LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இராசராசன் பிறந்த நாள்விழா & பொன்னியின் செல்வன் படப்புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது !!

இராசராசன் பிறந்த நாள்  (சதய)  விழா & பொன்னியின் செல்வன் (காமிக்ஸ்) படப்புத்தக வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொற்கோ தலைமையில் நடைபெற்றது.


கல்கியின் "பொன்னியின் செல்வன்" புதினத்தை அடியொற்றி நிலா காமிக்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள .... படப் புத்தகம் (முதல் பாகம் 2 அத்தியாயங்கள் ) வெளியிடப்பெற்றது. கூட்டுறவுத் துறைத் தேர்தல் ஆணையாளர் முனைவர் மு.இராசேந்திரன் இ .ஆ .ப ., இப்புத்தகத்தை வெளியிட, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.ப. அறவாணன் நூலைப் பெற்று வாழ்த்திப் பேசினார்.


எழுத்தாளர் பாலகுமாரன் பேரரசன் இராசராசனின் நீதித்துறைச் சிறப்பையும், காமிக்ஸ் புத்தக அமைப்பையும் பாராட்டினார். எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழகச் சிறப்பு அதிகாரி கி. தனவேல் இ.ஆ.ப.(ஓய்வு), கட்டடக்கலை அறிஞர் முனைவர் கோ.தெய்வநாயகம்,சிவபாதசேகரன், திரைப் பட நடிகர் இயக்குநர் கவிஞர் யார் கண்ணன் ஆகியோர் பேசினர்.
வரலாற்று அறிஞர் தஞ்சை கோ.கண்ணன் வரவேற்றார். நிலா காமிக்ஸ் பதிப்பகம் சரவணராசா பொன்னுசாமி நன்றி கூறினார்; இந்தப் படக்கதை (காமிக்ஸ்) புத்தகம் ரூ 145 விலையிலும், இணையத்தில் ரூ 99 விலையிலும் கிடைக்கும் என்றும் கூறினார்.

தமிழ் எழுச்சிப் பேரவையின் செயலாளர்  முனைவர் பா. இறைய ரசன் தீர்மானங்கள் படித்தார்:


1. ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கத் தமிழக அரசு 10 கோடி அளிப்பதற்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றி பாராட்டுகின்றோம். 

2. சென்னையில் ... ... இராசராசன் சதய விழாவைத் தமிழக அரசே ஏற்று மிகப் பெரிய அளவில் சிறப்பாக  நடத்த வேண்டுகிறோம். 

3. சமுதாயத் தொண்டிலும் ஆட்சிப் பணியிலும் சிறந்தவர்களுக்கு இராசராசன் விருது வழங்க வேண்டுகிறோம்.

4. தமிழகத் தொல்லியல் துறையின் மூலம் கீழடியில் நிலம் விலை கொடுத்து வாங்கிக் கையகப்படுத்தி  கள அருங்காட்சியகம் விரைவில் அமைக்கவும்,ஆதித்த நல்லூர் அகழ்வு ஆய்வு முடிவுகளை வெளியிடவும் வேண்டுகிறோம்.

5. இராபர்ட் புரூஸ் புட்  பல்லாவரம் மலையில் 150 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த உலகின் முதல் கற் கோடரித் தொழிற்சாலை 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளதால், விமான நிலையத்தின் எதிரில் உள்ள அம்மலையில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுகிறோம். இதனால் வரலாற்றுச் சான்றாகவும் சுற்றுலாத் தலமாகவும் மாறும்.

- தமிழ் எழுச்சிப் பேரவை, இறையரசன் | 9840416727.நிலா காமிக்ஸ் பதிப்பகம், சரவணராசா பொன்னுசாமி, 9884258266

by Swathi   on 01 Nov 2017  0 Comments
Tags: Rasarasan Piranthanal Vizha   Rajarajan Birthday   இராசராசன் பிறந்த நாள்விழா   பொன்னியின் செல்வன்   தமிழ் எழுச்சிப் பேரவை        
 தொடர்புடையவை-Related Articles
ஆங்கில காமிக்ஸ் புத்தக வடிவில் பொன்னியின் செல்வன் நாவல்... ஆங்கில காமிக்ஸ் புத்தக வடிவில் பொன்னியின் செல்வன் நாவல்...
இராசராசன் பிறந்த நாள்விழா & பொன்னியின் செல்வன் படப்புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது !! இராசராசன் பிறந்த நாள்விழா & பொன்னியின் செல்வன் படப்புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது !!
அனிமேஷன் திரைப்படமாகிறது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' ! அனிமேஷன் திரைப்படமாகிறது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.