விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மெஹா ஹிட் ஆனா படம் சூது கவ்வும். இந்த படத்தை தற்போது, தெலுங்கில் கட்டம் கேங் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில், நடிகர் டாக்டர் ராஜசேகர் நடிக்கிறார்.
தமிழில் பாபி சிம்ஹா நயன்தாராவின் தீவிரமான ரசிகராக அவருக்கு சிலை வைப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கும். அதே காட்சியை தெலுங்கில் அனுஷ்காவிற்கு சிலை வைப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தை இயக்குகிறார் அச்சு.
இதே படம் இந்திக்கும் செல்லவிருக்கிறது. இந்தியில் ஐஸ்வர்யா ராய்க்கு சிலைவைப்பது போல காட்சி வைக்க அப்படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
|