LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தோல் பராமரிப்பு (Skin Care)

அரிப்பை குறைக்கும் - ஆயுர்வேத மருத்துவம்

உடல் வாகிற்கு ஏற்றவாறு முதலில் பட்டினி இருக்க வேண்டும். பசி ஏற்பட்டதும் ஒன்றிரண்டு வேளை கெட்டியான முழு அளவு உணவு சாப்பிடாமல் கஞ்சி, புளிக்காத மோர் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. வியாதி நன்றாய் குணமடையும் வரையில் காரம், புளி, உப்பு குறைத்து புளிக்காத மோர், ஆடை நீக்கிய பால், பழைய அரிசி சாதம் சாப்பிடவும். தானியம், மாவுப் பண்டம், எண்ணெய்ப் பண்டங்களை அறவே அகற்ற வேண்டும். கொஞ்சம் அதிக அளவில் சுத்தமான தண்ணீரைக் குடிப்பதும், இளநீர் பருகுவதும் மிக நல்லது.பச்சையாக அருகம்புல், பச்சை மஞ்சள் கிழங்கு இரண்டையும் சேர்த்து அரைத்து தோலில் தடவி, அந்தப் பூச்சு உலரத் தொடங்கும்போது, சுத்தமான நீரினால் அலம்பும். சோப்பு ஒன்றும் தேயக்கூடாது.தனி ஸர்ஜிகா க்ஷரம் ஒன்றை மட்டும் தண்ணீரில் எவ்வளவு பூர்ணமாய்க் கரையுமோ அவ்வளவு கனமாய்க் கரைத்து அந்தத் திரவத்தை உடலில் பூசி ஒரு மணி நேரம் இருந்து குளிக்கவும். இந்தப் பூச்சுகள் அனைத்தும் தோல் அரிப்பு, எரிச்சல் எல்லாவற்றையும் நன்றாய் சீக்கிரம் போக்கும். தூர்வாதி தைலம், மஹாதிக்தககிருதம் இவற்றை வியாதி குறைந்த பின்பு சில நாள்கள் பூசிக் குளிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

உள் மருந்துகள் - முதலில் குடல் சுத்திக்குச் சிறு பேதிக்குச் சாப்பிட வேண்டும். இதற்குக் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் காய்களின் கஷாயம் (திரிபலா கஷாயம்) காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.அதிமதுரம், இலுப்பைப்பூ, சித்தரத்தை, வெள்ளைச் சந்தனம், செஞ் சந்தனம், நொச்சியின் பட்டை, திப்பிலி இந்த ஏழும் சேர்த்துக் கஷாயம். நன்னாரி வேர், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், அதிமதுரம், சீந்தில்கடி இந்த ஐந்தும் சேர்த்துக் கஷாயம்.இவைகளில் ஏதாவது ஒரு கஷாயத்தைத் தினம் மூன்று வேளை - வேளைக்கு 3-4 அவுன்ஸ் வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடவும். நோயின் சீற்றம் நன்கு குறைந்தவுடன் மஹாதிக்தககிருதம் காலை, மாலையிலும் ஹரித்ராகண்டம் லேகியம் இரண்டு வேளை உணவிற்குப் பிறகும் சாப்பிடவும்.

by Swathi   on 10 Dec 2012  6 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
12-Jan-2018 17:00:30 siva said : Report Abuse
தொ டாய் அரிப்பு இருக்கு மெடிசின் என்ன
 
19-Jun-2017 09:55:09 mari said : Report Abuse
எனக்கு ரொம்ப நாள்ல அரிப்பு இருக்கு. குய்ப்பைமேனி இலையை அரைத்து போட்டேன் ஆனால் சரியாக மாண்டுக்கு. அரிப்பை போக்க என்ன செய்யலாம் ?
 
21-Jan-2017 10:28:43 Rajashree said : Report Abuse
Mugathi thol urigirathu athai pokka yenna seiya vendum
 
02-Jul-2016 01:45:58 கவிதை இந்திரேஷ் said : Report Abuse
இதில் வரும் மருத்துவ குறிப்பு எனக்கு உபயோகமாக இருந்தது மற்றும் உண்மையாகவும் இருந்தது நன்றி
 
10-May-2016 13:16:13 gp.selvam said : Report Abuse
Neenda nal ulla udal aarypuku marundu devai NANRY
 
24-Apr-2016 07:57:41 ABDUL RAHIM said : Report Abuse
TREATMENT FOR MUTTON ALERGY
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.