LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

ரத்து - சரஸ்வதி ராசேந்திரன்

முகுந்தை பிரியப்பட்டுதான் திருமணம் செய்து கொண்டாள் மலர் ,ஆனால் ஆறு மாதத்திற்குள் அவனை பிடிக்காமல் போய்விட்டது அவளுக்கு .அவனை எப்படி வெட்டி விடுவது ?என தீவிரமாக யோசித்தாள் .ஆனால் அவனோ அவளிடம் பிரியமாத்தான்

இருந்தான் கோர் ட் டு க்குபோனால் கூட ஆ று மாதமாகவாவது பிரிந்து வாழணும் என்று சொல்வார்கள் ,அதனால் ,அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே இருந்தாள் பின் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டில் இருந்தாள் .ஆறு மாதம் கழித்து வக்கீல் ஒருவரை பார்த்து பணம் கொடுத்து தனக்கு சாதகமாக பேசச்சொன்னாள் .

அவனை விவாகரத்து செய்ய தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொன்னாள் தனக்கு அவனிடமிருந்து ரத்து வாங்கித்தரும்படி கேட்டாள் '

அவளுடைய ஆதாரங்கள் முழுமையாக இருந்ததால் கோர்ட் அவளுக்கு ரத்து வாங்கி தந்தது

முகுந்தோ அந்த ஆதாரங்கள் பொய் என்று சொல்லிபார்த்தான் அவன் வாதம் எடுபட வில்லை இன்றும் அவளுடன் வாழவே ஆசைப்பட்டான் .மலருடைய வக்கீலுக்கு ஆச்சரியமாக இருந்தது .அவனைப்பற்றி விசாரித்ததில் அவன் மலர் சொன்னதுபோல்

எந்த பெண்ணுடனும் அவனுக்கு தொடர்பில்லை ,பின் மலர் ஏன் இப்படி? ஆதாரம் எப்படிவந்தது ?குழம்பிய வக்கீல் அவளிடமே இது பற்றி கேட்டார்

’’விவாகரத்துதான் கிடைச்சுட்டுதே இனி உங்களிடம் சொன்னால் என்னசார்?’’ அவருடைய முகநூலில் அக்கௌன்ட் ஓபன் பண்ணினேன் ,அதேபோல இன்னொரு பெண்ணினுடைய

பெயரில் கற்பனையாக ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணி இருவரும் அடிக்கடி அசிங்க அசிங்கமா பேசுவதுபோல் நானே சாட் செய்தேன் ,மாற்றி மாற்றி ஆன் லைனில் இருவரும் சரசமாடுவதுபோல் நானே பதிவு செய்து ,அதை பீரிண்ட் அவுட் பண்ணினேன் அந்த காப்பியைத்தான் கோர்டில் ஆதாரமாக காட்டினேன் .இந்த வசதி கம்ப்யூட்டரில் மட்டும்தானே கிடைக்கும் ,என்று சர்வ சாதாரணமாக சொன்னாள் .

இது நம்மை விட மோசமா சிந்திச்சு இருக்கே என்று அதிர்ந்துபோய் நின்றார் வக்கீல் .

by Swathi   on 30 Jan 2015  0 Comments
Tags: Rathu   Raththu   Saraswathi Rajendran   Saraswathi Rajendran Short Stories   ரத்து   ரத்து சிறுகதை   சரஸ்வதி ராசேந்திரன்  
 தொடர்புடையவை-Related Articles
செத்தவன் - சரஸ்வதி ராசேந்திரன் செத்தவன் - சரஸ்வதி ராசேந்திரன்
ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன் ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன்
ரத்து - சரஸ்வதி ராசேந்திரன் ரத்து - சரஸ்வதி ராசேந்திரன்
செக் - சரஸ்வதி ராசேந்திரன் செக் - சரஸ்வதி ராசேந்திரன்
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிப்பு !! இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.