LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- தோல் பராமரிப்பு (Skin Care)

தோல் அரிப்பை நீக்க - ஆயுர்வேத மருத்துவம் !

தோலில் ஏற்படும் அரிப்பு, சொரி, சிரங்கு  போன்ற உபாதைகளுக்கான காரணங்களை ஆயுர்வேத ரீதியில் இங்கு காண்போம்.வெயிலில் அலைந்த பின் உடனே குளிர்ந்த நீரில் நீராடுதல், தானாக வரும் வாந்தியை அடக்குதல், உணவு செரிமானமாகாத நிலையில் கலவி இன்பம் கொள்ளுதல், வயிறு முட்ட சாப்பிட்டு பகலில் உறங்குதல், தேன், கரும்புச்சாறு, மீன், எலுமிச்சம் பழம், முள்ளங்கி, மணத்தக்காளி இவற்றை அதிக அளவில் பயன்படுத்துதல், புது அரிசி, கேழ்வரகு ஆகியவற்றை சாதமாக வடித்து பால், தயிர், மோர் ஆகியவற்றில் ஒன்றுடன் கலந்து அதிகம் பயன்படுத்துதல், அஜீரண நிலையில் மேலும் உண்பது போன்றவற்றால் மூன்று தோஷங்களாகிய வாதம், பித்தம், கபம் ஆகியவை சீற்றமடைந்து ரத்தம்,தோல் ஆகிய பகுதிகளைக் கெடுத்து உபாதைகளை ஏற்படுத்துகின்றன.

ஆயின்மென்ட், தைலம் தேய்த்தல் போன்ற மேல் பூச்சு மருந்துகளால் இந்நோய் மாறுவதற்கு வாய்ப்பில்லை. தோலில் ஒரு சிறிய பகுதியைப் பாதிக்கும் உபாதைகளுக்கு அந்தப் பகுதியிலிருந்து ரத்தத்தைக் கொத்தி, எடுப்பதால் மட்டுமே இந்நோய் தீர வாய்ப்பிருக்கிறது. சில நாட்கள் புற்று போல் வளர்ந்துள்ள பகுதியில் வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து தொடர்ந்து  பற்றுப் போட்டுவர அந்தப் பகுதி மிருதுவான நிலையை அடையும். அதன்பிறகு ரத்தப் பரிசோதனைக் கூடங்களில் கிடைக்கும் ஊசியினைக் கொண்டு ரத்தத்தைக் கொத்தியெடுக்க எளிதாக இருக்கும். கெட்டுப் பதனழிந்த நிலையிலுள்ள நிண நீரும். ரத்தமும் வெளியேற்றப் பட்டால் அரிப்பு நின்று விடும். அதன்பிறகு ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய நால்பாமராதி அல்லது ஜாத்யாதி தைலத்தை பஞ்சில் நனைத்து கொத்தப்பட்ட பகுதியில் ஊறவைக்க வேண்டும். தோல் மிருதுவாகி புற்று போன்ற பகுதி அழுங்கிவிடும்.கொத்தும்போது அதிகமான ரத்தப் பெருக்கை உடனடியாக நிறுத்த கோலரக்கு எனும் கொம்பரக்கை பொடி செய்து தூவப் பலன் தரும்.

தோல் உபாதையால் அவதியுறும் நபர்களுக்கு பொதுவாகவே மருந்தும் பத்தியமும் மிக முக்கியமானவை. மருந்துகளில் ஆரக்வதாதி கஷாயம், ஒரு வில்வாதி குளிகையுடன் சாப்பிட உகந்தது. 15 மிலி. கஷாயம், 60 மிலி. வெது வெதுப்பான தண்ணீர், 1 மாத்திரை வில்வாதி குளிகையை அதனுடன் அரைத்துச் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிடவும். காலை, இரவு உணவிற்குப் பிறகு 30 மிலி. கதிராரிஷ்டம் சாப்பிடவும்.

by Swathi   on 08 Dec 2012  9 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வைத்தியம் வைத்தியம்
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
கருத்துகள்
12-May-2019 17:43:40 B.vinoth said : Report Abuse
ஐயா எனக்கு டை அடித்தால் தலையெல்லாம் அலர்ஜியா இருக்கு
 
22-Nov-2018 02:00:44 M.sakkaravarhi said : Report Abuse
Ayya padarthamarayal naa migavum avathi padugiren iravil thoonga mudiyàvillai arippu thanga mudiyavillai veppilai manjal araithu payanpaduthiyum Payne illai venum vali koorungal
 
14-May-2018 12:16:34 Karan k said : Report Abuse
அய்யா எனக்கு thodai இடுக்குகளில் அரிப்பு(சிவப்பு நிறத்தில்) உள்ளது . எந்த ஒரு oinment எடுத்தும் சரியாக இல்லை. இதற்கு ஒரு தமிழ் மருத்துவ குறிப்பு சொல்லுங்கள்.
 
09-Feb-2018 18:52:14 Annd said : Report Abuse
Fungues continused iruku tablet yadutha stop agudhu vitta odana varudhu
 
21-Nov-2017 11:11:01 premkumar said : Report Abuse
ஐயா எனக்கு உடலில் இரு கால்களுக்கு தொடை பகுதியில் அரிப்பால் அவதிபடுகிறேன் என்னால் துங்க முடியவில்லை எந்த மருந்து போட்டாலும் சரி இல்லை ஒரு வலி சொல்லுங்க
 
30-Aug-2017 10:10:03 ஆனந்த பாபு said : Report Abuse
ஐயா வணக்கம் எனக்கு கடந்த ஒரு மாத காலமாக அரிப்பு மிக கடுமையாக உள்ளது அவற்றை எப்படி போக்க வேண்டும் எண்பதை தயவு கூர்ந்து கூறவும்.
 
07-Feb-2017 21:29:44 ravikumar said : Report Abuse
பாதுகாப்பாக உடலுறவு கொள்ள வழிகள் மற்றும் athanal வந்த அரிப்பை குணப்படுத்த குறிப்புகள் தேவை
 
12-Dec-2016 00:38:31 vimala said : Report Abuse
லாஸ்ட் 6 மதமா எனக்கு அலர்ஜி இருக்கு இதை எப்படி சரி செய்வது என தெரியவில்லை . தகவல் வேண்டும்
 
23-Nov-2015 03:09:27 Bala said : Report Abuse
லாஸ்ட் 3 யியர்ஸ் எனக்கு தோல் அரிப்பு உள்ளது இதை எப்படி குன படுத்துவது எங்கு சென்று பார்ப்பது .தகவல் வேண்டும் . 7845856524...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.