LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

உயிரே உயிரே படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி !!

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து ஹீரோவாகவும், ஹன்சிகா மோத்வாணி ஹீரோயினாகவும் நடித்து வரும் படம் உயிரே உயிரே. இந்த படத்தை விஷால் நடித்த சத்யம் திரைப்படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி உள்ளார்.  

காதல் கதையம்சம் உள்ள படமாக இது தயாராகிறது. சித்துவும், ஹன்சிகாவும் சென்னையில் இருந்து விமானத்தில் கோவா புறப்படுகின்றனர். அவர்களுக்குள் நடக்கும் மோதலும் காதலுமே கதை. சென்னை விமான நிலையத்தில் முக்கிய காட்சிகள் படமாகி உள்ளது. கோவாவிலும் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.

சமீபத்தில் லிங்கா சூட்டிங் போது ரஜினியை ஜெயப்பிரதா நேரில் சந்தித்து ‘உயிரே உயிரே’ படத்தின் டிரெய்லரை காட்டினார். அதை பார்த்து ரஜினியும் பாராட்டினார்.

அத்துடன் தியேட்டர்களில் தனது லிங்கா படத்துடன் இணைத்து அந்த டிரெய்லரை வெளியிடவும் ஏற்பாடு செய்தார். அதுமட்டுமின்றி உயிரே உயிரே படத்தில் கவுரவ தோற்றத்தில் சில காட்சிகளில் நடிக்கவும் சம்மதித்தாராம். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியும் ஜெயப்பிரதாவும் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவருக்கும் இடையே நல்ல நட்பு உண்டு. அதனாலேயே இந்த படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக ஜெயப்பிரதாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிகின்றன.

by Swathi   on 23 Dec 2014  0 Comments
Tags: Rajinikanth   cameo   Special Appearance   Uyire Uyire   உயிரே உயிரே   ரஜினிகாந்த்   சிறப்பு தோற்றம்  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்... ரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...
எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !! எந்திரன் 2க்கு அவதார் ஒப்பனைக் கலைஞர் !!
புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !! புலி குழந்தைகளுக்கான அம்சங்கள் நிறைந்த குடும்பப்படம் : ரஜினிகாந்த் பாராட்டு !!
கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !! கபாலியில் பஞ்ச் வசனங்களே கிடையாதாம் !!
கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது! கபாலி போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது!
ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !! ரஜினியின் கபாலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் !!
பரபரப்பான பணியில் ஷங்கர் !! பரபரப்பான பணியில் ஷங்கர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.