LOGO
  முதல் பக்கம்    மற்றவை    இந்தியச் சட்டம் (Indian Law) Print Friendly and PDF

உங்களது புகாரை காவல் துறை ஏற்கவில்லையா !! நீங்கள் செய்ய வேண்டியது !!

சட்டத்தால் குற்றம் எனக் கூறப்பட்ட ஒரு செயலைப் பற்றி பாதிக்கப்பட்ட நபரோ அல்லது தெரிந்த வேறு நபர்களோ அச்செயல் பற்றி புகார் தெரிவிக்கலாம். 


புகார் அளிக்கும்போது எந்த தேதியில், நேரத்தில், யாரால், எவ்வாறு குற்றம் நடைபெற்றது என்பதை தெரிந்தவரை தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.


முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன? (FIR)


புகாரைப் பெற்ற காவல் அதிகாரி அச்சிடப்பட உரிய படிவத்தில் புகாரையும். புகாரில் கண்ட பொருன்மைக்கு ஏற்ப சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் நீதித்துறை நடுவர் ஒருவருக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் அறிக்கையே முதல் தகவல் அறிக்கை எனப்படும்.


ஒரே குற்றச் சம்பவம் தொடர்பாக எதிர்-எதிர் தரப்பினர் மீது 2 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. (2001 Air SCW 2571)


சாதாரண வழக்குகளில் புகாரைப் பெற காவல் துறையினர் மறுக்கலாமா? 


எவ்வகையான புகாரையும் காவல்துறையின் பெற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது. புகாரைப் பெற்று அதனை சமூக பதிவேட்டில் பதிவு செய்து அதன் நகலை புகார்தாரருக்குத் தரவேண்டும். 


பின் புலனாய்வில் குற்றம் நிகழ்ந்ததாக தெரியவந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம் இல்லை எனில் வழக்கை முடித்துவிடலாம்.


புகாரை ஏற்கமறுத்துத்தால் :


புகாரை காவல் நிலைய அலுவலர் ஏற்காவிட்டால் காவல் மேல் அதிகாரி (மாவட்டக் கண்காணிப்பாளர், மாநகர ஆணையாளர் அல்லது காவல் துறைத் தலைவர்) ஆகியோருக்கு நேரடியாகவோ. அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படவேண்டும். அல்லது – நீதித்துறை நடுவர் முன் ஒருவர் தனது புகார் குறித்து முறையீடாகப் பதிவு செய்யலாம். அதை நடுவர் விசாரித்து சாட்சியம் பதிவு செய்து புலனாய்வு செய்ய வேண்டிய வழக்கு எனில் போலீசாரை புலனாய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிப்பார்.

by Swathi   on 21 May 2014  20 Comments
Tags: புகார்   கிரிமினல் புகார்   காவல்துறை   File a Complaint           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
22-Nov-2019 09:24:24 பா.முத்தமிழ்செல்வம் said : Report Abuse
ஐயா நான் திருக்கோவிலுக்கு சொந்தமான மனையில் வீடுகட்டி 35 வருடங்களாக வசித்து வருகிறேன் தற்போது நாங்கள் வீட்டைவிட்டு சாலைக்கு செல்ல 2 அடி அகலமும் 25 அடி நீளமும் கொண்ட ஒரு வழி உள்ளது அதுவும் திருக்கோவிலுக்கு சொந்தமானது அது ஒன்று மட்டுமே நாங்கள் சாலைக்கு செல்லக்கூடிய வழியாக இருந்தது இதற்க்கு பக்கத்து வீட்டார் அந்த வழியை மறைத்து வீடுகட்டுகிறார் கேட்பதற்கு அதில் செல்வதற்கு உங்களுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்று மறுக்கிறார் இதற்கு நாங்கள் என்ன செய்வதென்று தயவுகூறுங்கள்
 
03-Jul-2019 07:37:03 Sathish said : Report Abuse
I am vellore district thakkolam police station I will one complante lover family main killing prison my susite you will not take a my complante and not responsible for poor people Many problems or after complante was takeing the police people thakkolam please help and take a complante Thakkolam Nana Prakash police main I will tell that complante he was charge the complete and my information not writing Some people I am black mile to tell that police big problem he was complante to take after the emergency to register காம்ப்ளண்ட் The poor people some proplem tell 10 days daily report and morning 6 am to 6pm you will site the police station black mile the people, please many people this kis not responsible to main rowdys was helped do not take ya complante this matre main 2 hours I will wait and take ya complante Main reasion poor people This love proplem I will death please main killers to not show the lovers family please help police my name sathish, ganapathipuram,vellore
 
25-Mar-2019 09:47:34 RAMESH R said : Report Abuse
ஐயா வணக்கம், நான் ஒருவருகூ அவரின் மருத்துவ சளவிடக்க ரூபாய் 4 ௦௦௦௦௦.௦௦ கடனகா கொடுத்து மூன்று வருடம் ஆகியும் திரும்ப தரரா மால் யமற்றுக்கொண்டிருக்கிறார் கட்கோம்போதேல்லாம் எந்த மதம் அடுத்த மதம் என்ற அல்லைக்கையெடுத்தவருகிறார் எதை எப்படி நான் பெறுவது
 
14-Oct-2018 14:06:03 Prabudeva said : Report Abuse
ஐயா நான் காதல் திருமணம் செய்துள்ளேன். பெண் வீட்டார் என் மேல் ஆள் கடத்தல் என புகார் அளித்துள்ளார். புகார் தந்து விட்டு என் வீட்டில் உள்ள அனைவரையும் அடித்து துரத்தி விட்டு எனது வீட்டில் இருந்த அனைத்து பொருள்களையும் எடுத்து விற்று குடித்து வருகின்றனர். அதை கேட்டதர்கு நாங்கள் அப்படி தான் செய்வோம் என கூறுகின்றனர். காவல்துறையிடம் முறையிட்டால் சரியான முறையில் பதில் அளிப்பதில்லை இதற்கு என்ன செய்வது எப்படி செய்ய வேண்டும் என கூற வேண்டும் ஐயா.
 
19-Sep-2018 10:08:18 INDIAN said : Report Abuse
டேய் எல்லாரும் இனிமேல் சட்டம் படிங்கடா நமக்கு நாம தாண்ட எல்லாமே...எவனும் உதவி செய்ய வர மட்டன் ..மக்கள் எல்லோரும் அடிப்படை தெரிந்து கொள்ளுங்கள் ..போலீஸ் அரசியல்வாதிகள் இருவருக்கும் தகுந்த பாடம் கொடுப்போம்
 
12-Sep-2018 23:59:19 தீபீசிகா said : Report Abuse
ஐயா நான் தற்சமயம் ஒத்தி வீட்டில் குடியிருந்து வருகிறேன் எனக்கு இரண்டு வருட ஒத்தி தேதி முடிந்து இரண்டு மாதம் ஆகிறது எனது வீட்டு உரிமையாளர் நான் கொடுத்த தொகையை தராமல் இழுத்தடித்துக் கொண்டு உள்ளார் மேலும் நான் குடியிருந்து வரும் வீட்டில் 12 போர்ஷன் வாடகைக்கு விட்டிருக்கிறார் எனது வீட்டின் உரிமையாளர் குடியிருந்து வரும் யாருக்கும் அட்வான்ஸ் தொகையை திருப்பித் தருவது இல்லை மேலும் அபகரித்து கொள்கிறார் அதேபோல் நான் ஒத்திக்கு கொடுத்துள்ள தொகையும் அபகரித்துக் கொள்ள நினைக்கிறார். மேலும் அவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளது நாங்கள் பணத்தை திரும்பி கேட்டாள் எங்களை தகாத வார்த்தையில் பேசி வீட்டை காலி செய்துவிட்டு சாவியைக் கொடு அப்புறம் பார்ப்போம் என்று கூறி அடிதடிக்கு வர பார்க்கிறார் ஐயா காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றால் காவல்துறை அவர்களுக்கு சாதகமாக செயல்படும் என்று கூறி பயமுறுத்தி வருகிறார் ஐயா இவரிடமிருந்து எனது ஒத்தி தொகையை நான் எவ்வாறு திரும்ப பெறுவது யாரிடம் புகார் தெரிவிப்பது
 
11-Sep-2018 10:18:11 பவித்ரா said : Report Abuse
ஐயா நாங்கள் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்கள். எங்கள் எதிர் வீட்டில் வசிப்பவர்கள் புதிதாக வீடு கட்டி உள்ளனர் .அனால் அவர்கள் தெரு அமைத்துள்ள பாதைஇல் 2 அடி ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர் .அதனால் நாங்கள் எங்கள் வீட்டிற்கு சென்று வர சிரமமாக இருந்தது .அதை அவர்களிடம் கூறினால் மிகவும் தகாத வார்த்தைகளை உபயோகிக்கின்றனர். எகனால் நாங்கல் எங்களது இடத்தை நாங்கள் கொண்டு செல்வத்தட்ட்க்கு ஏற்றார் போல் அமைத்து கொண்டோம் .அதன் பின்பும் அவர்கள் எங்கள் வீட்டின் பின்புறத்தில் அதாவது கழிவறைஅமைத்திருக்கும் இடத்தில் நீர் ஊற்றி செபியிடங் நிறைத்து விட்டது .அதனால் 2 வது செப்பிடங் அமைத்து உள்ளோம் . இருப்பினும் அவர்கள் மீண்டும் அதிகமாக நீர் ஊற்றி வருகின்றனர் .அதை இதை கேட்டால் காவல் துறைக்கு சென்று விடுவதாக கூறுகின்றனர் . இந்த பிரச்சனைக்காக காவல் துறைக்கு சென்ற பொது அவர்கள் எங்கள் தரப்பின் வாதங்களை கேட்கவில்லை. அது மட்டும் அல்லது எதிர்வீட்டில் இருப்பவர்கள் எங்கள் உடன் அடிக்கடி சண்டை இட்டு வருகின்றனர்.இப்பொழுது காவல் நிலையத்தில் எங்கள் ஏட்படும் இடையூறை புகாராக எப்படி கொடுப்பது என்று தயவு செய்து கூறுங்கல்
 
05-May-2018 03:51:55 Beulah said : Report Abuse
அய்யா, நான்ரூபாய் 400000/-கடன் வாஙகினேன் 1100000/- திரும்ப செலுத்திவிட்டேன். இன்னும் மீட்டர் வட்டி, கந்துவட்டி போட்டு இன்னும் 400000/- கேட்டு மிரட்டுகிறார்கள் இச்சமயத்தில் வீட்டை காலி செய்யலாம் என உள்ளேன் காலி பண்ணும்போது பிரச்சனை செய்தால் என்ன செய்வது. (ஏற்கனவே petition commissioner office இல் கொடுத்துள்ளேன்) பதில் கூறுங்கள் பிரச்சனை செய்தால் என்ன செய்யட்டும்.
 
28-Dec-2017 09:12:10 கி. முனுசாமி said : Report Abuse
ஐயா, எனக்கும் இந்திய சட்டம் பற்றி தெரிந்துகொள்ள மிகவும் விருப்பம். சட்டம் பற்றி விழிப்புணர்வு எல்லா மக்களும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ஒவொரு இந்தியரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
 
28-Dec-2017 09:06:48 கி.MUNUSAMY said : Report Abuse
ஐயா, இன்றைக்கு காவல் நிலையத்தில் செல் போன் காணாமல் போனது புகார் கொடுத்தால் மதிப்பு இல்லை. அலை விடுகிறார்கள். எந்த புகார் கொடுத்தாலும் எந்த பயனும் இல்லை.
 
26-Oct-2017 18:30:51 பார்த்தசாரதி, said : Report Abuse
வாபஸ் பெறுவது பற்றி சட்டத்தின் விழிப்புணர்வு என்னக்கு சொல்லுமாறு பனிவன்புடன் கேட்க்கிறேன் .......
 
19-Oct-2017 13:38:47 ரமேஷ் குமார் said : Report Abuse
வணக்கம் அய்யா, நான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவன் . என் அப்பா சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் வீடு காட்டினார் .அதுஎங்களது சொந்தநிலம் ,பின் எனது அப்பா மாடு வைத்திருந்தார் ஆதற்கு தொழுவம் கட்டவேண்டி எங்களது வீட்டின் பின் என் appavin தாய்மாமாவின் நிலம் இருந்தது அதில் என்அப்பா அவரிடம் கேட்டு பின் தொழுவம் அமைத்துள்ளார் . சில வருடங்களுக்கு பின் என் அப்பாவிற்கும் அவரது தாய் மாமாவுக்கும் சண்டை .பேசுவது கிடையாது இந்தசூழ்நிலையில் அவர் ஒரு பள்ளர் சமுதாயத்தைசார்த்த ஒருவருக்கு விற்றுவிட்டார் . சிலவருடங்களுக்கு முன் எனப்பாவிn தாய்மாமா இறந்துவிட்டார் . இப்போது ஏழு வருடங்களாக இந்த இடம் எனக்கு சொந்தம் இதில் பலன்க கூடாது . என்று பிரச்சனையும் சாதிப்பெயரையும் கூறி என்அப்பாவை அவமானப்படுத்துகிறார் . நான்ஆசிரியர் படித்துள்ளதால் என்னிடம் பிரச்சனை செய்யவே நினைக்கின்றனர் .என் அப்பா இதனால் பயப்படுகிறர் .என்தொழுவத்தின் சுவரை ஒட்டி மரத்தை வைத்து சுவர் அரித்து கொண்டு வருகிறது .ஒரு.oru மதத்திற்கு முன் ஓட்டை அடித்து உடைத்துஇப்படி செய்கிறீர்களே எனக்கேட்ட என்en அப்பாவை திட்டியும் கீழேயும் தள்ளி விட்டுள்ளனர்
 
26-Sep-2017 13:41:33 முரளி krishnan said : Report Abuse
ஆவடி T 7 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் எடுக்க பட வில்லை என்ன செய்வது . இன்ஸ்பெக்டர் டில்லிபாபு குற்றவாளிக்கு உதவி செய்கிறார்
 
06-Sep-2017 18:54:04 PPK said : Report Abuse
புகாரை காவல் நிலைய அலுவலர் ஏற்காவிட்டால் காவல் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் சரி, அல்லது – நீதித்துறை நடுவர் முன் எனில் நீதிமன்றம் செயல்படும் வேலையில் மட்டும் நீதிபதி முன்பு அளிக்கவேண்டுமா இல்லை எந்த தருணத்திலும் நீதிபதி முன்பு அளிக்கலாமா .
 
31-May-2017 01:48:43 சரவணன் said : Report Abuse
எங்கள் ஊரில் நான் கோவில் தர்மகர்த்தார் ஆகா இருந்தேன் என்னுடைய சூழ்நிலையின் காரணமாக கொஞ்சநாட்கள் பக்கத்துக்கு ஊரில் குடிப்பயந்தேன் அதன் காரணமாக எனது தம்பியை தர்மகர்த்தராக பார்க்கசொன்னேன் இப்பொழுது நான் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன் இனிமேல் நான் கோவிலின் தர்மகர்த்தராக பார்த்துக்கொள்கிறேன் என்று கேட்டல் தர மறுக்கிறார் எதற்கு என்ன செய்வது எது எந்த சட்டத்தின் கீழ் வரும் இதை புகார் கொடுத்தால் எனக்கு வருமா கூறுங்கள்.
 
29-Mar-2017 09:29:07 Ramesh Kumar said : Report Abuse
Hi ...ஏன் பெயர் ரமேஷ் எனக்கு இந்திய தண்டனை சட்டம் படிக்க அல்லது தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் அனால் தமிழில் அந்த ஆப் இல்லை தமிழில் ஆப் இருந்த சொல்லுங்க நண்பர்களேஉறவுகளே.. ...பதிவிறக்கம் செய்ய லிங்க் அனுப்புங்க
 
29-Mar-2017 06:30:41 சிங்காரம் p said : Report Abuse
அய்யா,விவசாயத்திற்கு நிலத்தடி நீரின் அளவு மிகவும் கீழே போய்விட்டது .இந்த நிலையில் மோட்டாரில் தண்ணீரும் குறைந்துவிட்டது .அரசால் மானியத்தில் சொட்டுநீர் பாசனத்திற்கு கொடுக்கப்படும் ஹோஸ் பைப்பும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை காரணம் மானியத்தில் அந்த பைப் வாங்க குறைந்த பட்ச நிலம் ஒரு ஏர் ( என்பது நூறு சென்ட்) இருக்க வேண்டும் என்கிறார்கள் . ஆனால் என்னிடம் 52 சென்ட் அதாவது 162 குழிதான் உள்ளது . அதனால் எனக்கு கொடுக்க மறுக்கிறார்கள் .என்னைப்போல் எத்தனையோ விவசாயிகள் இதுபோல் குறைந்த நிலம் வைத்துக்கொண்டு இலவசத்திலோ அல்லது மாணியத்திலோ மேற்படிஹோஸ் வாங்க முடியாமல் தவிக்கிறார்கள் . எனவே எங்களிடம் இருக்கும் நிலத்திற்கான அளவிற்குஉள்ள ஈவிற்கு கோடுத்து உதவினால் நாங்களும் பிழைக்க வழி கிடைக்கும்.. ஆகையால் மானியம் என்பது எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.அதேபோல் மின்னிணைப்புக்கும் பாரபட்சம் காட்டாமல் கொடுத்து உதவினால் நாங்களும் பிழைப்போம் பொதுமக்களுக்கும் விளைபயிர்கள் மூலம் அவர்களின் தேவைகளை எங்களாலும் பூர்த்தி செய்ய முடியும்.அரசு அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா ? R
 
02-Mar-2017 03:19:26 அன்புராஜ் said : Report Abuse
நான் நடை மேடையில் சிறு வியாபாரம் பார்க்கிறேன் இதை பார்க்க விடாமல் போலீஸ் ாெ ருட்களை காலால் உதைத்து உடை த்து விட்டார்கள் நான் என்ன செய்வது. தயவு செய்து எனக்கு உதவுங்கள்
 
17-Feb-2017 02:51:19 praveen kumar said : Thank you
dharma chathiram akkaramippai thaduppathu eppadi
 
20-Sep-2016 10:31:46 அருண்குமார் said : Thank you
ஜயா நான் குடியிக்கும் இடத்தில் கழிவு நீர் தேங்கி கொசுக்ள் அதிகமாக உரூவாகிறது இதை சம்பத்தபட்ட வீட்டூ காரார்களிடம் கூறினால் அப்படிதான் (தினமலர் பேப்பர் ல் வேலை செய்பவர்)வரும் உன்னால் முடிந்ததை செய்துகோ என்று கெட்ட வார்த்தைகளாள் திட்டுகிறார் இதை நான் யயாரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் தயவு செய்து கூறுங்க்ள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.