LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- எச்சரிக்கை

அதிகரிக்கும் கார் விபத்துக்கள்... காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?

நாளுக்கு நாள் தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பொதுவாக இந்த மாதிரியான விபத்துக்களில் அதிகம் சிக்குவது கார்கள்தான். அதிலும் சொந்த பயன் பாட்டிற்க்காக வாங்கியவண்டிகளே அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஏன் இந்த மாதிரியான விபத்துகள் ஏற்படுகின்றன, அதை எப்படி தவிர்ப்பது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போமா...


காரணம் தான் என்ன?


சொந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுத்து பக்கத்தில் உள்ள இடங்களுக்கு மட்டும் சென்று வருவார்கள் அவ்வளவு தான். ஆதலால் அவர்களுக்கு சாலைகளில் வாகனம் ஓட்டும் போது போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது.


காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.


தொலைதூரங்களுக்கு செல்லும்போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால் அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் தீடீரென காரைக்கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.


காரை அடிக்கடு ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கிவிடுவார்கள்.


இதை தவிர்ப்பது எவ்வாறு?


பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோகியர் காரை உபயோகப்படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது..இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.


பழக்கமில்லாத சாலைகளில் வாகனம் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது


வாகனத்தை தொலைதூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றூம் பின் சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.


லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. ஆதால் விபத்து ஏற்படுவது எளிது.


நாண்குவழிச்சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொரு லேனிற்க்கு மாறூம் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்து மாறவும்.


அடிக்கடி பின்னால் வரும் வாகனங்களை கவனிக்கவும் மறக்ககூடாது.


நமது சாலைகளில் 100கிமீ வேகத்திற்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அந்தவேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.

by Swathi   on 06 Oct 2016  1 Comments
Tags: Car Accidents   Accidents Reason   கார் விபத்துக்கள்   விபத்துக்கான காரணம்           
 தொடர்புடையவை-Related Articles
அதிகரிக்கும் கார் விபத்துக்கள்... காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி? அதிகரிக்கும் கார் விபத்துக்கள்... காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?
கருத்துகள்
08-Aug-2017 14:28:39 Munusamyg said : Report Abuse
Salai விதிகளை யாரும் சரியாக pinpatru vathillai dinamum car oty பழகணும். வண்டி பராமரிப்பு மிகவும் அவசியம். அவோஇது அச்சிடேன்ட்ஸ்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.