LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஒட்டக் கூத்தர் நூல்கள்

இராசராசசோழன் உலா - மூவருலா-1

 

நூல்
புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச்
செயல்வண்ணங் காட்டிய சேயோன் - உயிரனைத்தும் 1
காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவி
பூட்டுந் தனியாழிப் பொற்றேரோன் - ஓட்டி 2
அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனி
புறவாழி முட்டப் புரந்தோன் - மறையோற்குப் 3
பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும்
நாவிற் பழுதஞ்சி நல்கினோன் - வாவியிற் 4
புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும்
ஒக்க வொருகாலத் தூட்டினோன் - புக்கால் 5
மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப்
புறாநினை புக்க புகழோன் - அறாநீர்த் 6
தரங்கக் கடலோழுந் தன்பெயரே யாகத்
துரங்கப் பசுநாடித் தொட்டோன் - வரங்கொள் 7
சுரநதி தன்பெய ராகச் சுருதி
வரனதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர் 8
மல்லன் மரபை ரகுவின் மரபென்று
சொல்ல வுலகளித்த தொல்லையோன் - செல்லலால் 9
வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாய
இந்திரனை யேறாக்கி யேறினான் - முந்தும் 10
ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர்
வருதேரால் வான்பகையை மாய்த்தோன் - பொருது 11
சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு
மலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே 12
வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத்
தூங்கும் புரிசை துணிந்தகோன் - வீங்கு 13
குடகடற்குச் சார்பு குணகடலே யாக்கும்
வடகடற்குந் தென்கடற்கு மன்னன் - தரையின் 14
கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்ப
வரையெறிந்த மன்னர்க்கு மன்னன் - தரையின் 15
பெருமகளைத் தீவேட்ட பின்னருஞ் சேடன்
திருமகளைக் கல்யாணஞ் செய்தோன் - பரநிருபர் 16
கன்மலை மார்புங் கடவுள் வடமேருப்
பொன்மலை மார்பும் புலிபொறித்தோன் - சொன்மலைய 17
நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் காற்றளையை விட்டகோன் - புல்லார் 18
தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறும்
தழும்புடைய சண்டப்ர சண்டன் - எழும்பகல் 19
ஈழ மெழுநூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து
வேழந் திறைகொண்டு மீண்டகோன் - சூழி 20
மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டித்
துதகையைத் தீத்த வுரவோன் - முதுவானக் 21
கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும்
மங்கையுட னாடு மரபினோன் - பொங்கி 22
அலைவீசி வேலை யனைத்தினும்போய்த் தெம்மீன்
வலைவீசி வாரிய மன்னன் - கொலையானை 23
பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணி
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன் - ஒப்பொருவர் 24
பாட வரிய பரணி பசுடொன்றின்
கூடல சங்கமத்துக் கொண்டகோன் - நாடும் 25
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றி
உலகை முன்காத்த வுரவோன் - பலவும் 26
தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப்
பரணி புனைந்த பருதி - முரணில் 27
புரந்தர னேமி பொருவு மகில
துரந்தரன் விக்கிரம சோழன் - பரந்தபனென் 28
றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்து
சேய பெரிய திருக்குலத்து - நாயகன் 29
சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும்
மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய 30
மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும்
சூளிகையு மெத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான் 31
கோயிற் றிருக்காமக் கோட்டமு மக்கோயில்
வாயிற் றிருச்சுற்று மாளிகையும் - தூயசெம் 32
பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்தும்
முன்னிற் கடலகழின் மூழ்குவித்த - சென்னி 33
திருமகன் சீராச ராசன் கதிரோன்
மருமக னாகி மறித்தும் - திருநெடுமால் 34
ஆதிப் பிறவி யனைத்தினு மும்பர்க்குப்
பாதிப் பகைதடிந்து பாதிக்கு - மேதினியிற் 35
செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்க
வந்தான் மனுவங்க்ச மாமேரு - முந்தி 36
உடுத்த திகிரிப் பதினா லுலகும்
அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரிக் 37
கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும்
தண்ணென் கவிகைச் சனநாதன் - எண்ணும் 38
தவன குலதிலகன் றன்பெருந் தேவி
புவன முழுதுடைய பூவை - அவனியில் 39
எண்பெரு மாதிரத்து மேறு முடனாணைப்
பெண்பெருமா ளந்தப் புரப்பெருமாள் - மண்பரவ 40
ஓகை விளைக்கு முபய குலரத்னத்
தோகை யுடனே துயிலெழுந் - தாகிய 41
மூர்த்தத் தனந்த முரசார்ப்பக் காவிரித்
தீர்த்தத் தபிடேகஞ் செய்தருளிப் - போர்த்திகிரி 42
மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும்
காலைக் கடவ கடன்கழித்து - மூலப் 43
பெரும்பே ரணிதம் பிதாமகன் காலை
வரும்பே ரணியென்ன வாய்ப்ப - நிரம்பப் 44
பவளச் சடையோன் பணித்த படியே
தவளத்ரி புண்டரஞ் சாத்திக் - குவளைப்பூங் 45
கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன்
போர்க்கோலங் காண்பானே போற்கொண்டு - பார்த்திபர்தம் 46
தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம்
தில்லைதா திருநடனஞ் சிந்தித்து - வல்லவர் 47
சூழச் சுருதி யனைத்துந் தொகுத்தெடுப்ப
வேழப் பெருமானை மேல்கொண்டு - வாழி 48
அரச வலம்புரி யார்ப்ப வதன்பின்
முரசொரு மூன்று முழங்கத் - திரையின் 49
சுடற்பொற் கவரி யெழப்பொங்கத் தொங்கற்
கடவுட் கவிகை கவிப்ப - புடவியின் 50
மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோன்
தீட்டுங் கொடிப்புலியாய்ச் சேவிப்ப - வாட்டானைத் 51
தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்து
மன்னரு மாளவரு மாகதரும் - பின்னரும் 52
காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்ட
பூந்தார் நரபாலர் முன்போத - வேந்தர் 53
பொருவாத பூபால கோபால னென்னும்
திருநாம நின்று சிறந்த - வருநாளில் 54
தென்மாடக் கூடற் சிறைவிட்ட கார்புகார்ப்
பொன்மாட வீதிப் பொடியடக்கத் - தன்மீது 55
கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன்
பொன்மாரி பெய்யும் புயலேவப் - பின்னரும் 56
காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும்
பூமாரி கௌமாரி முன்பொழிய - யாமந்தீர் 57
காலை வெயிலொதுங்கக் கார்களாற் கார்களும்போய்
மாலை வெயிலால் மறித்தொதுங்கக் - கோலப் 58
பெருங்குற் றுடைவாளப் பேரொளி மேரு
மருங்கிற் பெரும்புலி மான - நெருங்கிய 59
கோளி னொழுங்கு மழுங்கக் குலரத்ன
ஒளி மகர வொளியெறிப்பத் - தோளில் 60
இருபொறை தீரு மிருபாப் பரசும்
இருதொடி யாயகொல் லென்ன - வரரத்னம் 61
தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ் 
மாமேரு வென்ன முடிவயங்கப் - பூமேற் 62
புடைநிலவுந் தங்கள் புகழ்நிலவின் மேலே
குடைநிலவுஞ் சக்ரகிரி கோல - உடையதன் 63
கைவைத் தருளாமே தாமே கடன்கழிக்கும்
தெய்வப் படையைந்துஞ் சேவிப்பப் - பெய்கணைத் 64
தூணிப் புறத்தோடுந் தோளிற் சிலையோடும்
பூணித் தனங்கவேண் முன்போத - மாணிக்கக் 65
கோவையான் முக்குவட்டுக் குன்றா யொருதிருப்
பாவையாற் கொல்லிப் பனிவரையாய் - ஓவாது 66
செய்ய தமிழ்முழங்கத் தெய்வப் பொதியிலாய்
வெய்ய புலிமுழங்க மேருவாய் - வையகஞ்சூழ் 67
கோர முடன்பொத நேமிப் பொலன்குன்றாய்
வார்சுவரி யாலிமய மால்வரையாய் - வேரி 68
விடுங்குழையார் சென்னி மிலைச்சிய சென்னி
கொடுங்குழையார் வீதி குறுக - நடுங்காமல் 69
குழாங்கள்
விண்ணாடு காத்த முககுந்தன் மீண்டநாள்
மண்ணாடு கண்ட மடந்தையரும் - நண்ணார்மேல் 70
சோளன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ர
வாள கிரியர மங்கையரும் - தோளிணையால் 71
கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்த
ஆழியிற் கொண்ட வரம்பையரும் - ஊழியின் 72
சீத்த வரையிற் றிருக்கொற்ற வில்லொன்றால்
வாய்த்த வரையர மாதரும் - போய்த்தனியே 73
கோதண்டங் கொண்டிரு சேடி யுடன்கொண்ட
வேதண்டலோக விமலையரும் - காதலால் 74
தந்த பணிபதி தன்மகளைச் சேவித்து
வந்த கடவுண் மடந்தையரும் - பந்தாடும் 75
மேரு வரையிற் புலிபொறித்து மீண்டநாள்
வாரும் வரையர மாதரும் - வீரவேள் 76
வாங்கயிலிற் கூரிய கண்ணா ரொருவளவன்
தூங்கெயிலிற் கைக்கொண்ட தோகையரும் - பாங்கின் 77
நிதியோடுங் கூட நிதியோ னளகைப்
பதியோடுங் கொண்டார் பலரும் - முதலாய 78
சாய லரமகளிர் தந்தந் திருமரபில்
கோயி லுரிமைக் சூழாநெருங்கி - வாயிலும் 79
மாளிகையுஞ் சாலையு மாலயமு மண்டபமும்
சூளிகையு மெம்மருங்குந் தோரணமும் - சாளரமும் 80
தெற்றியு மாடமு மாடரங்குஞ் செய்குன்றும்
சுற்றிய பாங்கருந் தோன்றாமே - பற்றி 81
மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர் - தயங்கிழையீர் 82
குழாங்களின் கூற்று
தற்கோடி யோரிரண்டு கொண்டு சதகோடி
கற்கோடி செற்ற சிலைகாணீர் - முற்கோலி 83
வட்ட மகோததி வேவ வொருவாளி
விட்ட திருக்கொற்ற விற்காணீர் - வெட்டிச் 84
சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய 85
மதியெறிந்து வல்லேற்று வானெறிந்து தூங்கும்
பதியெறிந்த கொற்றவாள் பாரீர் - உதியர் 86
இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட
கடப்ப முதுமுரசங் காணீர் - கொடுப்பத் 87
தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக்
கரைகொண்ட போர்முரசங் காணீர் - சரதப் 88
பவித்ர விசயப் படைப்பரசு ராமன்
கவித்த வபிடேகங் காணீர் - தவித்துலகில் 89
மூவெழுகா லெக்கோக் களையு முடித்தவனி
மூவெழுகாற் கொண்ட முடிபாரீர் - தாவி 90
வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண்
பரப்பு மொருவேங்கை பாரீர் - புரக்கநின் 91
றூடம் பரமடங்க வோங்கி யுயரண்ட
கூடம் பொருவுங் குடைபாரீர் - கூடற் 92
பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போதப் பின்பு
வரும்பொருமாள் வந்தனன் வாரீர் - இருங்கடற் 93
றோன்றருக்க மண்டலமுந் தோற்க வுலகங்கள்
மூன்றுக்குஞ் சூடி முடிபாரீர் - தோன்ற 94
அணைத்தரு காயிர மாயிர மாகப்
பணைத்த பணிவலயம் பாரீர் - அணைக்கட் 95
சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன்
பரித்த மணியாரம் பாரீர் - தரிந்தருள 96
வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்ட
பாண்டியன் கட்டு வடம்பாரீர் - மீண்டும் 97
திருந்து மதனன் றிருத்தாதை செவ்வி
இருந்த படிபாரீ ரென்பார் - பெருந்தேவர் 98
முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த
எக்கொடியு முன்ன ரெடுத்துளவால் - அக்கொடியால் 99
தொல்லா ரணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர்
எல்லாருங் காணு மினவென்பார் - புல்லிய 100
நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார்
போர்ப்பூ முடிதடிந்து போக்கியபின் - போர்ப்பூவில் 101
மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரானுவந்த
தாதகி யொன்றூமே சார்பென்பார் - மீது 102
பரந்த வவுணர் சிறைப்படும தெண்ணி
இரந்தன கொண்டன வென்று - புரந்து 103
தனிச்சே வகம்பூமி தன்னதே யாக
இனிச்சே வடிவிடா ளெனபார் - பனிச்சாரல் 104
மண்டு மலையால் வருந்தா வகைவருந்திப்
பண்டு கலக்கிய பாற்கடலுட் - கொண்டதோர் 105
செங்கோ கனகை திருமார்பி லன்றியே
எங்கோ விருப்பா ளினியென்பார் - நங்காய் 106
திருப்பதி மாபதி யித்திரு மார்பில் 
இருப்பது காட்டுமி னென்பார் - சிரித்தெதிரே 107
அங்கட் கமலை யமலன் பெருந்தேவி
கங்கட் புலனாயி னன்றென்பார் - நங்கைமீர் 108
கண்ணாகுந் தாமரையுங் கைதொழுதே மெம்மறையும்
பண்ணாகுஞ் செந்தா மரைபணிந்தேம் - வண்ணத் 109
தொடித்தா மரையுந் தொழுதன நாபிக்
கடித்தா மரைதொழுவேங் காட்டீர் - பிடித்தென்ன 110
அத்தா மரைதன் னடித்தா மரைக்கன்றி
மைத்தா மரைக்கொளிதோ மற்றென்பார் - உய்த்தால் 111
ஒருபொருந் தாதகி தோய்சுரும்பை யோட்டற்
கிருபெருஞ் சாமரையு மென்பார் - அருவி 112
அருகெய்த வொட்டா வயிரா பதத்தின்
இருகன்ன சாமரையு மென்பார் - தெருவத்துத் 113
தங்களின் மாறாடி யுள்ளந் தடுமாறித்
திங்க ணுதலார் தெருமரலும் - அங்கவரில் 114

நூல்

புயல்வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச்செயல்வண்ணங் காட்டிய சேயோன் - உயிரனைத்தும் 1
காட்டும் பதின்மரினுங் காசிப னேழ்புரவிபூட்டுந் தனியாழிப் பொற்றேரோன் - ஓட்டி 2
அறவாழி மைந்தன்மே லூர்ந்தோ னவனிபுறவாழி முட்டப் புரந்தோன் - மறையோற்குப் 3
பூவிற் கிழத்தியையும் பூமிக் கிழத்தியையும்நாவிற் பழுதஞ்சி நல்கினோன் - வாவியிற் 4
புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும்ஒக்க வொருகாலத் தூட்டினோன் - புக்கால் 5
மறானிறை யென்று சரணடைந்த வஞ்சப்புறாநினை புக்க புகழோன் - அறாநீர்த் 6
தரங்கக் கடலோழுந் தன்பெயரே யாகத்துரங்கப் பசுநாடித் தொட்டோன் - வரங்கொள் 7
சுரநதி தன்பெய ராகச் சுருதிவரனதி சாபத்தை மாய்த்தோன் - தரணிபர் 8
மல்லன் மரபை ரகுவின் மரபென்றுசொல்ல வுலகளித்த தொல்லையோன் - செல்லலால் 9
வந்திரந்த வானவர்க்குத் தானவர்தம் போர்மாயஇந்திரனை யேறாக்கி யேறினான் - முந்தும் 10
ஒருதேரா லையிரண்டு தேரோட்டி யும்பர்வருதேரால் வான்பகையை மாய்த்தோன் - பொருது 11
சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டுமலையால் வழிபட வைத்தோன் - நிலையாமே 12
வாங்குந் திருக்கொற்ற வாளொன்றின் வாய்வாய்ப்பத்தூங்கும் புரிசை துணிந்தகோன் - வீங்கு 13
குடகடற்குச் சார்பு குணகடலே யாக்கும்வடகடற்குந் தென்கடற்கு மன்னன் - தரையின் 14
கரையெறிந்த பொன்னி கடலேழுங் கோப்பவரையெறிந்த மன்னர்க்கு மன்னன் - தரையின் 15
பெருமகளைத் தீவேட்ட பின்னருஞ் சேடன்திருமகளைக் கல்யாணஞ் செய்தோன் - பரநிருபர் 16
கன்மலை மார்புங் கடவுள் வடமேருப்பொன்மலை மார்பும் புலிபொறித்தோன் - சொன்மலைய 17
நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்குவில்லவன் காற்றளையை விட்டகோன் - புல்லார் 18
தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறும்தழும்புடைய சண்டப்ர சண்டன் - எழும்பகல் 19
ஈழ மெழுநூற்றுக் காதமுஞ் சென்றெறிந்துவேழந் திறைகொண்டு மீண்டகோன் - சூழி 20
மதகயத்தா லீரொன் பதுசுரமு மட்டித்துதகையைத் தீத்த வுரவோன் - முதுவானக் 21
கங்கையு நன்மதையுங் கௌதமியுங் காவிரியும்மங்கையுட னாடு மரபினோன் - பொங்கி 22
அலைவீசி வேலை யனைத்தினும்போய்த் தெம்மீன்வலைவீசி வாரிய மன்னன் - கொலையானை 23
பப்பத் தொருபசிப்பேய் பற்ற வொருபரணிகொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன் - ஒப்பொருவர் 24
பாட வரிய பரணி பசுடொன்றின்கூடல சங்கமத்துக் கொண்டகோன் - நாடும் 25
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியு மாற்றிஉலகை முன்காத்த வுரவோன் - பலவும் 26
தரணி யொருகவிகை தங்கக் கலிங்கப்பரணி புனைந்த பருதி - முரணில் 27
புரந்தர னேமி பொருவு மகிலதுரந்தரன் விக்கிரம சோழன் - பரந்தபனென் 28
றாய பெயர்கொண் டகிலாண் டமும்புரந்துசேய பெரிய திருக்குலத்து - நாயகன் 29
சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும்மற்றும் பலபல மண்டபமும் - சுற்றிய 30
மாளிகையும் பீடிகையு மாடமுங் கோபுரமும்சூளிகையு மெத்தெருவுந் தோரணமும் - ஆளுடையான் 31
கோயிற் றிருக்காமக் கோட்டமு மக்கோயில்வாயிற் றிருச்சுற்று மாளிகையும் - தூயசெம் 32
பொன்னிற் குயிற்றிப் புறம்பிற் குறும்பனைத்தும்முன்னிற் கடலகழின் மூழ்குவித்த - சென்னி 33
திருமகன் சீராச ராசன் கதிரோன்மருமக னாகி மறித்தும் - திருநெடுமால் 34
ஆதிப் பிறவி யனைத்தினு மும்பர்க்குப்பாதிப் பகைதடிந்து பாதிக்கு - மேதினியிற் 35
செந்தா மரையா டிருமார்பில் வீற்றிருக்கவந்தான் மனுவங்க்ச மாமேரு - முந்தி 36
உடுத்த திகிரிப் பதினா லுலகும்அடுத்த வரராச ராசன் - அடற்றிகிரிக் 37
கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும்தண்ணென் கவிகைச் சனநாதன் - எண்ணும் 38
தவன குலதிலகன் றன்பெருந் தேவிபுவன முழுதுடைய பூவை - அவனியில் 39
எண்பெரு மாதிரத்து மேறு முடனாணைப்பெண்பெருமா ளந்தப் புரப்பெருமாள் - மண்பரவ 40
ஓகை விளைக்கு முபய குலரத்னத்தோகை யுடனே துயிலெழுந் - தாகிய 41
மூர்த்தத் தனந்த முரசார்ப்பக் காவிரித்தீர்த்தத் தபிடேகஞ் செய்தருளிப் - போர்த்திகிரி 42
மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும்காலைக் கடவ கடன்கழித்து - மூலப் 43
பெரும்பே ரணிதம் பிதாமகன் காலைவரும்பே ரணியென்ன வாய்ப்ப - நிரம்பப் 44
பவளச் சடையோன் பணித்த படியேதவளத்ரி புண்டரஞ் சாத்திக் - குவளைப்பூங் 45
கார்க்கோல மாடியிற் காண்பான் மகன்காமன்போர்க்கோலங் காண்பானே போற்கொண்டு - பார்த்திபர்தம் 46
தொல்லைத் திருமரபுக் கெல்லாந் தொழுகுலமாம்தில்லைதா திருநடனஞ் சிந்தித்து - வல்லவர் 47
சூழச் சுருதி யனைத்துந் தொகுத்தெடுப்பவேழப் பெருமானை மேல்கொண்டு - வாழி 48
அரச வலம்புரி யார்ப்ப வதன்பின்முரசொரு மூன்று முழங்கத் - திரையின் 49
சுடற்பொற் கவரி யெழப்பொங்கத் தொங்கற்கடவுட் கவிகை கவிப்ப - புடவியின் 50
மீட்டுங் குறையவுணர் போர்கருதி விண்ணவர்கோன்தீட்டுங் கொடிப்புலியாய்ச் சேவிப்ப - வாட்டானைத் 51
தென்னருஞ் சேரலருஞ் சிங்களருங் கொங்கணத்துமன்னரு மாளவரு மாகதரும் - பின்னரும் 52
காந்தாரர் காலிங்கர் கௌசல ருள்ளிட்டபூந்தார் நரபாலர் முன்போத - வேந்தர் 53
பொருவாத பூபால கோபால னென்னும்திருநாம நின்று சிறந்த - வருநாளில் 54
தென்மாடக் கூடற் சிறைவிட்ட கார்புகார்ப்பொன்மாட வீதிப் பொடியடக்கத் - தன்மீது 55
கன்மாரி பெய்யும் பிழையாற் கடவுளர்கோன்பொன்மாரி பெய்யும் புயலேவப் - பின்னரும் 56
காமாரி சேயென்ற காக்கு மெழுவரினும்பூமாரி கௌமாரி முன்பொழிய - யாமந்தீர் 57
காலை வெயிலொதுங்கக் கார்களாற் கார்களும்போய்மாலை வெயிலால் மறித்தொதுங்கக் - கோலப் 58
பெருங்குற் றுடைவாளப் பேரொளி மேருமருங்கிற் பெரும்புலி மான - நெருங்கிய 59
கோளி னொழுங்கு மழுங்கக் குலரத்னஒளி மகர வொளியெறிப்பத் - தோளில் 60
இருபொறை தீரு மிருபாப் பரசும்இருதொடி யாயகொல் லென்ன - வரரத்னம் 61
தாமே குயின்று தடங்கோளு நாளுஞ்சூழ் மாமேரு வென்ன முடிவயங்கப் - பூமேற் 62
புடைநிலவுந் தங்கள் புகழ்நிலவின் மேலேகுடைநிலவுஞ் சக்ரகிரி கோல - உடையதன் 63
கைவைத் தருளாமே தாமே கடன்கழிக்கும்தெய்வப் படையைந்துஞ் சேவிப்பப் - பெய்கணைத் 64
தூணிப் புறத்தோடுந் தோளிற் சிலையோடும்பூணித் தனங்கவேண் முன்போத - மாணிக்கக் 65
கோவையான் முக்குவட்டுக் குன்றா யொருதிருப்பாவையாற் கொல்லிப் பனிவரையாய் - ஓவாது 66
செய்ய தமிழ்முழங்கத் தெய்வப் பொதியிலாய்வெய்ய புலிமுழங்க மேருவாய் - வையகஞ்சூழ் 67
கோர முடன்பொத நேமிப் பொலன்குன்றாய்வார்சுவரி யாலிமய மால்வரையாய் - வேரி 68
விடுங்குழையார் சென்னி மிலைச்சிய சென்னிகொடுங்குழையார் வீதி குறுக - நடுங்காமல் 69

குழாங்கள்
விண்ணாடு காத்த முககுந்தன் மீண்டநாள்மண்ணாடு கண்ட மடந்தையரும் - நண்ணார்மேல் 70
சோளன் பரிசார்ந்தே சூழ வருஞ்சக்ரவாள கிரியர மங்கையரும் - தோளிணையால் 71
கோழியிற் சோழ குலத்தொருவன் முன்கடைந்தஆழியிற் கொண்ட வரம்பையரும் - ஊழியின் 72
சீத்த வரையிற் றிருக்கொற்ற வில்லொன்றால்வாய்த்த வரையர மாதரும் - போய்த்தனியே 73
கோதண்டங் கொண்டிரு சேடி யுடன்கொண்டவேதண்டலோக விமலையரும் - காதலால் 74
தந்த பணிபதி தன்மகளைச் சேவித்துவந்த கடவுண் மடந்தையரும் - பந்தாடும் 75
மேரு வரையிற் புலிபொறித்து மீண்டநாள்வாரும் வரையர மாதரும் - வீரவேள் 76
வாங்கயிலிற் கூரிய கண்ணா ரொருவளவன்தூங்கெயிலிற் கைக்கொண்ட தோகையரும் - பாங்கின் 77
நிதியோடுங் கூட நிதியோ னளகைப்பதியோடுங் கொண்டார் பலரும் - முதலாய 78
சாய லரமகளிர் தந்தந் திருமரபில்கோயி லுரிமைக் சூழாநெருங்கி - வாயிலும் 79
மாளிகையுஞ் சாலையு மாலயமு மண்டபமும்சூளிகையு மெம்மருங்குந் தோரணமும் - சாளரமும் 80
தெற்றியு மாடமு மாடரங்குஞ் செய்குன்றும்சுற்றிய பாங்கருந் தோன்றாமே - பற்றி 81
மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கிஉயங்கி யொருவர்க் கொருவர் - தயங்கிழையீர் 82

குழாங்களின் கூற்று
தற்கோடி யோரிரண்டு கொண்டு சதகோடிகற்கோடி செற்ற சிலைகாணீர் - முற்கோலி 83
வட்ட மகோததி வேவ வொருவாளிவிட்ட திருக்கொற்ற விற்காணீர் - வெட்டிச் 84
சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழவழிவிட்ட வாள்காண வாரீர் - ஒழிய 85
மதியெறிந்து வல்லேற்று வானெறிந்து தூங்கும்பதியெறிந்த கொற்றவாள் பாரீர் - உதியர் 86
இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்டகடப்ப முதுமுரசங் காணீர் - கொடுப்பத் 87
தரைகொண்ட வேற்றரசர் தஞ்சென்னிப் பொன்னிக்கரைகொண்ட போர்முரசங் காணீர் - சரதப் 88
பவித்ர விசயப் படைப்பரசு ராமன்கவித்த வபிடேகங் காணீர் - தவித்துலகில் 89
மூவெழுகா லெக்கோக் களையு முடித்தவனிமூவெழுகாற் கொண்ட முடிபாரீர் - தாவி 90
வரப்பு மலைசூழ் வரவா யிரங்கண்பரப்பு மொருவேங்கை பாரீர் - புரக்கநின் 91
றூடம் பரமடங்க வோங்கி யுயரண்டகூடம் பொருவுங் குடைபாரீர் - கூடற் 92
பெரும்பெருமா ளெவ்வேந்து முன்போதப் பின்புவரும்பொருமாள் வந்தனன் வாரீர் - இருங்கடற் 93
றோன்றருக்க மண்டலமுந் தோற்க வுலகங்கள்மூன்றுக்குஞ் சூடி முடிபாரீர் - தோன்ற 94
அணைத்தரு காயிர மாயிர மாகப்பணைத்த பணிவலயம் பாரீர் - அணைக்கட் 95
சிரித்த சுரேசனை வென்றொரு தென்னன்பரித்த மணியாரம் பாரீர் - தரிந்தருள 96
வேண்டிய நாளின் முனிவுண்டு வெட்டுண்டபாண்டியன் கட்டு வடம்பாரீர் - மீண்டும் 97
திருந்து மதனன் றிருத்தாதை செவ்விஇருந்த படிபாரீ ரென்பார் - பெருந்தேவர் 98
முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்தஎக்கொடியு முன்ன ரெடுத்துளவால் - அக்கொடியால் 99
தொல்லா ரணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர்எல்லாருங் காணு மினவென்பார் - புல்லிய 100
நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார்போர்ப்பூ முடிதடிந்து போக்கியபின் - போர்ப்பூவில் 101
மேதகு கொற்றவைக்கு வேந்தர் பிரானுவந்ததாதகி யொன்றூமே சார்பென்பார் - மீது 102
பரந்த வவுணர் சிறைப்படும தெண்ணிஇரந்தன கொண்டன வென்று - புரந்து 103
தனிச்சே வகம்பூமி தன்னதே யாகஇனிச்சே வடிவிடா ளெனபார் - பனிச்சாரல் 104
மண்டு மலையால் வருந்தா வகைவருந்திப்பண்டு கலக்கிய பாற்கடலுட் - கொண்டதோர் 105
செங்கோ கனகை திருமார்பி லன்றியேஎங்கோ விருப்பா ளினியென்பார் - நங்காய் 106
திருப்பதி மாபதி யித்திரு மார்பில் இருப்பது காட்டுமி னென்பார் - சிரித்தெதிரே 107
அங்கட் கமலை யமலன் பெருந்தேவிகங்கட் புலனாயி னன்றென்பார் - நங்கைமீர் 108
கண்ணாகுந் தாமரையுங் கைதொழுதே மெம்மறையும்பண்ணாகுஞ் செந்தா மரைபணிந்தேம் - வண்ணத் 109
தொடித்தா மரையுந் தொழுதன நாபிக்கடித்தா மரைதொழுவேங் காட்டீர் - பிடித்தென்ன 110
அத்தா மரைதன் னடித்தா மரைக்கன்றிமைத்தா மரைக்கொளிதோ மற்றென்பார் - உய்த்தால் 111
ஒருபொருந் தாதகி தோய்சுரும்பை யோட்டற்கிருபெருஞ் சாமரையு மென்பார் - அருவி 112
அருகெய்த வொட்டா வயிரா பதத்தின்இருகன்ன சாமரையு மென்பார் - தெருவத்துத் 113
தங்களின் மாறாடி யுள்ளந் தடுமாறித்திங்க ணுதலார் தெருமரலும் - அங்கவரில் 114

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.