாங்கு
10நெடுங்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து,மென்தோள் மகளிர் மன்றம் பேணார்,புண்ணுவ. . . . . . . . . . . . .. . . . .அணியப் புரவி வாழ்கெனச்,சொல்நிழல் இன்மையின் நன்னிழல் சேர,
15நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்அம்பழி பொழுதில் தமர்முகம் காணா,. . . . . . . . . ற்றொக்கானவேந்துபுறங் கொடுத்த வீய்ந்துகு பறந்தலை,மாட மயங்கெரி மண்டிக், கோடிறுபு, 20உரும் எறி மலையின், இருநிலம் சேரச்,சென்றோன் மன்ற சொ . . . .. . . . . ண்ணநிகர் கண்டுகண் அலைப்ப,வஞ்சி முற்றம் வயக்கள னாக,அஞ்சா மறவர் ஆட்போர்பு அழித்துக் 25கொண்டனை பெரும! குடபுலத்து அதரி;பொலிக அத்தை நின் பணைதனற . . . ளம்!விளங்குதிணை, வேந்தர் களந்தொறுஞ் சென்ற,புகர்முக முகவை பொலிக! என்றி ஏத்திக்,கொண்டனர் என்ப பெரியோர் : யானும் 30அங்கண் மாக்கிணை அதிர ஒற்ற,. . . . . லெனாயினுங் காதலின் ஏத்திநின்னோர் அன்னோர் பிறரிவண் இன்மையின்,மன்னெயில் முகவைக்கு வந்திசின், பெரும!பகைவர் புகழ்ந்த அண்மை, நகைவர்க்குத் 35தாவின்று உதவும் பண்பின், பேயொடுகணநரி திரிதரும் ஆங்கண், நிணன் அருந்துசெஞ்செவி எருவை குழீஇ,அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!  


374. அண்டிரன் போல்வையோ ஞாயிறு?
பாடியவர்: உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்.பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.திணை: பாடாண். துறை: பூவைநிலை. 
கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்புல்வாய் இரலை நெற்றி யன்ன,பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி, என் 5தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,இருங்கலை ஓர்ப்ப இசைஇக், காண்வரக்,கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்,புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறா அர்மான்கண் மகளிர், கான்தேர் அகன்று உவா 10சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை,விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்,புகர்முக வேழத்து முருப்பொடு, மூன்றும்,இருங்கேழ் வயப்புலி வரி அதள் குவைஇ,விரிந்து இறை நல்கும் நாடன், எங்கோன், 15கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல,வண்மையும் உடையையோ? ஞாயிறு!கொன்விளங் குதியால் விசும்பி னானே!  


375. பாடன்மார் எமரே!
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.திணை: பாடாண் . துறை: வாழ்த்தியல். 
அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழிநிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற்பொதியில் ஒருசிறை பள்ளி யாகமுழாவரைப் போந்தை அரவாய் மாமடல்நாரும் போழும் கிணையோடு சுருக்கி, 5ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ,ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்? எனப்புரசம் தூங்கும் அறாஅ யாணர்,வரையணி படப்பை, நன்னாட்டுப் பொருந! 10பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்!யாவரும் இன்மையின் கிணைப்பத், தாவது,பெருமழை கடல்பரந் தாஅங்கு, யானும்ஒருநின் உள்ளி வந்தனென்; அதனால்புலவர் புக்கில் ஆகி, நிலவரை 15நிலீ இயர் அத்தை, நீயே! ஒன்றேநின்னின்று வறுவிது ஆகிய உலகத்து,நிலவன் மாரோ, புரவலர்! துன்னிப்,பெரிய ஓதினும் சிறிய உணராப்பீடின்று பெருகிய திருவின், 20பாடில், மன்னரைப் பாடன்மார் எமரே!

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.