கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழையும் தருமபுரி மாவட்டம் அரூரில் 331 மி.மீ. மழையும் பெய்துள்ளன . இதை தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஃபெங்கல் புயல் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே கடந்த 30-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு முழுமையாகக் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை,காரைக்கால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
ஊத்தங்கரையில் குறுகிய நேரத்தில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளானார்கள்.
|