|
|||||
சாதி வாரிக்கணக்கெடுப்பின் தொடர்ச்சியாக தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உயர்வு |
|||||
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துவருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு
நடத்த வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, தேர்தல் வாக்குறுதியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதில், தெலங்கானாவின் மக்கள் தொகையில் 56.33 சதவிகித மக்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என தெலங்கானாவின் சமூகப் பொருளாதார, அரசியல், சாதி கணக்கெடுப்புக்கான அறிக்கை தெரிவித்திருக்கிறது.
இந்தக் கணக்கெடுப்பின் மூலம் ``தெலங்கானா மாநிலத்தில் (BC) பிற்படுத்தப்பட்ட வகுப்பின மக்கள் தொகை 1,64,09,179 (46.24 சதவிகிதம்). பட்டியலின மக்கள் தொகை (SC) 61,84,319 (17.43 சதவிகிதம்). பட்டியலின பழங்குடியினர் மக்கள் தொகை (ST) 37,05,929 (10.45 சதவிகிதம்). இதர சாதியினர் மக்கள் தொகை (OC) 44,21,115 (13.31 சதவிகிதம்) இருப்பது தெரியவந்துள்ளது.
அதேபோல முஸ்லிம் மக்கள் தொகை 44,57,012 (12.56 சதவிகிதம்). இதில், பிற்படுத்தப்பட்ட வகுப்பின முஸ்லிம்கள் (BC) 35,76,588 (10.08 சதவிகிதம்) இதர சாதியின முஸ்லிம்கள் (OC) 8,80,424 (2.48 சதவிகிதம்).
இதையடுத்து அங்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, பிற்படுத்தப்பட்டோருக்கு 29 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல பட்டியலினத்தவர்களுக்கு (SC) 15% ஆகவும், பழங்குடியினருக்கு 6% இருந்த இட ஒதுக்கீட்டை 10% ஆகவும் உயர்த்தி அம்மாநிலச் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
|
|||||
by hemavathi on 19 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|