LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயில்-18 அதிவேக ரயிலின் பெயர் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' - அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிப்பு

அதிவேக ரயில்-18 க்கு 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதனை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்து உள்ளார்.
இந்திய ரயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அதிவேக ரயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில், கடந்த ஆண்டில் பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்கள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதற்காக அதிவிரைவு ரயில் பெட்டிகள் தயாரிக்க வெளிநாட்டு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது.
ஆனால், வெறும் 315 பெட்டிகளை தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வராததால் வெளிநாட்டு தொழில் நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. 
முதல்கட்டமாக ரூ.200 கோடி  மதிப்பீட்டில் இரு ரயில்களுக்கான பெட்டிகளை சென்னை ஐ.சி.எப்.  இணைப்புப் பெட்டி தொழிற் சாலையில் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.
இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி நகரில் உள்ள இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் ரூ. 97 கோடி செலவில் 16 பெட்டிகளை கொண்ட அதிவிரைவு ரயிலும் 18 மாதங்களில் தயாரிக்கப்பட்டது. 
முன்னதாக ‘ரயில் 18’ என பெயரிடப்பட்டு இருந்த இந்த ரயில் டெல்லி-வாரணாசி நகரங்களுக்கு இடையில் செயல்பட உள்ளது. இந்த ரயிலின் முதல் பயணிகள் சேவையை பிரதமர் மோடி விரைவில் கொடியசைத்து தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ள இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்  தெரிவித்து உள்ளார்

by Mani Bharathi   on 27 Jan 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஆறாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் டிசம்பர் 28 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு
இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்
இந்திய-சீன  தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள் இந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை!
‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்! ‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்!
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்! முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.