LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது ஏன் தெரியுமா?

வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. 


அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள்.

அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால் உருவாக்கப்பட்டது. தனது திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர் சூட்டலாம். கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது. வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால், (பிறவி) கடலையே கடந்து விடலாமே என்று கணக்கு போட்டார். அதற்கேற்றாற்ற போல், மூத்த முனிவர் ஒருவர் இவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). இந்த நதியில் மூழ்கிக்கிட,'' என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது. 


ஏன்...மண்டூகமாகப் போ என மூத்தவர் சாபம் கொடுத்திருக்க வேண்டும்! மச்சமாகப் போ (மீனாகமாறு) என சாபம் பெற்றிருக்கலாமே! மீன் என்றால் தண்ணீரில் மட்டுமே வாழ முடியும். தவளை என்றால் தண்ணீர், தரை என எங்கும் வாழலாம். முனிவர்களின் கோபம் கூட நல்லதையே செய்யும். அவர்கள் செய்த தவத்தின் பலன் அது. சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாய் ஆற்றில் வசித்தார். மிக நீண்டகாலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு வருவார். காரணம் என்ன! எம்பெருமானான சுந்தரராஜர் அழகர்மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது மூத்தவர் கொடுத்த வாக்குறுதி....அல்லது சாப விமோசனம். ஒருவேளை பெருமாள் ஆற்றில் இறங்காமல், கரை வழியே நடந்தால் துள்ளிக்குதித்து விழுந்தாவது அவர் திருவடியில் வீழ்ந்து விடலாமே என்ற எண்ணம்!


பெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம்.... ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். 


பெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத் தரிசிக்கிறோம். அந்தத்திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம்.

பார்த்தாலே இப்படி என்றால்.... திருவடி பட்டால் என்னாகும்! அழகர்கோவிலில் இருந்து சுந்தர ராஜப் பெருமாள் குதிரையில் ஏறி வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது படுகிறது. சுயஉருவைப் பெற்றார். ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே!


""அடேய், பாரடா! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடியே அவர் மோட்சத்திற்கு போய் விட்டார்.

நமக்கும் அதே நிலை தான்! இன்று அழகர் ஆற்றிலே இறங்குகிறார். பார்க்க முடியாதவர்களுக்காக நாளையும் வைகைக்குள் இருக்கும் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுவார். அவரது திருவடியைத் தரிசித்தாலே போதும். பூலோகத்திலேயே சொர்க்கத்தைக் காணலாம்.ஆம்...அவரிடம் மனதார பிரார்த்தித்தால் போதும். மழை வேண்டுமென்றால் மழை பெய்யும். பணம் வேண்டுமென்றால் அள்ளித்தருவார். எல்லாம் நாம் அவர் மீது வைக்கும் நம்பிக்கையில் தான் இருக்கிறது.

by Swathi   on 13 May 2014  5 Comments
Tags: Kallalagar Varalaru   Kallalagar   Kallalagar Vaigai River   Madurai Festivals   கள்ளழகர்   கள்ளழகர் வைகை ஆறு   வைகை திருவிழா  
 தொடர்புடையவை-Related Articles
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது ஏன் தெரியுமா? கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது ஏன் தெரியுமா?
கருத்துகள்
06-Feb-2018 06:48:01 சுஜி பிரியா said : Report Abuse
வணக்கம்
 
10-May-2017 11:35:38 sathiya said : Report Abuse
சரிதான். இருந்தாலும் பரந்தாமன், ஸ்ரீ சுந்தராஜா பெருமாளாக இருக்குபோது பிறகு ஏன் ? கள்ளழகராக (கள்வனாக) மதுரைக்கு வருகைபுரிகிறார் என்பதுதான் புரியாமல் உள்ளது. இருப்பினும் அவனை பார்த்து நேரில் சேவித்தபோது ஒப்பற்ற பரவசம் அடைத்தேன். கோவிந்தா! கோவிந்தா! கள்ளழக கோவிந்தா.....
 
12-Sep-2016 15:27:24 ராஜமாணிக்கம் said : Report Abuse
அழகர் மதுரை வர காரணம்
 
23-Apr-2016 11:52:50 Ramu said : Report Abuse
God story buy why sokkanathar allready comming the vagai river?
 
21-Apr-2016 22:41:11 siva said : Report Abuse
அருமை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.