|
||||||||
புதுமைப்பெண்கள் |
||||||||
மதுக்கடை ஒழியாத கோலம் மதியைக் கெடுக்கும் அலங்கோலம்
மயக்கும் ஊசி நாடும் ஆலோலம்
மங்கையும் இசை(த்)தலோ புதுமை
மனதில் ஏனிந்த சிறுமை!
பிள்ளைப் பெற்றாலழகு போகுமெனப்
பிதற்றும் சிலபெண்கள் உயிரழகைப்
பிளக்கும் மதுமோகத்தில் திளைத்து
பித்தாகித் திரிவதோ மண்ணின்புதுமை!
நினைப்பொன்று செய்கைவேறாய்
நித்தமும் நாடகத்தொடர்களாய்
நிழல்களை நம்பியே தடம்மாறும்
நிதர்சனத்தில் இன்று புதுமைப்பெண்கள்
... கவிமலர்(நாகினி)
|
||||||||
by on 20 Jan 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|