|
||||||||
ரவா தோசை (rava dosa) |
||||||||
தேவையானவை: பாம்பே ரவா - அரைக் கிலோ பச்சரிசி - அரைக் கிலோ உப்பு - தேவையான அளவு இஞ்சி - சிறுதுண்டு பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது பெருங்காயம் - சிறிது சீரகம் - 1 டீஸ்பூன் கடுகு - அரைத் டீஸ்பூன் செய்முறை: 1.பாம்பே ரவையையும் பச்சரிசியையும் கலந்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். இரண்டு மாதங்கள் வரை இதனை வைத்திருக்கலாம். 2.ஒரு கப் மாவிற்கு இரண்டரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து கொள்ளவும். 3.மாவுடன் பொடியாக நறுக்கின இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், சீரகம், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.சிறிது கடுகையும் தாளித்து சேர்த்துக் கொள்ளலாம். 4.தோசை கல்லில் மாவை ஊற்றி வெந்தபின் பரிமாறவும். |
||||||||
by saranya on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|