LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தொண்டு நிறுவனங்களுக்கு அதிகச் சொத்துகளை எழுதி வைத்த ரத்தன் டாடா

ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தன்னுடைய செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கியுள்ளார்.

பிரபலத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 2024, அக்டோபர் 9-ம் தேதியன்று  உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் சொத்துக்கள் யார் யாருக்குக் கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி இருந்தார். அதில், டாடா சன்ஸ் பங்குகள் உட்படத் தனது செல்வத்தின் பெரும்பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்கு விட்டுச் சென்றார்.

அதே நேரத்தில், அவர் தனது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், ஊழியர்கள் மற்றும் தனது அன்பான செல்லப்பிராணிகளைக் கூட மறக்கவில்லை. தற்போது தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உயில் விவரங்கள் வெளிவந்துள்ளன, இது அவரது ரூ.3,800 கோடி சொத்துகள் பகிர்ந்தளிக்கப்பட்டதைக் காட்டுகிறது.

மேலும், "எனது இந்தக் கடைசி உயிலை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றால், அந்த நபருக்கு நான் வழங்கிய சலுகைகள் திரும்பப் பெறப்படும். எனது சொத்தின் எந்தப் பகுதியிலும் அந்த நபருக்கு எந்த உரிமையும் கிடையாது" எனப் பிப்ரவரி 23, 2022 அன்று கையொப்பமிடப்பட்ட உயில் கூறுவதாகத் தெரிகிறது.

அவருக்குக் கடைசிக் காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, ஒன்றுவிட்டசகோதரிகள் ஷிரீன் ஜெஜீபாய் மற்றும் டீனா ஜெஜீபாய் ஆகியோருக்குச் சொத்துக்கள் கிடைக்கும்படி செய்து இருந்தார். நெருங்கிய நண்பர் மெஹ்லி மிஸ்திரி, டாடாவின் 82 வயது சகோதரர் ஜிம்மி நேவல் டாடாவும் உயிலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது ரத்தன் டாடாவின் உயிலை நிறைவேற்றுபவர்கள் அதை உறுதிப்படுத்த மும்பை நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். இதை நீதிமன்றம் சரிபார்க்கிறது.

டாடாவின் விலங்குகள் மீதான அன்பு நன்கு அறியப்பட்டது தான், மேலும் அவரது உயில் அதைப் பிரதிபலிக்கிறது. அவர் தன்னுடைய செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கி, அவற்றின் பராமரிப்புக்காக ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.30,000 பெறுவதை உறுதி செய்தார்.

நீதிமன்ற ஆவணங்களின்படி, டாடாவின் வெளிநாட்டுச் சொத்துகள் சுமார் ரூ.40 கோடி மதிப்புடையவை எனக் கூறப்படுகிறது. அவரது தனிப்பட்ட ஆடம்பரக் கடிகாரங்களின் தொகுப்பும் உயிலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் Bvlgari, Patek Philippe, Tissot மற்றும் Audemars Piguet போன்ற  65 கடிகாரங்கள் உள்ளன.

by hemavathi   on 01 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
10 ஆண்டுகளில்  17 கோடி பேரை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திய இந்தியா 10 ஆண்டுகளில் 17 கோடி பேரை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திய இந்தியா
பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்  என்னென்ன? பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள் என்னென்ன?
பயணிகள் விமானப் போக்குவரத்தில் சீனாவை மிஞ்சும் இந்தியா பயணிகள் விமானப் போக்குவரத்தில் சீனாவை மிஞ்சும் இந்தியா
இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் எலான் மஸ்க் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்
அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா
இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம்  இந்தியா வருகிறார் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்
டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.