LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

புறநானூறு-1

 

புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்க்கை 160. இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. அவ்வை துரைசாமிப் பிள்ளை விளக்க உரை வரைந்துள்ளார். 
நூல்
1. இறைவனின் திருவுள்ளம்!
பாடியவர்:பெருந்தேவனார்.
பாடப்பட்டோன்: இறைவன் 
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை 5
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; 10
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.  
2. போரும் சோறும்!
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம். 
மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு 5
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் 10
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப் 15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச், 20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!  
3.வன்மையும் வண்மையும்!
பாடியவர்: இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி. 
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,
தவிரா ஈகைக், கவுரியர் மருக! 5
செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் னோடைப் புகர் அணிநுதல்
துன்னருந் திறல் கமழ்கடா அத்து
எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில். 10
பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;
பொலங் கழற்காற்,புலர் சாந்தின் 15
விலங் ககன்ற வியன் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,
செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் 20
அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை,
நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அது
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் 25
இன்மை தீர்த்தல் வன்மை யானே.  
4. தாயற்ற குழந்தை!
பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி.
திணை: வஞ்சி. 
துறை: கொற்ற வள்ளை.
சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும். 
வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ, 5
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய், 10
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும் 15
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.  
5. அருளும் அருமையும்!
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
திணை: பாடாண்.
துறை: வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.
சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி. 
எருமை அன்ன கருங்கல் இடை தோறு,
ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை!நீயோ, பெரும!
நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா 5
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள் பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.  
6. தண்ணிலவும் வெங்கதிரும்!
பாடியவர்:காரிகிழார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை: பாடாண். 
துறை :செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு :பாண்டியனின் மறமாண்பு. 
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் 5
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
10
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்,
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து,
அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம் 15
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,
பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! 20
வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார்
நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!
செலிஇயர் அத்தை, நின் வெகுளி; வால்இழை
மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே!
ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய 25
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!
தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே!  
7. வளநாடும் வற்றிவிடும்!
பாடியவர் : கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன் : சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை : வஞ்சி. 
துறை: கொற்ற
வள்ளை: மழபுல வஞ்சியும் ஆம். 
களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்துஅடிக்,
கணை பொருது கவிவண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின், 5
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ! 10
தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.  
8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக் கடுங்கோ
வாழியாதன் என்பவனும் இவனே.
திணை : பாடாண். 
துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம். 
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,
போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது ,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்,
கடந்து அடு தானைச் சேரலாதனை 5
யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே. 10
9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். 
துறை :இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து, இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க. 
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என 5
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன் 10
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!  
10. குற்றமும் தண்டனையும்!
பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி. 
வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், 5
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப! 10
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!  
11. பெற்றனர்! பெற்றிலேன்!
பாடியவர் : பேய்மகள் இளவெயினியார்.
பாடப்பட்டோன் : சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை : பாடாண். 
துறை :பரிசில் கடாநிலை. 
அரி மயிர்த் திரள் முன்கை
வால் இழை, மட மங்கையர்
வரி மணற் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து
தண் பொருநைப் புனல் பாயும் 5
விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்
பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
வெப் புடைய அரண் கடந்து,
துப்புறுவர் புறம்பெற் றிசினே:
புறம் பொற்ற வய வேந்தன் 10
மறம் பாடிய பாடினி யும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே!
இழை பெற்ற பாடி னிக்குக்
குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே. 15
என ஆங்கு,
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.  
12. அறம் இதுதானோ?
பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். 
துறை : இயன்மொழி. 
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே? 5
13. நோயின்றிச் செல்க!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன் : சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
திணை : பாடாண். 
துறை : வாழ்த்தியல் 
இவன் யார்? என்குவை ஆயின், இவனே,
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், 5
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி 10
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழுமீன், விளைந்த கள்ளின்,
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.  
14. மென்மையும்! வன்மையும்!
பாடியவர் : கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
திணை : பாடாண். 
துறை : இயன்மொழி 
கடுங்கண்ண கொல் களிற்றால்
காப் புடைய எழு முருக்கிப்,
பொன் இயல் புனை தோட்டியான்
முன்பு துரந்து, சமந் தாங்கவும்;
பார்உடைத்த குண்டு அகழி 5
நீர் அழுவம் நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்;
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்! 10
வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை,
புலவு நாற்றத்த பைந்தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும் 15
மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய் ! நின் பாடுநர் கையே.  
15. எதனிற் சிறந்தாய்?
பாடியவர் :கபிலர்.
பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
திணை : பாடாண். 
துறை : இயன்மொழி 
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்,
பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்,
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத் 5
தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;
துளங்கு இயலாற், பணை எருத்தின்,
பா வடியாற்,செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
காப் புடைய கயம் படியினை; 10
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்,
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய, 15
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற் பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, 20
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும! வார் உற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. 25
16. செவ்வானும் சுடுநெருப்பும்!
பாடியவர்: பாண்டரங் கண்ணனார்.
பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
திணை: வஞ்சி. 
துறை; மழபுல வஞ்சி. 
வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை யுருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச்சென்று, அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி
மனை மரம் விறகு ஆகக் 5
கடி துறைநீர்க் களிறு படீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்,
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்,
துணை வேண்டாச் செரு வென்றிப், 10
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து, உருகெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றைக், சுனிப் பாகல்,
கரும்பு அல்லது காடு அறியாப் 15
பெருந் தண்பணை பாழ் ஆக,
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை,
நாம நல்லமர் செய்ய,
ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.  
17. யானையும் வேந்தனும்!
பாடியவர்; குறுங்கோழியூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை; வாகை. 
துறை: அரசவாகை; இயன்மொழியும் ஆம். 
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா வெல்லை,
குன்று, மலை, காடு, நாடு
ஒன்று பட்டு வழி மொழியக்,
கொடிது கடிந்து, கோல் திருத்திப், 5
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி,
10
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
நீடு குழி அகப் பட்ட
15
பீடு உடைய எறுழ் முன்பின்
கோடு முற்றிய கொல் களிறு,
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடி யாங்கு
நீ பட்ட அரு முன்பின்,
20
பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப்,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக் கூறலின்,
உண் டாகிய உயர் மண்ணும்,
சென்று பட்ட விழுக் கலனும், 25
பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்எனவும்,
ஏந்து கொடி இறைப் புரிசை,
வீங்கு சிறை, வியல் அருப்பம்,
இழந்து வைகுதும்.இனிநாம்; இவன்
உடன்று நோக்கினன், பெரிது எனவும், 30
வேற்று அரசு பணி தொடங்குநின்
ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழையென மருளும் பல் தோல், மலையெனத்
தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை, 35
உடலுநர் உட்க வீங்கிக், கடலென
வான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,
இடியென முழங்கு முரசின்,
வரையா ஈகைக் குடவர் கோவே! 40
18. நீரும் நிலனும்!
பாடியவர்; குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம். 
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
5
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
10
வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
15
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; 20
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும் 25
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே. 30
19. எழுவரை வென்ற ஒருவன்!
பாடியவர் : குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 
இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,
மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!
இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
5
பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல,
அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்
தூம்புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து. 10
நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள,
எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்;
இன்ன விறலும் உளகொல், நமக்கு?என,
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக் 15
கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல்வலங் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?  
20. மண்ணும் உண்பர்!
பாடியவர்: குறுங்கோழியூர்கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை; மாந்தரஞ் சேரல் எனவும் குறிப்பர்.
திணை: வாகை. 
துறை: அரச வாகை. 
இரு முந்நீர்க் குட்டமும்,
வியன் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை; 5
அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்;
சோறு படுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்; 10
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறனறி வயவரொடு தெவ்வர் தேய, அப்
பிறர்மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
பகைவர் உண்ணா அருமண் ணினையே; 15
அம்பு துஞ்சும்கடி அரணால்,
அறம் துஞ்சும் செங்கோலையே;
புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,
விதுப்புற அறியா ஏமக் காப்பினை;
அனையை ஆகல் மாறே, 20
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.  
21. புகழ்சால் தோன்றல்!
பாடியவர்: ஐயூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
திணை: வாகை. 
துறை:அரசவாகை. 
புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்!
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை, 5
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
வேங்கை மார்பின் இரங்க வைகலும்
ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர் 10
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையொடு மாயப்,
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!  
22. ஈகையும் நாவும்!
பாடியவர்: குறுங்கோழியூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
திணை:வாகை.
துறை: அரசவாகை. 
தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா வடியால் பணை எருத்தின,
தேன் சிதைந்த வரை போல, 5
மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,
அயறு சோரூம் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்கப்:
பாஅல் நின்று கதிர் சோரும்
10
வான உறையும் மதி போலும்
மாலை வெண் குடை நீழலான்,
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க,
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
15
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்றக்
குற் றானா உலக் கையால்;
கலிச் சும்மை வியல் ஆங்கண்
பொலம் தோட்டுப் பைந் தும்பை 20
மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்,
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரில் பெயர்பு பொங்க;
வாய் காவாது பரந்து பட்ட
வியன் பாசறைக் காப் பாள! 25
வேந்து தந்த பணி திறையாற்
சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்,
ஓங்கு கொல்லியோர், அடு பொருந!
வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!
வாழிய, பெரும! நின் வரம்பில் படைப்பே! 30
நிற் பாடிய அலங்கு செந்நாப்
பிற்பிறர் இசை நுவ லாமை,
ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு, வந்து 35
இனிது காண்டிசின்: பெரும! முனிவிலை,
வேறுபுலத்து இறுக்கும் தானையோடு
சோறுயட நடத்தி; நீ துஞ்சாய் மாறே!  
23. நண்ணார் நாணுவர்!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்.
திணை: வாகை. 
துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம். 
வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்,
களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்!
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர் 5
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள்பதம் ஒழிய வீசிய புலனும்;
வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக், 10
கனைஎரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று,
இன்னும் இன்னபல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன், என,
ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை 15
ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்;
அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்,
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை 20
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளில் அத்தம் ஆகிய காடே.  
24. வல்லுனர் வாழ்ந்தோர்!
பாடியவர்: மாங்குடி கிழவர்:மாங்குடி மருதனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. 
நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,
தென் கடல்திரை மிசைப்பா யுந்து;
திண் திமில் வன் பரதவர்
வெப் புடைய மட் டுண்டு,
5
தண் குரவைச் சீர்தூங் குந்து;
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
10
முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குலவுத் தாழைத்
தீ நீரோடு உடன் விராஅய்,
15
முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
புனலம் புதவின் மிழலையொடு_ கழனிக்
கயலார் நாரை போர்வில் சேக்கும், 20
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்,
குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக், கொடித்தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாது
படாஅச் செலீஇயர், நின்பகைவர் மீனே; 25
நின்னொடு, தொன்றுமூத்த உயிரினும், உயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்ன, நின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,
இரவன் மாக்கள் ஈகை நுவல, 30
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து,
ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர், என்ப, தொல்லிசை,
மலர்தலை உலகத்துத் தோன்றிப் 35
பலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே.  
25. கூந்தலும் வேலும்!
பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. 
துறை: அரசவாகை. 
மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,
நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு,
உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை 5
அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,
பிணியுறு முரசம் கொண்ட காலை,
நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்
சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய!
முலைபொலி அகம் உருப்ப நூறி, 10
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,
அவிர் அறல் கடுக்கும் அம் மென்
குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே.

புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று வேறு பெயர்களும் உண்டு. இந் நூற்பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்க்கை 160. இந் நூலுக்குப் பழைய உரை உள்ளது. அவ்வை துரைசாமிப் பிள்ளை விளக்க உரை வரைந்துள்ளார். 

நூல்

1. இறைவனின் திருவுள்ளம்!
பாடியவர்:பெருந்தேவனார்.பாடப்பட்டோன்: இறைவன் 
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்வண்ண மார்பின் தாருங் கொன்றை;ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்தசீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை 5மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறைபதினெண் கணனும் ஏத்தவும் படுமே; 10எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,நீரறவு அறியாக் கரகத்துத்,தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.  


2. போரும் சோறும்!
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.திணை: பாடாண்.துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம். 
மண் திணிந்த நிலனும்,நிலம் ஏந்திய விசும்பும்,விசும்பு தைவரு வளியும்வளித் தலைஇய தீயும்,தீ முரணிய நீரும், என்றாங்கு 5ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்வலியும், தெறலும், அணியும், உடையோய்!நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் 10யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!வான வரம்பனை! நீயோ, பெரும!அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பைஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப் 15பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,நாஅல் வேத நெறி திரியினும்திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச், 20சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்முத்தீ விளக்கிற், றுஞ்சும்பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!  


3.வன்மையும் வண்மையும்!
பாடியவர்: இரும்பிடர்த் தலையார்.பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.திணை: பாடாண்.துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி. 
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடைநிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,ஏம முரசம் இழுமென முழங்க,நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,தவிரா ஈகைக், கவுரியர் மருக! 5செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ!பொன் னோடைப் புகர் அணிநுதல்துன்னருந் திறல் கமழ்கடா அத்துஎயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில். 10பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்துமருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி!நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;பொலங் கழற்காற்,புலர் சாந்தின் 15விலங் ககன்ற வியன் மார்ப!ஊர் இல்ல, உயவு அரிய,நீர் இல்ல, நீள் இடைய,பார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் 20அம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்உன்ன மரத்த துன்னருங் கவலை,நின்நசை வேட்கையின் இரவலர் வருவர்! அதுமுன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் 25இன்மை தீர்த்தல் வன்மை யானே.  


4. தாயற்ற குழந்தை!
பாடியவர்: பரணர்.பாடப்பட்டோன் : சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி.திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை.சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும். 
வாள்,வலந்தர, மறுப் பட்டனசெவ் வானத்து வனப்புப் போன்றன!தாள், களங்கொளக், கழல் பறைந்தனகொல் ஏற்றின் மருப்புப் போன்றன;தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ, 5நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,கறுழ் பொருத செவ் வாயான்,எருத்து வவ்விய புலி போன்றன;களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய், 10நுதி மழுங்கிய வெண் கோட்டான்,உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,மாக் கடல் நிவந் தெழுதரும் 15செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!அனையை ஆகன் மாறே,தாயில் தூவாக் குழவி போல,ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.  


5. அருளும் அருமையும்!
பாடியவர்: நரிவெரூஉத் தலையார்.பாடப்பட்டோன்: சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.திணை: பாடாண்.துறை: வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.சிறப்பு: பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி. 
எருமை அன்ன கருங்கல் இடை தோறு,ஆனிற் பரக்கும் யானைய, முன்பின்,கானக நாடனை!நீயோ, பெரும!நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;அருளும் அன்பும் நீக்கி நீங்கா 5நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,குழவி கொள் பவரின், ஓம்புமதி!அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.  


6. தண்ணிலவும் வெங்கதிரும்!
பாடியவர்:காரிகிழார்.பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.திணை: பாடாண். துறை :செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.சிறப்பு :பாண்டியனின் மறமாண்பு. 
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்,கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் 5நீர்நிலை நிவப்பின் கீழும், மேலதுஆனிலை உலகத் தானும், ஆனாது,உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம்பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
10செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்,கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து,அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம் 15பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,பணியியர் அத்தை நின் குடையே; முனிவர்முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!இறைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்தநான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! 20வாடுக, இறைவ நின் கண்ணி! ஒன்னார்நாடுசுடு கமழ்புகை எறித்த லானே!செலிஇயர் அத்தை, நின் வெகுளி; வால்இழைமங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே!ஆங்க, வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய 25தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர்ஒண்கதிர் ஞாயிறு போலவும்,மன்னிய, பெரும! நீ நிலமிசை யானே!  


7. வளநாடும் வற்றிவிடும்!
பாடியவர் : கருங்குழல் ஆதனார்.பாடப்பட்டோன் : சோழன் கரிகாற் பெருவளத்தான்.திணை : வஞ்சி. துறை: கொற்றவள்ளை: மழபுல வஞ்சியும் ஆம். 
களிறு கடைஇய தாள்,கழல் உரீஇய திருந்துஅடிக்,கணை பொருது கவிவண் கையால்,கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்துமா மறுத்த மலர் மார்பின், 5தோல் பெயரிய எறுழ் முன்பின்,எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்கொள்ளை மேவலை; ஆகலின், நல்லஇல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ! 10தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்துமீனின் செறுக்கும் யாணர்ப்பயன்திகழ் வைப்பின், பிறர் அகன்றலை நாடே.  


8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!
பாடியவர் : கபிலர்.பாடப்பட்டோன் : சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன் என்பவனும் இவனே.திணை : பாடாண். துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆம். 
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது ,இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்,கடந்து அடு தானைச் சேரலாதனை 5யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்!பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;அகல்இரு விசும்பி னானும்பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே. 10


9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!
பாடியவர் : நெட்டிமையார்.பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.திணை : பாடாண். துறை :இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின் ஆறாவது புறப்பாட்டையும் சேர்த்து ஆய்ந்து, இப் பாண்டியனின் சிறப்பைக் காண்க. 
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என 5அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,முந்நீர் விழவின், நெடியோன் 10நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!  


10. குற்றமும் தண்டனையும்!
பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.திணை : பாடாண்.துறை : இயன்மொழி. 
வழிபடு வோரை வல்லறி தீயே!பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;நீமெய் கண்ட தீமை காணின்,ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், 5தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கைமகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப! 10செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,நெய்தருங் கானல் நெடியோய்!எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!  


11. பெற்றனர்! பெற்றிலேன்!
பாடியவர் : பேய்மகள் இளவெயினியார்.பாடப்பட்டோன் : சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.திணை : பாடாண். துறை :பரிசில் கடாநிலை. 
அரி மயிர்த் திரள் முன்கைவால் இழை, மட மங்கையர்வரி மணற் புனை பாவைக்குக்குலவுச் சினைப் பூக் கொய்துதண் பொருநைப் புனல் பாயும் 5விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்பாடல் சான்ற விறல்வேந் தனும்மேவெப் புடைய அரண் கடந்து,துப்புறுவர் புறம்பெற் றிசினே:புறம் பொற்ற வய வேந்தன் 10மறம் பாடிய பாடினி யும்மே,ஏர் உடைய விழுக் கழஞ்சின்,சீர் உடைய இழை பெற்றிசினே!இழை பெற்ற பாடி னிக்குக்குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே. 15என ஆங்கு,ஒள்அழல் புரிந்த தாமரைவெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.  


12. அறம் இதுதானோ?
பாடியவர் : நெட்டிமையார்.பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.திணை : பாடாண். துறை : இயன்மொழி. 
பாணர் தாமரை மலையவும், புலவர்பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே? 5


13. நோயின்றிச் செல்க!
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.பாடப்பட்டோன் : சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.திணை : பாடாண். துறை : வாழ்த்தியல் 
இவன் யார்? என்குவை ஆயின், இவனே,புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,மறலி அன்ன களிற்றுமிசை யோனே;களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், 5பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!பழன மஞ்ஞை உகுத்த பீலி 10கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,கொழுமீன், விளைந்த கள்ளின்,விழுநீர் வேலி நாடுகிழ வோனே.  


14. மென்மையும்! வன்மையும்!
பாடியவர் : கபிலர்.பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.திணை : பாடாண். துறை : இயன்மொழி 
கடுங்கண்ண கொல் களிற்றால்காப் புடைய எழு முருக்கிப்,பொன் இயல் புனை தோட்டியான்முன்பு துரந்து, சமந் தாங்கவும்;பார்உடைத்த குண்டு அகழி 5நீர் அழுவம் நிவப்புக் குறித்து,நிமிர் பரிய மா தாங்கவும்;ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்;பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்! 10வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை,புலவு நாற்றத்த பைந்தடிபூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன்துவைகறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லதுபிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும் 15மெல்லிய பெரும! தாமே, நல்லவர்க்குஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்குஇருநிலத்து அன்ன நோன்மைசெருமிகு சேஎய் ! நின் பாடுநர் கையே.  


15. எதனிற் சிறந்தாய்?
பாடியவர் :கபிலர்.பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.திணை : பாடாண். துறை : இயன்மொழி 
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப்,பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்;புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல்,வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத் 5தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்;துளங்கு இயலாற், பணை எருத்தின்,பா வடியாற்,செறல் நோக்கின்,ஒளிறு மருப்பின் களிறு அவரகாப் புடைய கயம் படியினை; 10அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடுநிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்,நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய, 15வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்நற் பனுவல் நால் வேதத்துஅருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறைநெய்ம் மலி ஆவுதி பொங்கப், பன்மாண்வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, 20யூபம் நட்ட வியன்களம் பலகொல்?யாபல கொல்லோ? பெரும! வார் உற்றுவிசிபிணிக் கொண்ட மண்கனை முழவின்பாடினி பாடும் வஞ்சிக்குநாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. 25


16. செவ்வானும் சுடுநெருப்பும்!
பாடியவர்: பாண்டரங் கண்ணனார்.பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.திணை: வஞ்சி. துறை; மழபுல வஞ்சி. 
வினை மாட்சிய விரை புரவியொடு,மழை யுருவின தோல் பரப்பி,முனை முருங்கத் தலைச்சென்று, அவர்விளை வயல் கவர்பு ஊட்டிமனை மரம் விறகு ஆகக் 5கடி துறைநீர்க் களிறு படீஇஎல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்,புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்,துணை வேண்டாச் செரு வென்றிப், 10புலவு வாள் புலர் சாந்தின்முருகன் சீற்றத்து, உருகெழு குருசில்!மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,பனிப் பகன்றைக், சுனிப் பாகல்,கரும்பு அல்லது காடு அறியாப் 15பெருந் தண்பணை பாழ் ஆக,ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை,நாம நல்லமர் செய்ய,ஒராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.  


17. யானையும் வேந்தனும்!
பாடியவர்; குறுங்கோழியூர் கிழார்.பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.திணை; வாகை. துறை: அரசவாகை; இயன்மொழியும் ஆம். 
தென் குமரி, வட பெருங்கல்,குண குட கடலா வெல்லை,குன்று, மலை, காடு, நாடுஒன்று பட்டு வழி மொழியக்,கொடிது கடிந்து, கோல் திருத்திப், 5படுவது உண்டு, பகல் ஆற்றி,இனிது உருண்ட சுடர் நேமிமுழுது ஆண்டோர் வழி காவல!குலை இறைஞ்சிய கோள் தாழைஅகல் வயல், மலை வேலி,
10நிலவு மணல் வியன் கானல்,தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின்,தண் தொண்டியோர் அடு பொருந!மாப் பயம்பின் பொறை போற்றாது,நீடு குழி அகப் பட்ட
15பீடு உடைய எறுழ் முன்பின்கோடு முற்றிய கொல் களிறு,நிலை கலங்கக் குழி கொன்று,கிளை புகலத் தலைக்கூடி யாங்குநீ பட்ட அரு முன்பின்,
20பெருந் தளர்ச்சி, பலர் உவப்பப்,பிறிது சென்று, மலர் தாயத்துப்பலர் நாப்பண் மீக் கூறலின்,உண் டாகிய உயர் மண்ணும்,சென்று பட்ட விழுக் கலனும், 25பெறல் கூடும், இவன்நெஞ்சு உறப்பெறின்எனவும்,ஏந்து கொடி இறைப் புரிசை,வீங்கு சிறை, வியல் அருப்பம்,இழந்து வைகுதும்.இனிநாம்; இவன்உடன்று நோக்கினன், பெரிது எனவும், 30வேற்று அரசு பணி தொடங்குநின்ஆற்ற லொடு புகழ் ஏத்திக்,காண்கு வந்திசின், பெரும! ஈண்டியமழையென மருளும் பல் தோல், மலையெனத்தேன்இறை கொள்ளும் இரும்பல் யானை, 35உடலுநர் உட்க வீங்கிக், கடலெனவான்நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாதுகடுஒடுங்கு எயிற்ற அரவுத்தலை பனிப்ப,இடியென முழங்கு முரசின்,வரையா ஈகைக் குடவர் கோவே! 40


18. நீரும் நிலனும்!
பாடியவர்; குடபுலவியனார்.பாடப்பட்டோன் : பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.துறை: முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம். 
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்பரந்து பட்ட வியன் ஞாலம்தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
5பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்பூக் கதூஉம் இன வாளை,நுண் ஆரல், பரு வரால்,குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
10வான் உட்கும் வடிநீண் மதில்;மல்லல் மூதூர் வய வேந்தே!செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
15நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்தகுதி கேள், இனி, மிகுதியாள!நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;உண்டி முதற்றே உணவின் பிண்டம்; 20உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;நீரும் நிலனும் புணரியோர் ஈண்டுஉடம்பும் உயிரும் படைத்திசி னோரே;வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும் 25இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,அடுபோர்ச் செழிய! இகழாது வல்லேநிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;தள்ளா தோர்இவண் தள்ளா தோரே. 30


19. எழுவரை வென்ற ஒருவன்!
பாடியவர் : குடபுலவியனார்.பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.திணை: வாகை. துறை: அரசவாகை. 
இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
5பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி,முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக்குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல,அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்தூம்புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து. 10நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள,எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்;இன்ன விறலும் உளகொல், நமக்கு?என,மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக் 15கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,எழுவர் நல்வலங் கடந்தோய்! நின்கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?  


20. மண்ணும் உண்பர்!
பாடியவர்: குறுங்கோழியூர்கிழார்.பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை; மாந்தரஞ் சேரல் எனவும் குறிப்பர்.திணை: வாகை. துறை: அரச வாகை. 
இரு முந்நீர்க் குட்டமும்,வியன் ஞாலத்து அகலமும்,வளி வழங்கு திசையும்,வறிது நிலைஇய காயமும், என்றாங்குஅவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை; 5அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்;சோறு படுக்கும் தீயோடுசெஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லதுபிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே;திருவில் அல்லது கொலைவில் அறியார்; 10நாஞ்சில் அல்லது படையும் அறியார்;திறனறி வயவரொடு தெவ்வர் தேய, அப்பிறர்மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டுவயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,பகைவர் உண்ணா அருமண் ணினையே; 15அம்பு துஞ்சும்கடி அரணால்,அறம் துஞ்சும் செங்கோலையே;புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,விதுப்புற அறியா ஏமக் காப்பினை;அனையை ஆகல் மாறே, 20மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.  


21. புகழ்சால் தோன்றல்!
பாடியவர்: ஐயூர் மூலங்கிழார்.பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.திணை: வாகை. துறை:அரசவாகை. 
புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்!நிலவரை இறந்த குண்டுகண் அகழி,வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை, 5அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டியஇரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,வேங்கை மார்பின் இரங்க வைகலும்ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர் 10பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!இகழுநர் இசையொடு மாயப்,புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!  


22. ஈகையும் நாவும்!
பாடியவர்: குறுங்கோழியூர் கிழார்.பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.திணை:வாகை.துறை: அரசவாகை. 
தூங்கு கையான் ஓங்கு நடைய,உறழ் மணியான் உயர் மருப்பின,பிறை நுதலான் செறல் நோக்கின,பா வடியால் பணை எருத்தின,தேன் சிதைந்த வரை போல, 5மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,அயறு சோரூம் இருஞ் சென்னிய,மைந்து மலிந்த மழ களிறுகந்து சேர்பு நிலைஇ வழங்கப்:பாஅல் நின்று கதிர் சோரும்
10வான உறையும் மதி போலும்மாலை வெண் குடை நீழலான்,வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க,அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்தஆய் கரும்பின் கொடிக் கூரை,
15சாறு கொண்ட களம் போல,வேறு வேறு பொலிவு தோன்றக்குற் றானா உலக் கையால்;கலிச் சும்மை வியல் ஆங்கண்பொலம் தோட்டுப் பைந் தும்பை 20மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்,சின மாந்தர் வெறிக் குரவைஓத நீரில் பெயர்பு பொங்க;வாய் காவாது பரந்து பட்டவியன் பாசறைக் காப் பாள! 25வேந்து தந்த பணி திறையாற்சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்,ஓங்கு கொல்லியோர், அடு பொருந!வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்!வாழிய, பெரும! நின் வரம்பில் படைப்பே! 30நிற் பாடிய அலங்கு செந்நாப்பிற்பிறர் இசை நுவ லாமை,ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ!மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடேபுத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு, வந்து 35இனிது காண்டிசின்: பெரும! முனிவிலை,வேறுபுலத்து இறுக்கும் தானையோடுசோறுயட நடத்தி; நீ துஞ்சாய் மாறே!  


23. நண்ணார் நாணுவர்!
பாடியவர்: கல்லாடனார்.பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்.திணை: வாகை. துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம். 
வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்,களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்!கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர் 5கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்கொள்பதம் ஒழிய வீசிய புலனும்;வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக், 10கனைஎரி உரறிய மருங்கும்; நோக்கி,நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று,இன்னும் இன்னபல செய்குவன், யாவரும்துன்னல் போகிய துணிவினோன், என,ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை 15ஆலங் கானத்து அமர்கடந்து அட்டகால முன்ப! நின் கண்டனென் வருவல்;அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்,சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணைபூளை நீடிய வெருவரு பறந்தலை 20வேளை வெண்பூக் கறிக்கும்ஆளில் அத்தம் ஆகிய காடே.  


24. வல்லுனர் வாழ்ந்தோர்!
பாடியவர்: மாங்குடி கிழவர்:மாங்குடி மருதனார் எனவும் பாடம்.பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.திணை: பொதுவியல்.துறை: பொருண்மொழிக் காஞ்சி. 
நெல் அரியும் இருந் தொழுவர்செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,தென் கடல்திரை மிசைப்பா யுந்து;திண் திமில் வன் பரதவர்வெப் புடைய மட் டுண்டு,
5தண் குரவைச் சீர்தூங் குந்து;தூவற் கலித்த தேம்பாய் புன்னைமெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
10முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்இரும் பனையின் குரும்பை நீரும்,பூங் கரும்பின் தீஞ் சாறும்ஓங்கு மணற் குலவுத் தாழைத்தீ நீரோடு உடன் விராஅய்,
15முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇயஒம்பா ஈகை மாவேள் எவ்விபுனலம் புதவின் மிழலையொடு_ கழனிக்கயலார் நாரை போர்வில் சேக்கும், 20பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்,குப்பை நெல்லின், முத்தூறு தந்தகொற்ற நீள்குடைக், கொடித்தேர்ச் செழிய!நின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாதுபடாஅச் செலீஇயர், நின்பகைவர் மீனே; 25நின்னொடு, தொன்றுமூத்த உயிரினும், உயிரொடுநின்று மூத்த யாக்கை யன்ன, நின்ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்தவாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த,இரவன் மாக்கள் ஈகை நுவல, 30ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்தியதண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து,ஆங்குஇனிது ஒழுகுமதி, பெரும! ஆங்கதுவல்லுநர் வாழ்ந்தோர், என்ப, தொல்லிசை,மலர்தலை உலகத்துத் தோன்றிப் 35பலர்செலச் செல்லாது, நின்று விளிந் தோரே.  


25. கூந்தலும் வேலும்!
பாடியவர்: கல்லாடனார்.பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.திணை: வாகை. துறை: அரசவாகை. 
மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகலஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு,உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை 5அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,பிணியுறு முரசம் கொண்ட காலை,நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய!முலைபொலி அகம் உருப்ப நூறி, 10மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,அவிர் அறல் கடுக்கும் அம் மென்குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே.

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.