LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வே.ம. அருச்சுணன்

புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு

பூத்துக்குலுங்கும்

புத்தாண்டே வருகவே

புதுமைகள் சூழந்தே

புண்ணிய பூமியில்

புனித வாழ்வைத் தருகவே........!

 

2014  ஆம் ஆண்டு

மனங்கள் குலுக்கின

கண்கள் குளமாகி

இதயங்கள் சிதறின

அந்தக் கணங்கள்

மறக்க முடியுமா?

 

மாயமாகிப்போன விமானம்

பீரங்கித் தாக்குதல்

வானில் சிதறிய செல்வங்கள்

மீண்டும் வருவார்களா நம்மோடு

மகிழ்வோடு உறவாடுவார்களா?

அந்த மரணத்துளிகள் 

கனவிலும் வேண்டாம்

ஆத்மாக்கள் அமைதி பெறட்டும்.........!

 

நம்பிக்கை ஒளிதரும்

2015 ஆம் ஆண்டே

நலம் சேர்க்க வாரீர்

நாடும் மக்களும் வளம் பெற

மலர் தூவி வாழ்த்துக........!

 

தமிழர்கள் இங்கே

ஒற்றுமையில் தலைதூக்கி

சோதனைகளைப் பொடியாக்கி

தன்மானச் சிங்கங்களாய் வீர்கொண்டு

தமிழ் காக்கும் மொழியினராய்

சமயம் வாழ்விக்கும் நல்லோராய்

பொருளியலில் காலூண்றி

வாழ்தல் வேண்டும்..........!

 

நாட்டுச் சுதந்திரத்தில்

தமிழர் பங்கு பெரிதென்போம்

நாட்டு வளர்ச்சியில் முதுகெழும்பாய்

பல்லாண்டு துடிப்பாய் இயங்கிவிட்டோம்

நாடு வளர்ந்துவிட்டது

ஏணியாய் இன்னும் நாம் யாசகம்

புரிதல் அநீதியன்றோ..........?

 

அரசியலில் சுழியம் என்போம்

நாளுக்கொன்றும் ஆளுக்கொன்றும்

பேசியே கொல்கின்றார்

நம்பியவர் நட்டாற்றில்

பத்துவிரல்கள் மூலதனம்

சுயமுன்னேற்றம் வேண்டி

உழைப்போம் உயர்வோம்..........!

 

மாற்றம் ஒன்றே மாறாதது

வாழ்வின் நீதியை ஏற்போம்

வாழ்வை மாற்றுவோம்

சந்ததி நிலைப்பதற்கு

சிந்தனை செய்வோம்

இலக்கு வகுத்தல் நீதியென்போம்

கூடிவாழ்தல் கோடி நன்மை என்போம்

சாதனைப் படைக்கப் புத்தாண்டில்

உறுதி கொள்வோம்..........!

 

புத்தாண்டே புனித வாழ்வைத் தந்திடு

இனம் காக்க பூரிப்பாய் வாழ்த்திடு.......!

 

- வே.ம.அருச்சுணன்

by Swathi   on 27 Dec 2014  1 Comments
Tags: புத்தாண்டு   புத்தாண்டு கவிதை   Puthandu Kavithai   New Year Kavithai           
 தொடர்புடையவை-Related Articles
புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு
கருத்துகள்
31-Jan-2015 00:40:12 prasanth said : Report Abuse
Iசூப்பர் கவிதை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.