நமது உரிமையை மீட்க அருமையான வாய்ப்பு
சனவரி 26 குடியரசு தினத்தில் கிராம சபை கூட்டம் உள்ளூர் அரசு அதிகாரிகள் தலைமையில் உங்கள் கிராமத்தில் கட்டாயம் நடைபெற உள்ளது. ஊராட்சி தலைவர் கவுன்சிலர் வார்டு உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகள் யாரும் தற்சமயம் அதிகாரத்தில் இல்லாததால் யாருக்கும் தெரியாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே கிராம சபை கூட்டத்தை நடத்துவார்கள்
கிராம சபை கூட்டத்தில் வாக்காளர்கள் (பொது மக்கள்) யார் வேண்டுமானலும் கலந்துக் கொண்டு தீர்மானம் கொண்டு வரலாம்.
சிந்து சமவெளி நாகரீக காலம் முதல் நடந்து வரும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டினை நடத்த சட்ட பூர்வ அங்கிகாரம் உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும் என்ற பொருள் படும் தீர்மானத்தை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றுங்கள் இந்த தீர்மாணத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைவேற்றி அதன் சான்றிட்ட நகலை பெற்று இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வையுங்கள் கூட்டம் முடிந்த உடனேயே சான்றிட்ட நகல் பெற்றுக் கொள்ளலாம்.
முதல் முறையாக உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் இப்படி ஒரு வேண்டுகோளை மக்கள் மன்ற தீர்மானங்கள் மூலமாக சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் அதுவும் வழக்கில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்
வழக்கு எண்ணை கட்டாயம் குறிப்பிடவும் (உச்ச நீதிமன்ற வழக்கு எண் CIVIL APPEAL NO.5387 OF 2014)
தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் (வாக்காளர்கள்) கையெழுத்திட்டு உங்கள் கிராம ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் (ஊராட்சி எழுத்தர்) மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்சி அலுவலர்க்கும் உங்கள் மாவட்ட ஆட்சியருக்கும் இன்றே ஒரு கடிதம் அனுப்பி வையுங்கள் நல்வினை விஸ்வராஜு. எம்.ஏ.,பி.எல்., வழக்கறிஞர் செல் 9445675801
|