LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மஞ்சபையை தொடர்ந்து, ரஜினி முருகனிலும் ராஜ்கிரணுக்கு தாத்தா வேடம்....

என்ன பெத்த ராசா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஜ்கிரண் தற்போது பல சென்டிமன்ட் வேடங்களில் கலக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு வெளியான மஞ்சப்பை படத்தில் தாத்தா வேடத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து, கார்த்தி நடித்த கொம்பன் படத்தில் மாமனார் வேடத்தில் நடித்துள்ளார் ராஜ்கிரண். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரஜினிமுருகன் படத்திலும் ராஜ்கிரண் தாத்தாவாக நடித்து வருகிறாராம்.

இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட பாணியில் பக்கா காமெடி கதையில் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி அவருக்கு மாமாவாக நடிக்கும் ஒரு கன்னட நடிகரும் ரஜினி ரசிகராக நடிக்கிறாராம்.

படத்தில் ரஜினி ரசிகராக இவர்கள் அடிக்கும் லூட்டி செம காமெடியாக படமாக்கப்பட்டு வருகிறதாம். அதேசமயம், ராஜ்கிரண், ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறாராம். கலகலப்பாக சென்று கொண்டிருககும் கதையோட்டத்தில் ராஜ்கிரணின் கேரக்டர் ரொம்ப சென்டிமென்டாக நெகிழ்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாம். ஆனால், சில இடங்களில் காமெடியையும் அவர் கலந்து செய்திருக்கிறாராம்.
தற்போது ரஜினிமுருகன் படத்தின் படப்பிடிப்பு சிவகாசியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

by Swathi   on 06 Feb 2015  0 Comments
Tags: மஞ்சப்பை   ராஜ்கிரண்   Rajkiran   Rajini Murugan           
 தொடர்புடையவை-Related Articles
ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !! ரஜினி முருகனுடன் களத்தில் இறங்கும் 49 -ஓ !!
ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது? ரஜினிமுருகன் ரிலீஸ் எப்போது?
பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !! பருத்திவீரனுக்கு நேர் எதிரானது கொம்பன் கதாபாத்திரம் !!
ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ் !! ஒரே நாளில் மாஸ், ரஜினிமுருகன் ரிலீஸ் !!
மஞ்சபையை தொடர்ந்து, ரஜினி முருகனிலும் ராஜ்கிரணுக்கு தாத்தா வேடம்.... மஞ்சபையை தொடர்ந்து, ரஜினி முருகனிலும் ராஜ்கிரணுக்கு தாத்தா வேடம்....
ரஜினி முருகனும் நகைச்சுவையான படம்தானம் !! ரஜினி முருகனும் நகைச்சுவையான படம்தானம் !!
சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேறும் தமன்னா !! சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேறும் தமன்னா !!
ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !! ராஜ்கிரண் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.