LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

மத்திய ரிசர்வ் படையில் 482 தலைமை காவலர் காலிப்பணியிடங்கள் !!

மத்திய ரிசர்வ் படையில் அமைச்சரவை தலைமை காவலர் பணிக்கான காலிபணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள் : 482 (பொது பிரிவினருக்கு- 441, முன்னாள் ராணுவத்தினருக்கு - 41)


கல்வித் தகுதி : 


விண்ணப்பதாரர்கள் இண்டர்மீடியட் (10+2) அல்லது அதற்குச் சமமான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். 


தட்டச்சில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம் : 5200 - 20200. (கிரேட் பணம் ரூ.2400)


வயது வரம்பு: 12.3.2014 தேதிப்படி 18 முதல் 25 வயது வரை. மிகவும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டோர், உடல் ஊனமுற்றோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்படும்.


தேர்வு முறை : இரண்டு கட்டங்களாக நடைபெறும்.


முதல் கட்டம் : சான்றிதழ் / ஆவணங்களை ஆய்வு செய்தல், உடற்திறன் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவை


இரண்டாம் கட்டம் : திறனறி தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவை


எழுத்து தேர்வின் விவரங்கள்:


பகுதி 1: இந்தி / ஆங்கில மொழி


பகுதி 2: பொது அறிவு


பகுதி 3: எண்ணியல் திறன்


பகுதி 4: எழுத்து திறன்


மொத்த மதிப்பெண்கள் : 200


விண்ணப்ப கட்டணம் : ரூ.100. 


விண்ணப்ப கட்டணத்தை குறிப்பிட்ட மையத்தின் DIGP, GC, மற்றும் CRPFக்கு செல்லுபடியாகும் விதத்தில் போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டி.யாக எடுக்க வேண்டும். அனைத்து மகளிர் விண்ணப்பதாரர்கள், இட ஒதுக்கீட்டு பிரிவின் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை : 


www.crpf.gov.in என்ற சி.பிஆர்.எஃப் அலுவலக வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப உறையின் மீது “Application for Special Recruitment for the Post of Head Constable (Ministerial) in CRPF” என்று எழுதி அங்கீகரிக்கப்பட்ட 36 மையங்களில் அளிக்கலாம்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : மார்ச் 12, 2014


வெகு தொலைதூர இடங்களிலிருந்து வரும் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி : மார்ச் 19, 2014


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://crpf.nic.in/RECRUITMENT/364112.pdf என்ற சி.பிஆர்.எஃப் இணையதளத்தைப் பார்க்கவும்.

by Swathi   on 11 Feb 2014  0 Comments
Tags: மத்திய ரிசர்வ் போலீஸ்   மத்திய ரிசர்வ் காவல் படை   மத்திய ரிசர்வ் போலீஸ் வேலைவாய்ப்பு   போலீஸ் வேலைவாய்ப்பு   காவல் துறை வேலைவாய்ப்பு   Central Reserve Police Force   Central Reserve Police  
 தொடர்புடையவை-Related Articles
மத்திய காவல் படைகளில் 62 ஆயிரத்து 390 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் !! மத்திய காவல் படைகளில் 62 ஆயிரத்து 390 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் !!
மத்திய ரிசர்வ் படையில் 482 தலைமை காவலர் காலிப்பணியிடங்கள் !! மத்திய ரிசர்வ் படையில் 482 தலைமை காவலர் காலிப்பணியிடங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.