LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- சுதந்திரப்போராட்ட தமிழர்கள்

இராமு தேவர்

இராமு தேவர் என்பவர் நேதாஜி பிரித்தானிய அரசை எதிர்க்க உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் என்ற படைப்பிரிவின் ஒற்றர்.

 

பள்ளிப் பருவம்

 

இவர் இராமநாதபுரம் மாவட்டம் தும்படைக்கா கோட்டையில் இராமலிங்க தேவர் என்பவருக்கு பிறந்தார்.தனது ஏழாம் வயதில் தந்தை மலேசியாவில் உள்ள பினாங்கிற்கு வேலைக்கு சென்றதால் இவரும் அவரோடு இருக்க நேர்ந்தது. அங்கு ஆரம்ப கல்வியை முடித்து, தொடக்க கல்வியான கேம்பிரிட்ஜ் வரை படித்தார்.

 

நேதாஜி பிரச்சாரம்

 

இவரது பதினேழாம் வயதின் போது நேதாஜி பிரித்தானிய அரசை எதிர்க்க உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம் என்ற படைப்பிரிவிற்கு இளைஞர்களை இராணுவ பயிற்சி பெறுமாறு பிரச்சாரம் செய்து வந்தார். அப்பகுதிகளில் மலாக்கா பிராந்தா, பினாங்கு பகுதிகளும் அடங்கும். அந்த பிரச்சாரத்தை கேட்ட இராமு தேவர் தனது பதினேழாம் வயதில் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார்.

 

ஒற்றர் படை பயிற்சி

 

இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தவர்களில் மிகவும் இளையவர் இவர் என்பதால் இவருக்கு ஒற்றர் படையில் இடம் கிடைத்தது. இந்திய தேசிய இராணுவத்தின் ஒற்றர் படையின் பயிற்சி பள்ளியான சுவராசு பள்ளியில் பயிற்சி எடுத்தார்.

 

ஒற்றர் படை இரகசியம் வெளியாதல்

 

முதலில் பிரித்தானிய அரசுக்கு நேதாஜி ஒற்றர் படை வைத்திருந்தது அவ்வளவு உறுதியாக தெரியாமல் இருந்தது. 1944ல் சுவராசு தவிர்த்து மற்றொரு இந்திய தேசிய இராணுவ ஒற்றர் படையை சேர்ந்த 12 பேர் குசராத் மாநிலத்திற்கு நீர் மூழ்கி கப்பலில் வந்த போது பிரித்தானிய இந்திய அரசாங்கத்தில் பிடிபட்டனர். இதனால் நேதாஜி படையின் ஒற்றர்களின் இரகசியம் வெளியானது. இதனால் கிழக்குக் கடற்கரை இந்தியா முழுதும் பிரித்தானிய ஒற்றர்களின் மறைமுக கண்கானிப்பு அதிகமாகியது.

 

இராமு தேவர் பிடிபடுதல்

 

இதே நேரத்தில் இராமு தேவருடன் ஒற்றர் படையைச் சேர்ந்த குமரன் நாயர் மற்றும் சேது மாதவன் மூவரும் பர்மா வழியாக இந்தியாவிற்கு வர முயன்றனர். பர்மா எல்லையின் சிட்டகாங் அருகே இவர்களைப் பிரித்தானிய இந்திய இராணுவம் சுற்றி வளைத்தது. இவர்கள் மூவரும் தப்பிச் செல்ல முயன்ற போது குமரனுக்குக் காலில் குண்டடி பட்டதால் அவரை மற்ற இருவரும் காப்பாற்ற முயன்ற போது மூவருமே பிடிபட்டனர்.

 

சிறையில் சித்தரவதை

 

மூவருமே வங்கச் சிறையில் அடைபட்டனர். அங்கு நடந்த சித்ரவதைக் கொடுமையால் சேது மாதவன் வங்கச் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதனால் இராமுவையும் குமரனையும் அலிப்பூர் சிறைக்கு மாற்றினர்.

 

இருவரின் வழக்கும் அலிப்பூர் சிறைச்சாலையிலேயே நீதிபதி கிருசுனா இராவ் தலைமையில் நடந்தது. பிரித்தானிய அரசு சார்பாக எத்திராசு என்ற வழக்குரைஞரும், இராமு மற்றும் குமரனுக்காக கசுதூரி என்ற வழக்குரைஞரும் வாதாடினர். முடிவில் இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்க பிரித்தானிய அரசு உத்தரவிட்டது. இருந்தாலும் இராமுவிற்கு 18 வயதே ஆனதால் கருணையோடு இவ்வழக்கை அணுக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

 

சென்னையில் இராமு தேவர்

 

அவரின் வழக்கை கருணையின் அடிப்படையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இருந்தாலும் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு அதன்படி இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இருவரின் சடலங்களும் சென்னை ஓட்டேரி மைதானத்தில் புதைக்கப்பட்டது.

by Swathi   on 27 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.