LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- ஒட்டக் கூத்தர் நூல்கள்

இராசராசசோழன் உலா - மூவருலா-3

 

யானையின் பெருமை
உகந்த பிடியுடனே யோரெண் பிடியும்
திகந்த களிறெட்டுஞ் சென்று - முகந்து 234
துறக்குங் கடன்முத லேழுஞ் சொரியச்
சிறக்கு மபிடேகஞ் செய்து - விறக்கும் 235
உயிர்காவன் மேற்கொண்டு டுலகைவலஞ் செய்யும்
அயிரா பதமத யானை - உயரும் 236
கடநாக மெட்டுங் கடநாக மெட்டும்
படநாக மெட்டும் பரந்தீர்த் - துடனாகத் 237
தென்னர் வலம்புரியுஞ் சேரலர் சாமரையும்
கன்னாவ தங்கிசமாக் கைக்கொண்டு - பின்னவர் 238
வன்னகை மௌலி யிரண்டு மிருகோட்டுக்
கோளகையா கக்கொண்ட கோக்களிறு - மாளிகை 239
தாங்குண்ட வாயில்க டோறுந் தனிதூங்கித்
தூக்குண்ட கண்டை தொடருடனே - வீக்குண்டங் 240
காராத நாளைக்குப் போதக் கிடந்தார்ப்பத்
தாராகக் கொண்ட மதாசலநீர் - வாரா 241
நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளும்
குதிக்கு மதர்சுவடு கோத்து - மதிக்கும் 242
பிடிவிடாக் காதற் பெருங்களிறுங் கன்றும்
அடிவிடா தவ்வா றடையப் - படிவிடா 243
தீட்டும் பெருவாரி யேழென்பா ரெட்டென்னக்
கூட்டும் பெருங்கடவுட் கொல்யானை - நாட்டில் 244
பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்றப்
பணிகொண்ட பொவம் பரக்க - பணிகொண்ட 245
கார்முற்றும் பேரிடி வீழ்ப்பக் கௌரியர்
ஊர்முற்றுஞ் செற்ற தொருகூற்றம் - சேரர் 246
கனக்கு மனீகக் களந்தொறுங் கைக்கொண்
டினக்கு மரசுவா வெல்லாம் - தனக்குத் 247
துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்கப்
பணிக்குங் கடவுட் பசுடு - தணிப்பரிய 248
பூகங்கை தாடோயச் செங்கை புயல்வானின்
மாசுங்கை தோயப்போய் மாமேரு - நாகங்கைக் 249
கொண்டு தனித்தங்கள் கோள்வேங்கை வீற்றிருப்பக்
கண்டு களிக்குங் களியானை - வண்டலம்ப 250
நின்று குதிக்கு மதத்தி னிலநெகிழ்ந்தெக்
குன்று மொளித்துக் குளிப்பமுன் - சென்றழுத்திப் 251
பண்டு வௌியின் மகதத்தைப் பாவடியால்
செண்டு வௌிகண்ட செங்கைமாக் - கண்ட 252
மதிலே யகழாக வாங்கி யகழே
மதிலா வெழாநிற்க வைத்துப் - புதுமலர்செய் 253
வாவியைச் செய்குன்ற மாக்கியச் செய்குன்றை
வாவிய தாக வெனவகுத்துத் - தாவுமான் 254
வெள்ளிடை கோநக ராக்கியச் கோநகர்
வெள்ளிடை யாக வுடன்விதித்துத் - தெள்ளிப் 255
புரப்பா ரிரப்பாராய்ப் போத விரப்பார்ப்
புரப்பாரே யாக்கும் புகர்மாத் - திருக்குலத்துக் 256
கண்ட னயிரா பதமதங்கால் காலத்துக்
கொண்ட தொருசுவடு மேல்கொண்டு - வண்டு 257
கடியுங் களிறுங் களிறாமே காதற்
பிடியும் பிடியாமே பின்னர்க் - கடிமதில் 258
மாற்று மருமணம் வங்காள பாகத்து
வேற்று மதமா ம்ருகமத்தைப் - போற்றார் 259
வயிரா கரமெறிந்த மானதன் கண்டன்
அயிரா பதமதமே யாக்கிச் - செயிர்தீர்ந்த 260
காதற் பிடிதேற்றற் தேறாக் கடாக்களிறென்
றேதப் பெயரு மொருபொருப்புப் - பாதையிற் 261
கச்சியிற் கற்றளியிற் கல்லிற் கலிங்கத்திற்
கொச்சியிற் கோதா விரிக்குளத்தில் - விச்சியில் 262
வல்லூரிற் கொல்லா புரத்தின் மணலூரில்
நெல்லூரிற் புத்தூரி னெட்டூரிற் - செல்லூரிற் 263
கோட்டாற்றிற் கொங்கிற் குடக்கூரிற் கொப்பத்தில்
வாட்டாற்றிற் காம்பிலியின் மண்ணையில் - வேட்டுத் 264
தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும்
பரணி புனைந்த பகடு - சரணென்று 265
வாடா மதுரயாழ் வாங்கி மடவரல்
பாடா விருந்த பருவத்து - நீடாப் 266
பரிசி லுடனே பணிப்பதுபோல் யானை
குரிசி லுடன்வந்து கூடத் - தெருவில் 267
வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன்
பொரவந்தான் கைவாங்கிப் போனான் - விரல்கவரும் 268
வீணைச் சுகப்பட வேழ மிடற்றுக்கும்
ஆணைப் பெருமா ளகப்பட - வாணுதல் 269
ஐந்து சுரர்தருவு மைந்து திருமாலை
தந்து தொழவெழுந்து சாத்தினாள் - மைந்தனும் 270
பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்கும்
கண்ணுக்குந் தோலானே கைக்கொண்டான் - வண்ணமும் 271
வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையுந் தோள்வளையும்
கொண்டவற்றின் மாறு கொடுப்பான்போற் - பண்டை 272
முடியுஞ்சிங் காதனமு முத்தக் குடையும்
படியு மரசும் பணித்தான் - பிடியும் 273
சிவிகையு நிற்பவச் சேயிழை வீதி
கவிகையுந் தானுங் கடந்தான் - குவிமுலை 274
அரிவை
ஏனை யரிவை யொருத்தி யிகன்மாரன்
சேனை திரண்டனைய செவ்வியாள் - வானில் 275
விடுசுடர்க் செக்கர் வியாழமுந் தோற்கும்
படுசுடர்க் செம்பொற் படியான் - வடிவு 276
நெடிதோர்க்கு லொக்கு நிறைமதிய நேரே
படிதோற்கும் முத்தின் படியாள் - முடிவில் 277
குலபதும ராக பதிகுதி கொள்ளும்
பலபதும ராகப் படியாள் - அலைகடலில் 278
முற்றா மரையாண் முகத்தா மரையாளப்
பொற்றா மரையாளப் போதுவாள் - அற்றைநாள் 279
நீர் விளையாட்டு
தண்ணென் கழுநீர்த் தடம்பொய்கை நாமெலாம்
அண்ணல் வருமளவும் மாடுதுமென் - றெண்ணிப் 280
புணைக்கும் மொருதன் புறங்காவ லாயத்
துணைக்குந் தடஞ்சுருங்கத் தோயப் - பணைத்துப் 281
புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும்
நடைக்கு முதற்பகை நாமென் - றுடைப்புண்டு 282
பின்னர்ப் பெருஞ்சக்ர வாகப் பெருங்குலமும்
அன்னக் குழை மலம்வரப் -பின்னரும் 283
காற்குங் கருங்கட்கு முட்காதே கைவகுத்
தேற்குந் தரமேநா மென்றுபோய்த் - தோற்கின்ற 284
வாவியி லுள்ள வரால்களுஞ் சேல்களும்
தாவி விழுந்து தடுமாறத் - தீவிய 285
பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும்
அம்மென் கழுத்துக்கு மாற்றாது - மம்மர்ப்பட் 286
டெங்குத் தரியா திரியல் போ யாமையும்
சங்குந் தடத்தை விடத்தவழ - நங்கைதன் 287
செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தன வென்றாதுங்கி
எவ்வாயுங் காணா தெதிரேநின் - றவ்வாய 288
கொள்ளைக் குமுத மலருங் குழையிள
வள்ளைக் கொடியு முடன்மயங்க - வெள்ளம்போல் 289
பெய்யு மதயானைக் கோடும் பெருநெருங்
கையும் புடைப்பக் கலுழ்ந்தனபோல் - தொய்யில்சூழ் 290
தாம முலையாலுந் தோளாலுந் தாக்குண்டு
காமர் தடமுங் கரைகடப்பக் - கோமகன் 291
உள்ளம் பெருகப் பெருக வுலாக்கொண்டு
கள்ளம் பெருகுங் கருநெடுங்கண் -வெள்ளம் 292
படிய வருஞ்சிவப்பு வள்ளப் பசுந்தேன்
வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப - நெடிது 293
திளைக்குந் திருமகளை வாவியிற் சேவித்
திளைக்குங் கொடியிடையா ரேத்தித் - திளைத்துமிழ்த் 294
தம்மைக் கமல மலர்க்களித்துத் தாமவற்றின்
செம்மை கவர்ந்த திருக்கண்ணும் - மெய்ம்மையே 295
மெய்போய வைய மருங்குலு மேகலைபோய்க்
கைபோ யகன்ற கடிதடமும் - பைபோய் 296
நெறிக்கும் பணிவலைய நீங்கிய வேய்த்தோள்
எறிக்கும் பெரும்பே ரெழிலும் - நெறிப்படக் 297
கொண்டுபோந் தேறிய கோமகள் பேரழகு
பண்டுபோ னோக்கப் பயப்படுவார் - கண்டு 298
கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற்
பொலன்கலன் கொண்டு பொதிந்தார் - இலங்கிழை 299
யானைப் பெருமா ளயிரா பதத்திருந்த
தானைப் பெருமாளைச் சந்தித்தாள் - மேனி 300
பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதாத்
திருவிற்கே குற்றேவல் செய்வான் - பொருவிற்கை 301
வானிற்கோ னஞ்ச வருவானை யஞ்சாதே
வேனிற்கோ னேபரவ மேற்செல்வான் - வானத் 302
தெடுக்குங் கொடிமகர ராசித் தொடையிற்
றொடுக்கு மகரம்போற் றோற்ற - வடுத்தெய்யும் 303
மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண்
தென்றறேர் தானனங்கன் செற்றதென - மென்றோளி 304
பாங்கி யெடுத்த படாகைப் பசும்பொற்பூ
வாங்கி யெதிர்தூய் உணங்கினாள் - தாங்கி 305
ஏடுப்ப வெழுவா ளிருதிருத்தோண் மாலை
கொடுப்ப விறையவனுங் கொண்டான் - கொடுத்தவற்றுட் 306
பொன்மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன்குவளை
நன்மாலை சாத்தினா னாயகனும் - தன்மார்பில் 307
ஆர்மாலை கோமா னருளினா னம்மாலை
கார்மாலை யுட்கொண்டு கைக்கொண்டாள் - பார்மாலே 308
அரிவையின் முறையீடு
மூதண்டங் காக்கு முதுதண்ட மாரவேள்
கோதண்டத் தீஞ்சாறு கொள்ளாதோ - மாதண்ட 309
முற்றக் கடல்கிடந்து வேவ முனிந்தின்னம்
கொற்றத் தனிவிற் குனியாதோ - நற்றடத்துள் 310
ஏறு முதலை யெறிதிகிரி வேண்மகர 
வேறு முறிய வெறியாதோ- மாறாது 311
காந்து முழுமதியை யோரோர் கலையாக
ஏந்து சுடர்வடியா ளீராதோ - பாந்தண்மேல் 312
வைய முடையான் வலம்புரியில் வைகறைவாய்
உய்ய வொருகுரல்வந் தூதாதோ - வையம் 313
தணியுந் தகைத்தோ தமியன்மா லென்று
பணியு மடக்கொடியைப் பாரா - வணிய 314
உருத்தந்த தோற்றங்க ளொன்றினுந் தப்பா
வருத்தந் திருமனத்து வைத்தே - திருந்தடந் 315
தோளுந் திருமார்பு நீங்காத் துணைவியரில்
நாளும் பிரியாமை நல்கினான் - மீள 316
ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகம்
திருமகன் போலத் திளைப்பான் - இருநிலம் 317
தாளா வளந்து தரும்பெரியோன் றாதகித்
தோளா லளந்த துணைமுலையா - ணாளும் 318
திரையர மாதருஞ் சேவிப்பாண் மேரு
வரையர மாதரின் வாய்ப்பாள் -கரையில் 319
விருப்பவனி கூர வருகின்ற மீளி
திருப்பவனி முன்விரைந்து செல்வா - ளுருப்ப 320
அணந்த பணிவலைய வண்ணன் முதனாண்
மணந்த மணச்செவ்வி வாய்ப்பக் - கொணர்ந்தணிந்த 321
சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமும்
கோட மணிமகர குண்டலமும் - ஆடிய 322
சச்சையு மாலையு மாரமுந் தாமமுங்
கச்சையு மேகலையுங் காஞ்சியும் - பச்சென்ற 323
பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமும்
கட்டுங் கனவயிரக் காறையும் - இட்ட 324
திலகமும் மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லா
உலகமுந் தோற்கு முருவும் - கலகமும் 325
மாரனுந் தானும் வருவாளை மன்னரில்
வீரனுங் காணா வெருவராப் - பாரனைத்தும் 326
தேறுந் திருவைத் திருவவ தாரங்கள்
தோறும் பிரியாத் தொடர்பாலும் - ஏறுங்கண் 327
வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமைத்
தோளாலு மீளத் துவக்குண்டு - நீளிய 328
மைவிடா நோக்கி திருக்கைம் மலரணை
கைவிடா வார்வங் கடைப்பிடித்துத் - தெய்வப் 329
புவனி விலையாய பொற்றுகிற் கெல்லாம்
அவனி முழுது மளித்தான்போற் - கவினிய 330
அற்புத மாலை யணியப் பணிசெய்யுங்
கற்பக மொன்று கடைக்கணித்தான் - பொற்படிக்குப் 331
பாதங்க ளாதி முடியளவும் பாரிப்ப
மாதங்க ராசிதிரு வாய்மலர்ந்தான் - ஓதி 332
முடிக்குத் தலைக்கோலம் போல்வன முத்தின்
படிக்குச சலாபம் பணித்தான் - வடிப்பலகை 333
அச்சிரா பரண மனைத்திற்குந் தன்வட
வச்சிரா கரமே வழங்கினான் - பச்சை 334
மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப்
பணிக்கு த்ரிகூடம் பணித்தான் - தணிப்பில் 335
பெரும்பே ருவகைய ளாகிப் பெருமாள்
விரும்பேர் மலர்க்கண்ணி மீண்டாள் - பெரும்போர் 336
வெருவரும் பார்வேந்தர் வேந்தனைப் போற்றும்
பொருநரும் பாணரும் புக்கார் - தெரிவைக்குப் 337
பாடிக் குழலூதிப் பாம்பின் படக்கூத்தும்
ஆடிக் குடக்கூத்து மாடினார் - பாடியில் 338
ஆனிரையும் மாமா னிரையும்போ லானுலகிற்
கோநிரையு மீளக் குழாங்கொண்டு - மீளிரையின் 339
மீதும் புடையு மிடைய விழவெழவேய்
ஊதுந் திருப்பவள முட்கொண்டு - சீதக் 340
கடந்தூர வந்தக ககன தளமும்
இடந்தூர வந்து மிணையக் - குடங்கள் 341
எழவெழ மேன்மே லெழுந்துங் குடங்கள்
விழவிழ மேன்மேல் விழுந்தும் - பழகிய 342
தோளிரண்டுந் தாளிரண்டுஞ் சோளேசன்றாளிரண்டும்
தோளிரண்டு மென்றென்று சொல்லியும் - கோளொளிய 343
நின்வேய் தவிர்கென்று நேரியன் மேருவிற்
பொன்வேய்ங் குழலொன்று போக்கினான் - முன்னே 344
தசும்பிற்கு மாறாகத் தங்கோமா னாவற்
பசும்பொற் றசும்பு பணித்தாள் - ஒசிந்துபோய் 345
நாடகப் பாம்பிற்கு நற்கற் பசுங்கொடுத்த
ஆடகப் பாம்பொன் றருளினாள் -பாடுநர்மேல் 346
வற்றாத மானத வாவியல் வாடாத
பொற்றா மரையே புனைகென்றாள் - கொற்றவன் 347
கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்கு
மந்தார மாலை வருகென்றாள் - நந்தாத 348
பேறுந் திருவருளு மெய்தி யவர்பெயர
ஏறுந் தவிசுதர வேறினாள் - வேறொருத்தி 349
பேரிளம் பெண்
கச்சை முனியுங் கனதனமுங் குங்குமச்
சச்சை கமழுந் தடந்தோளு -நிச்சமுரு 350
ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும்
போந்த திருமகள் போலிருப்பாள் - வேந்தர் 351
பணியுந் தடமகுடம் பன்னூறு கோடி
அணியுந் திருத்தா ளபயன் - பணிவலய 352
வீக்கிலே வீங்கியதோண் மேரு கிரச்சிகரத்
தாக்கிலே சாய்ந்த தடமுலையாள்-பூக்கமழும் 353
ஆரேற்ற பொற்றோ ளபயனை யாயிரம்
பேரேற்ற தெய்வப் பெருமானைக் - காரேற் 354
றடல்போ லடுதிகிரி யண்ணலைத் தன்பாற்
கடல்போல லகப்படுத்துங் கண்ணாள் - மடல்விரி 355
தெங்கினு மேற்குந் தசும்பினுந் தேர்ந்தளி
பொங்கு நுரையினும் போய்ப்புகா - தங்கு 356
நறவு குவளை நறுமலர்தோய்த் துண்ணும்
இறவு கடைக்கணித் தெய்தச் - சுறவுக் 357
கொடியோனை நோக்குவான் கண்டாள்பொற் கொற்கை
நெடியோனை நேமிப் பிரானைப்-படியோனைக் 358
கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக்
கொண்டனை யென்று குறுகுவாள் - கண்டு 359
மலர்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத்
திலகங் குறுவியராற் றேம்பப் - பலகுதலை 360
மாற்றந் தடுமாற்ற மெய்த மனத்துள்ள
தேற்றம்பித் தேற்றஞ் சிதைவிப்ப- ஏற்று 361
துகிலசைந்து நாணுந் தொலைய வளக
முகிலசைந்து நோவிடைக்கு முற்ற - அகிலமும் 362
சேனையு மன்னருந் தெய்வப் பெருமாளும்
யானையு நிற்க வெதிர்நின்று - கோனே 363
சதயுக மேனுந் தரணிபர் மக்கள்
பதயுக மல்லது பாரார் - உதயாதி 364
காந்தநின் கைத்தலத்தைப் பார்மடந்தை கற்பாந்தத்
தேந்து மரவர சென்றிகவாள் -பூந்தொடி 365
நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடைய
வெற்போ ரிரண்டென்று வீற்றிருக்கும் - பொற்பிற் 366
கலந்தாளுஞ் சொற்கிழத்தி கன்ன துவயமென்
பொலந்தா மரையென்று போகாள் - நிலந்தாரா 367
அந்தா மரையா ளருட்கண்ணைத் தண்ணிரண்டு
செந்தா மரையென்று செம்மாக்கும் - முந்துற்ற 368
மல்லா புரேச சிலகால மற்றிவை
எல்லாந் தனித்துடையோம் யாமன்றே - அல்லாது 369
மேகோ தகமிரந்த சாதகம் வெற்பைநிறை
ஏகோ தகம்பொழிந்தா லென்செய்யும் - மாகத்துக் 370
காலை வெயில்கொண்டுந் தாமரைக்குக் கற்பாந்த
வேலை வெயிலெறிக்க வேண்டுமோ - மாலைச் 371
சிலாவட்டஞ் சிற்சில நின்றுருகு மென்றால்
நிலாவட்ட நின்றெறிக்க நேரோ - குலாவலைஞர் 372
சேற்றாக்கான் மீளுந் திருநாடா நீதருமால்
ஆற்றாக்கான் மேன்மே லளிப்பரே - கோற்றொடியார் 373
நீங்கரிய மேகமே யெம்பொல்வார் நீயளித்தால்
தாங்கரிய வேட்கை தவிப்பாரே - யாங்களே 374
தண்மை யறியா நிலவினேஞ் சந்ததமும்
உண்மை யறியா வுணர்வினேம் - வெண்மையினிற் 375
செல்லாத கங்குலேந் தீராத வாதரவேம்
பொல்லாத வெம்பசலைப் போர்வையேம் - நில்லாத 376
வாமே கலையே முலைவீக்கா வம்பினேம்
யாமேயோ விப்போ தௌிவந்தேம் - யாமுடைய 377
நன்மை யொருகாலத் துள்ள தொருகாலாத்
தின்மை யுணராயோ வெங்கோவே - மன்னவநீ 378
முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவது
பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே - மின்போல் 379
இமைக்குங் கடவு ளுடையினைபண் டிப்போ
தமைக்குந் துகிலினை யன்றே - அமைத்ததோர் 380
பாற்கடற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போது
கார்க்கடற் சென்று கவர்சங்கே-சீர்க்கின்ற 381
தண்ணந் துழாய்பண்டு சாத்துந் திருத்தாமம்
கண்ணியின் றாரின் கவட்டிலையே - தண்ணென்ற 382
பள்ளியறை பாற்கடலே பண்டு திருத்துயில்கூர்
பள்ளி யறையின்று பாசறையே - வெள்ளிய 383
முத்தக் குடைகவித்து முன்கவித்த மாணிக்கக்
கொத்துக் குடையொக்கக் கூடுமே - இததிறத்தால் 384
எண்ணற் கரிய பெரியோனீ யெங்களையும்
அண்ணற் கிகழ வடுக்குமே - விண்ணப்பம் 385
கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற்
றண்டரளக் கொற்றத் தனிக்குடையோன் -பண்டறியா 386
ஆரமு மாலையும் நாணு மருங்கலா
பாரமு மேகலையும் பல்வளையு - மூவரும் 387
பிடியுஞ் சிவிகையுந் தேரும் பிறவும்
படியுங் கடாரம் பலவும் - நெடியோன் 388
கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள்
அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் - எடுத்துரைத்த 389
பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக
மாதர் மனங்கொள்ளா மால்கொள்ளச் -சோதி 390
இலகுடையான் கொற்றக் குடைநிழற்று மீரேழ்
உலகுடையான் போந்த னுலா. 391
வெண்பா
அன்று தொழுத வரியை துளவணிவ
தென்று துயில்பெறுவ தெக்காலம் - தென்றிசையில்
நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்த
வீரதரா வீரோ தயா.
இராசராசசோழன் உலா முற்றிற்று.

யானையின் பெருமை
உகந்த பிடியுடனே யோரெண் பிடியும்திகந்த களிறெட்டுஞ் சென்று - முகந்து 234
துறக்குங் கடன்முத லேழுஞ் சொரியச்சிறக்கு மபிடேகஞ் செய்து - விறக்கும் 235
உயிர்காவன் மேற்கொண்டு டுலகைவலஞ் செய்யும்அயிரா பதமத யானை - உயரும் 236
கடநாக மெட்டுங் கடநாக மெட்டும்படநாக மெட்டும் பரந்தீர்த் - துடனாகத் 237
தென்னர் வலம்புரியுஞ் சேரலர் சாமரையும்கன்னாவ தங்கிசமாக் கைக்கொண்டு - பின்னவர் 238
வன்னகை மௌலி யிரண்டு மிருகோட்டுக்கோளகையா கக்கொண்ட கோக்களிறு - மாளிகை 239
தாங்குண்ட வாயில்க டோறுந் தனிதூங்கித்தூக்குண்ட கண்டை தொடருடனே - வீக்குண்டங் 240
காராத நாளைக்குப் போதக் கிடந்தார்ப்பத்தாராகக் கொண்ட மதாசலநீர் - வாரா 241
நதிக்கு மலைக்கு மடவிக்கு நாளும்குதிக்கு மதர்சுவடு கோத்து - மதிக்கும் 242
பிடிவிடாக் காதற் பெருங்களிறுங் கன்றும்அடிவிடா தவ்வா றடையப் - படிவிடா 243
தீட்டும் பெருவாரி யேழென்பா ரெட்டென்னக்கூட்டும் பெருங்கடவுட் கொல்யானை - நாட்டில் 244
பணிகொண்ட பூதம் படைநான்கும் பற்றப்பணிகொண்ட பொவம் பரக்க - பணிகொண்ட 245
கார்முற்றும் பேரிடி வீழ்ப்பக் கௌரியர்ஊர்முற்றுஞ் செற்ற தொருகூற்றம் - சேரர் 246
கனக்கு மனீகக் களந்தொறுங் கைக்கொண்டினக்கு மரசுவா வெல்லாம் - தனக்குத் 247
துணிக்குங் கழைக்கரும்பு நெல்லுஞ் சுமக்கப்பணிக்குங் கடவுட் பசுடு - தணிப்பரிய 248
பூகங்கை தாடோயச் செங்கை புயல்வானின்மாசுங்கை தோயப்போய் மாமேரு - நாகங்கைக் 249
கொண்டு தனித்தங்கள் கோள்வேங்கை வீற்றிருப்பக்கண்டு களிக்குங் களியானை - வண்டலம்ப 250
நின்று குதிக்கு மதத்தி னிலநெகிழ்ந்தெக்குன்று மொளித்துக் குளிப்பமுன் - சென்றழுத்திப் 251
பண்டு வௌியின் மகதத்தைப் பாவடியால்செண்டு வௌிகண்ட செங்கைமாக் - கண்ட 252
மதிலே யகழாக வாங்கி யகழேமதிலா வெழாநிற்க வைத்துப் - புதுமலர்செய் 253
வாவியைச் செய்குன்ற மாக்கியச் செய்குன்றைவாவிய தாக வெனவகுத்துத் - தாவுமான் 254
வெள்ளிடை கோநக ராக்கியச் கோநகர்வெள்ளிடை யாக வுடன்விதித்துத் - தெள்ளிப் 255
புரப்பா ரிரப்பாராய்ப் போத விரப்பார்ப்புரப்பாரே யாக்கும் புகர்மாத் - திருக்குலத்துக் 256
கண்ட னயிரா பதமதங்கால் காலத்துக்கொண்ட தொருசுவடு மேல்கொண்டு - வண்டு 257
கடியுங் களிறுங் களிறாமே காதற்பிடியும் பிடியாமே பின்னர்க் - கடிமதில் 258
மாற்று மருமணம் வங்காள பாகத்துவேற்று மதமா ம்ருகமத்தைப் - போற்றார் 259
வயிரா கரமெறிந்த மானதன் கண்டன்அயிரா பதமதமே யாக்கிச் - செயிர்தீர்ந்த 260
காதற் பிடிதேற்றற் தேறாக் கடாக்களிறென்றேதப் பெயரு மொருபொருப்புப் - பாதையிற் 261
கச்சியிற் கற்றளியிற் கல்லிற் கலிங்கத்திற்கொச்சியிற் கோதா விரிக்குளத்தில் - விச்சியில் 262
வல்லூரிற் கொல்லா புரத்தின் மணலூரில்நெல்லூரிற் புத்தூரி னெட்டூரிற் - செல்லூரிற் 263
கோட்டாற்றிற் கொங்கிற் குடக்கூரிற் கொப்பத்தில்வாட்டாற்றிற் காம்பிலியின் மண்ணையில் - வேட்டுத் 264
தரணி கவர்ந்து தமிழ்வேந்தர் பாடும்பரணி புனைந்த பகடு - சரணென்று 265
வாடா மதுரயாழ் வாங்கி மடவரல்பாடா விருந்த பருவத்து - நீடாப் 266
பரிசி லுடனே பணிப்பதுபோல் யானைகுரிசி லுடன்வந்து கூடத் - தெருவில் 267
வரவந்தான் மன்னர் பிரானென்று மாரன்பொரவந்தான் கைவாங்கிப் போனான் - விரல்கவரும் 268
வீணைச் சுகப்பட வேழ மிடற்றுக்கும்ஆணைப் பெருமா ளகப்பட - வாணுதல் 269
ஐந்து சுரர்தருவு மைந்து திருமாலைதந்து தொழவெழுந்து சாத்தினாள் - மைந்தனும் 270
பண்ணுக்கே தோற்பான் பணைமுலைக்கு மல்குலுக்கும்கண்ணுக்குந் தோலானே கைக்கொண்டான் - வண்ணமும் 271
வெண்டுகிலுங் காஞ்சியு மேகலையுந் தோள்வளையும்கொண்டவற்றின் மாறு கொடுப்பான்போற் - பண்டை 272
முடியுஞ்சிங் காதனமு முத்தக் குடையும்படியு மரசும் பணித்தான் - பிடியும் 273
சிவிகையு நிற்பவச் சேயிழை வீதிகவிகையுந் தானுங் கடந்தான் - குவிமுலை 274

அரிவை
ஏனை யரிவை யொருத்தி யிகன்மாரன்சேனை திரண்டனைய செவ்வியாள் - வானில் 275
விடுசுடர்க் செக்கர் வியாழமுந் தோற்கும்படுசுடர்க் செம்பொற் படியான் - வடிவு 276
நெடிதோர்க்கு லொக்கு நிறைமதிய நேரேபடிதோற்கும் முத்தின் படியாள் - முடிவில் 277
குலபதும ராக பதிகுதி கொள்ளும்பலபதும ராகப் படியாள் - அலைகடலில் 278
முற்றா மரையாண் முகத்தா மரையாளப்பொற்றா மரையாளப் போதுவாள் - அற்றைநாள் 279

நீர் விளையாட்டு
தண்ணென் கழுநீர்த் தடம்பொய்கை நாமெலாம்அண்ணல் வருமளவும் மாடுதுமென் - றெண்ணிப் 280
புணைக்கும் மொருதன் புறங்காவ லாயத்துணைக்குந் தடஞ்சுருங்கத் தோயப் - பணைத்துப் 281
புடைக்கும் விசும்பிடம் போதா முலைக்கும்நடைக்கு முதற்பகை நாமென் - றுடைப்புண்டு 282
பின்னர்ப் பெருஞ்சக்ர வாகப் பெருங்குலமும்அன்னக் குழை மலம்வரப் -பின்னரும் 283
காற்குங் கருங்கட்கு முட்காதே கைவகுத்தேற்குந் தரமேநா மென்றுபோய்த் - தோற்கின்ற 284
வாவியி லுள்ள வரால்களுஞ் சேல்களும்தாவி விழுந்து தடுமாறத் - தீவிய 285
பொம்மென் சிலம்பு புலம்பு புறவடிக்கும்அம்மென் கழுத்துக்கு மாற்றாது - மம்மர்ப்பட் 286
டெங்குத் தரியா திரியல் போ யாமையும்சங்குந் தடத்தை விடத்தவழ - நங்கைதன் 287
செவ்வாயுங் காதுஞ் செயிர்த்தன வென்றாதுங்கிஎவ்வாயுங் காணா தெதிரேநின் - றவ்வாய 288
கொள்ளைக் குமுத மலருங் குழையிளவள்ளைக் கொடியு முடன்மயங்க - வெள்ளம்போல் 289
பெய்யு மதயானைக் கோடும் பெருநெருங்கையும் புடைப்பக் கலுழ்ந்தனபோல் - தொய்யில்சூழ் 290
தாம முலையாலுந் தோளாலுந் தாக்குண்டுகாமர் தடமுங் கரைகடப்பக் - கோமகன் 291
உள்ளம் பெருகப் பெருக வுலாக்கொண்டுகள்ளம் பெருகுங் கருநெடுங்கண் -வெள்ளம் 292
படிய வருஞ்சிவப்பு வள்ளப் பசுந்தேன்வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப - நெடிது 293
திளைக்குந் திருமகளை வாவியிற் சேவித்திளைக்குங் கொடியிடையா ரேத்தித் - திளைத்துமிழ்த் 294
தம்மைக் கமல மலர்க்களித்துத் தாமவற்றின்செம்மை கவர்ந்த திருக்கண்ணும் - மெய்ம்மையே 295
மெய்போய வைய மருங்குலு மேகலைபோய்க்கைபோ யகன்ற கடிதடமும் - பைபோய் 296
நெறிக்கும் பணிவலைய நீங்கிய வேய்த்தோள்எறிக்கும் பெரும்பே ரெழிலும் - நெறிப்படக் 297
கொண்டுபோந் தேறிய கோமகள் பேரழகுபண்டுபோ னோக்கப் பயப்படுவார் - கண்டு 298
கலன்கலன் கண்ணெச்சிற் கென்று கடிதிற்பொலன்கலன் கொண்டு பொதிந்தார் - இலங்கிழை 299
யானைப் பெருமா ளயிரா பதத்திருந்ததானைப் பெருமாளைச் சந்தித்தாள் - மேனி 300
பொருவிற்கே யெல்லா வரம்பையரும் போதாத்திருவிற்கே குற்றேவல் செய்வான் - பொருவிற்கை 301
வானிற்கோ னஞ்ச வருவானை யஞ்சாதேவேனிற்கோ னேபரவ மேற்செல்வான் - வானத் 302
தெடுக்குங் கொடிமகர ராசித் தொடையிற்றொடுக்கு மகரம்போற் றோற்ற - வடுத்தெய்யும் 303
மன்றன் மலரம்பு விற்கரும்பு வண்டுநாண்தென்றறேர் தானனங்கன் செற்றதென - மென்றோளி 304
பாங்கி யெடுத்த படாகைப் பசும்பொற்பூவாங்கி யெதிர்தூய் உணங்கினாள் - தாங்கி 305
ஏடுப்ப வெழுவா ளிருதிருத்தோண் மாலைகொடுப்ப விறையவனுங் கொண்டான் - கொடுத்தவற்றுட் 306
பொன்மாலை போதகத்தைச் சூட்டிப் பொலன்குவளைநன்மாலை சாத்தினா னாயகனும் - தன்மார்பில் 307
ஆர்மாலை கோமா னருளினா னம்மாலைகார்மாலை யுட்கொண்டு கைக்கொண்டாள் - பார்மாலே 308

அரிவையின் முறையீடு
மூதண்டங் காக்கு முதுதண்ட மாரவேள்கோதண்டத் தீஞ்சாறு கொள்ளாதோ - மாதண்ட 309
முற்றக் கடல்கிடந்து வேவ முனிந்தின்னம்கொற்றத் தனிவிற் குனியாதோ - நற்றடத்துள் 310
ஏறு முதலை யெறிதிகிரி வேண்மகர வேறு முறிய வெறியாதோ- மாறாது 311
காந்து முழுமதியை யோரோர் கலையாகஏந்து சுடர்வடியா ளீராதோ - பாந்தண்மேல் 312
வைய முடையான் வலம்புரியில் வைகறைவாய்உய்ய வொருகுரல்வந் தூதாதோ - வையம் 313
தணியுந் தகைத்தோ தமியன்மா லென்றுபணியு மடக்கொடியைப் பாரா - வணிய 314
உருத்தந்த தோற்றங்க ளொன்றினுந் தப்பாவருத்தந் திருமனத்து வைத்தே - திருந்தடந் 315
தோளுந் திருமார்பு நீங்காத் துணைவியரில்நாளும் பிரியாமை நல்கினான் - மீள 316
ஒருமகள் கண்ட னொருபெரும்பே ராகம்திருமகன் போலத் திளைப்பான் - இருநிலம் 317
தாளா வளந்து தரும்பெரியோன் றாதகித்தோளா லளந்த துணைமுலையா - ணாளும் 318
திரையர மாதருஞ் சேவிப்பாண் மேருவரையர மாதரின் வாய்ப்பாள் -கரையில் 319
விருப்பவனி கூர வருகின்ற மீளிதிருப்பவனி முன்விரைந்து செல்வா - ளுருப்ப 320
அணந்த பணிவலைய வண்ணன் முதனாண்மணந்த மணச்செவ்வி வாய்ப்பக் - கொணர்ந்தணிந்த 321
சூடா மணியும் பணிவளையுஞ் சூடகமும்கோட மணிமகர குண்டலமும் - ஆடிய 322
சச்சையு மாலையு மாரமுந் தாமமுங்கச்சையு மேகலையுங் காஞ்சியும் - பச்சென்ற 323
பட்டுங் குறங்கணியும் பட்டிகையு நூபுரமும்கட்டுங் கனவயிரக் காறையும் - இட்ட 324
திலகமும் மான்மதமுஞ் செஞ்சாந்து மெல்லாஉலகமுந் தோற்கு முருவும் - கலகமும் 325
மாரனுந் தானும் வருவாளை மன்னரில்வீரனுங் காணா வெருவராப் - பாரனைத்தும் 326
தேறுந் திருவைத் திருவவ தாரங்கள்தோறும் பிரியாத் தொடர்பாலும் - ஏறுங்கண் 327
வாளாலும் வார்புருவ வில்லாலும் வாங்கமைத்தோளாலு மீளத் துவக்குண்டு - நீளிய 328
மைவிடா நோக்கி திருக்கைம் மலரணைகைவிடா வார்வங் கடைப்பிடித்துத் - தெய்வப் 329
புவனி விலையாய பொற்றுகிற் கெல்லாம்அவனி முழுது மளித்தான்போற் - கவினிய 330
அற்புத மாலை யணியப் பணிசெய்யுங்கற்பக மொன்று கடைக்கணித்தான் - பொற்படிக்குப் 331
பாதங்க ளாதி முடியளவும் பாரிப்பமாதங்க ராசிதிரு வாய்மலர்ந்தான் - ஓதி 332
முடிக்குத் தலைக்கோலம் போல்வன முத்தின்படிக்குச சலாபம் பணித்தான் - வடிப்பலகை 333
அச்சிரா பரண மனைத்திற்குந் தன்வடவச்சிரா கரமே வழங்கினான் - பச்சை 334
மணிக்குத் தலையாய மாணிக்க ரத்னப்பணிக்கு த்ரிகூடம் பணித்தான் - தணிப்பில் 335
பெரும்பே ருவகைய ளாகிப் பெருமாள்விரும்பேர் மலர்க்கண்ணி மீண்டாள் - பெரும்போர் 336
வெருவரும் பார்வேந்தர் வேந்தனைப் போற்றும்பொருநரும் பாணரும் புக்கார் - தெரிவைக்குப் 337
பாடிக் குழலூதிப் பாம்பின் படக்கூத்தும்ஆடிக் குடக்கூத்து மாடினார் - பாடியில் 338
ஆனிரையும் மாமா னிரையும்போ லானுலகிற்கோநிரையு மீளக் குழாங்கொண்டு - மீளிரையின் 339
மீதும் புடையு மிடைய விழவெழவேய்ஊதுந் திருப்பவள முட்கொண்டு - சீதக் 340
கடந்தூர வந்தக ககன தளமும்இடந்தூர வந்து மிணையக் - குடங்கள் 341
எழவெழ மேன்மே லெழுந்துங் குடங்கள்விழவிழ மேன்மேல் விழுந்தும் - பழகிய 342
தோளிரண்டுந் தாளிரண்டுஞ் சோளேசன்றாளிரண்டும்தோளிரண்டு மென்றென்று சொல்லியும் - கோளொளிய 343
நின்வேய் தவிர்கென்று நேரியன் மேருவிற்பொன்வேய்ங் குழலொன்று போக்கினான் - முன்னே 344
தசும்பிற்கு மாறாகத் தங்கோமா னாவற்பசும்பொற் றசும்பு பணித்தாள் - ஒசிந்துபோய் 345
நாடகப் பாம்பிற்கு நற்கற் பசுங்கொடுத்தஆடகப் பாம்பொன் றருளினாள் -பாடுநர்மேல் 346
வற்றாத மானத வாவியல் வாடாதபொற்றா மரையே புனைகென்றாள் - கொற்றவன் 347
கொந்தார மாலை கொளவிளைத்த மாலைக்குமந்தார மாலை வருகென்றாள் - நந்தாத 348
பேறுந் திருவருளு மெய்தி யவர்பெயரஏறுந் தவிசுதர வேறினாள் - வேறொருத்தி 349

பேரிளம் பெண்
கச்சை முனியுங் கனதனமுங் குங்குமச்சச்சை கமழுந் தடந்தோளு -நிச்சமுரு 350
ஏந்த வுளதென் றிருந்த மலர்நின்றும்போந்த திருமகள் போலிருப்பாள் - வேந்தர் 351
பணியுந் தடமகுடம் பன்னூறு கோடிஅணியுந் திருத்தா ளபயன் - பணிவலய 352
வீக்கிலே வீங்கியதோண் மேரு கிரச்சிகரத்தாக்கிலே சாய்ந்த தடமுலையாள்-பூக்கமழும் 353
ஆரேற்ற பொற்றோ ளபயனை யாயிரம்பேரேற்ற தெய்வப் பெருமானைக் - காரேற் 354
றடல்போ லடுதிகிரி யண்ணலைத் தன்பாற்கடல்போல லகப்படுத்துங் கண்ணாள் - மடல்விரி 355
தெங்கினு மேற்குந் தசும்பினுந் தேர்ந்தளிபொங்கு நுரையினும் போய்ப்புகா - தங்கு 356
நறவு குவளை நறுமலர்தோய்த் துண்ணும்இறவு கடைக்கணித் தெய்தச் - சுறவுக் 357
கொடியோனை நோக்குவான் கண்டாள்பொற் கொற்கைநெடியோனை நேமிப் பிரானைப்-படியோனைக் 358
கண்டனை மேதினியாள் காந்தனை வந்துய்யக்கொண்டனை யென்று குறுகுவாள் - கண்டு 359
மலர்கண் வெளுப்புச் சிவப்பூர மற்றத்திலகங் குறுவியராற் றேம்பப் - பலகுதலை 360
மாற்றந் தடுமாற்ற மெய்த மனத்துள்ளதேற்றம்பித் தேற்றஞ் சிதைவிப்ப- ஏற்று 361
துகிலசைந்து நாணுந் தொலைய வளகமுகிலசைந்து நோவிடைக்கு முற்ற - அகிலமும் 362
சேனையு மன்னருந் தெய்வப் பெருமாளும்யானையு நிற்க வெதிர்நின்று - கோனே 363
சதயுக மேனுந் தரணிபர் மக்கள்பதயுக மல்லது பாரார் - உதயாதி 364
காந்தநின் கைத்தலத்தைப் பார்மடந்தை கற்பாந்தத்தேந்து மரவர சென்றிகவாள் -பூந்தொடி 365
நற்போர் மடந்தை திருத்தோளை நாமுடையவெற்போ ரிரண்டென்று வீற்றிருக்கும் - பொற்பிற் 366
கலந்தாளுஞ் சொற்கிழத்தி கன்ன துவயமென்பொலந்தா மரையென்று போகாள் - நிலந்தாரா 367
அந்தா மரையா ளருட்கண்ணைத் தண்ணிரண்டுசெந்தா மரையென்று செம்மாக்கும் - முந்துற்ற 368
மல்லா புரேச சிலகால மற்றிவைஎல்லாந் தனித்துடையோம் யாமன்றே - அல்லாது 369
மேகோ தகமிரந்த சாதகம் வெற்பைநிறைஏகோ தகம்பொழிந்தா லென்செய்யும் - மாகத்துக் 370
காலை வெயில்கொண்டுந் தாமரைக்குக் கற்பாந்தவேலை வெயிலெறிக்க வேண்டுமோ - மாலைச் 371
சிலாவட்டஞ் சிற்சில நின்றுருகு மென்றால்நிலாவட்ட நின்றெறிக்க நேரோ - குலாவலைஞர் 372
சேற்றாக்கான் மீளுந் திருநாடா நீதருமால்ஆற்றாக்கான் மேன்மே லளிப்பரே - கோற்றொடியார் 373
நீங்கரிய மேகமே யெம்பொல்வார் நீயளித்தால்தாங்கரிய வேட்கை தவிப்பாரே - யாங்களே 374
தண்மை யறியா நிலவினேஞ் சந்ததமும்உண்மை யறியா வுணர்வினேம் - வெண்மையினிற் 375
செல்லாத கங்குலேந் தீராத வாதரவேம்பொல்லாத வெம்பசலைப் போர்வையேம் - நில்லாத 376
வாமே கலையே முலைவீக்கா வம்பினேம்யாமேயோ விப்போ தௌிவந்தேம் - யாமுடைய 377
நன்மை யொருகாலத் துள்ள தொருகாலாத்தின்மை யுணராயோ வெங்கோவே - மன்னவநீ 378
முன்பு கருடன் முழுக்கழுத்தி லேறுவதுபின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே - மின்போல் 379
இமைக்குங் கடவு ளுடையினைபண் டிப்போதமைக்குந் துகிலினை யன்றே - அமைத்ததோர் 380
பாற்கடற் சீபாஞ்ச சன்னியம்பண் டிப்போதுகார்க்கடற் சென்று கவர்சங்கே-சீர்க்கின்ற 381
தண்ணந் துழாய்பண்டு சாத்துந் திருத்தாமம்கண்ணியின் றாரின் கவட்டிலையே - தண்ணென்ற 382
பள்ளியறை பாற்கடலே பண்டு திருத்துயில்கூர்பள்ளி யறையின்று பாசறையே - வெள்ளிய 383
முத்தக் குடைகவித்து முன்கவித்த மாணிக்கக்கொத்துக் குடையொக்கக் கூடுமே - இததிறத்தால் 384
எண்ணற் கரிய பெரியோனீ யெங்களையும்அண்ணற் கிகழ வடுக்குமே - விண்ணப்பம் 385
கொண்டருளு கென்ன முகிழ்த்த குறுமுறுவற்றண்டரளக் கொற்றத் தனிக்குடையோன் -பண்டறியா 386
ஆரமு மாலையும் நாணு மருங்கலாபாரமு மேகலையும் பல்வளையு - மூவரும் 387
பிடியுஞ் சிவிகையுந் தேரும் பிறவும்படியுங் கடாரம் பலவும் - நெடியோன் 388
கொடுத்தன கொள்ளாள் கொடாதன கொண்டாள்அடுத்தனர் தோண்மே லயர்ந்தாள் - எடுத்துரைத்த 389
பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாகமாதர் மனங்கொள்ளா மால்கொள்ளச் -சோதி 390
இலகுடையான் கொற்றக் குடைநிழற்று மீரேழ்உலகுடையான் போந்த னுலா. 391

வெண்பா
அன்று தொழுத வரியை துளவணிவதென்று துயில்பெறுவ தெக்காலம் - தென்றிசையில்நீரதிரா வண்ண நெடுஞ்சிலையை நாணெறிந்தவீரதரா வீரோ தயா.


இராசராசசோழன் உலா முற்றிற்று.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.