LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF

ஆடிப்பெருக்கின் சிறப்புகள் !

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு பணியை தொடங்குவார்கள். தமிழகத்தில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள்.


ஆடிபெருக்கு பூஜை செய்வது எப்படி?


தமிழக நதிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. அனைவருமே ஆடி பெருக்கை கொண்டாட வேண்டும். ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். முதலில் அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். பிறகு அதில் நிறைகுடத்திலிருந்து நீர் ஊற்றவும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும் மஞ்சள் நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். மஞ்சள் நீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். சாமி படங்களுக்கும், மஞ்சள் நீருக்கும் கற்பூர ஆரத்தி காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டிக்கொள்ளவும். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை வீட்டில் உள்ள செடி, கொடி, மரங்களில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யது நன்று. இப்படி செய்தால், நம் வீட்டில் செல்வம் பெருக்கெடுத்து ஓடும் என்பது ஐதீகம்.  


ராமபிரான் காவரியில் நீராடிய நன்னாள் :


ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பிறகு, அந்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். அதற்கு வசிஷ்ட முனிவர், தட்சிண கங்கை என்று அழைக்கப்படும், காவிரியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும் என ராமபிரானிடம் கூறினார். அதன் படி ராமபிரான் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 


ஆடிப்பெருக்கில் நகை வாங்கினால் நல்லதா ?


பொதுவாக ஆடி மாதத்தில் புதிய பொருட்களை வாங்கவோ, புது தொழில் தொடங்கவோ மாட்டார்கள். ஆனால் ஆடி பேருக்கு மட்டும், இதற்கு விதிவிலக்காகும். அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க சிறந்த நாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோன்று இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பது பெரியவர்களின் நம்பிக்கை.


காவிரிக்கு, ஸ்ரீரங்கநாதர் சீர்வரிசை அளிக்கும் நாள் :


ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும், ஸ்ரீ ரங்கநாதர், ஆடிபெருக்கு அன்று, ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தின் படித்துறையில் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு அபிசேக ஆராதனைகள் நடந்து முடிந்ததும்.அன்று மாலை வரை அங்கேயே இருப்பார். பிறகு பட்டு புடவை, திருமாங்கல்யம், வெற்றிலைபாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவார்கள். ஸ்ரீரங்கநாதர் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியை கண்டால் கோடி புண்ணியம்.

by Swathi   on 02 Aug 2013  2 Comments
Tags: ஆடிபெருக்கு   ஆடி திருவிழா   ஆடிபெருக்கு பூஜைகள்   காவிரி   ஆடி   Aadi   Aadi Festivals  
 தொடர்புடையவை-Related Articles
2013, பிப்.20 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது 2013, பிப்.20 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது
சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம் !! சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம் !!
ஆடிப்பெருக்கின் சிறப்புகள் ! ஆடிப்பெருக்கின் சிறப்புகள் !
கருத்துகள்
02-Aug-2015 09:43:50 lakshmi said : Report Abuse
ஆடி பெருக்கன்று தூரி கட்டுவது ஏன் ?
 
02-Aug-2015 02:18:13 Kuzhaliarul said : Report Abuse
Sirappu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.