LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நம்பர் 1 இடத்தைப் பிடித்த ரோகன் போபண்ணா - மேட் எப்டன் ஜோடி.. டென்னிஸ் உலகில் மாபெரும் சாதனை.

இந்திய டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா உலக தர பட்டியலில் நம்பர்-1 இடத்தைப் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

 

ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி ஆட்டத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் இணை ஆடவர் இரட்டையர் தரவரிசையில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் ஜோடி என்ற இடத்தைப் பிடித்துள்ளது.

 

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ் மற்றும் ஆண்ட்ரஸ் மோல்டெனி ஜோடியைக் காலிறுதியில் சந்தித்த ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடி 6 - 4, 7 - 6 (7 - 5) என்ற செட்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு அந்த ஜோடி முன்னேறியது.

 

இந்த வெற்றி மூலம், ஆடவர் இரட்டையர் தரவரிசையில் ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடி முதல் இடத்தைப் பிடித்தது. உலகிலேயே மிக அதிக வயதில் தரவரிசையில் முதல் இடம் பிடித்த வீரர் என்ற பெருமையையும் ரோகன் போபண்ணா பெற்றார். 43 வயதாகும் போபண்ணா இந்தச் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

 

அவர் முதன் முறையாக 2008-ல் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆடத் துவங்கினார். அதன் பின் இரட்டையர் பிரிவில் பிரெஞ்சு ஓபன் தொடரில் ஒரு முறையும், விம்பிள்டன் தொடரில் மூன்று முறையும் அவர் அரையிறுதி வரை முன்னேறி இருந்தார். ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இதுவரை அவர் மூன்றாவது சுற்றுக்கு மேல் முன்னேறியதில்லை. அந்தக் குறையை இந்த முறை போக்கி இருக்கிறார். அடுத்து அரையிறுதியில் அவர் வென்றால் கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெருமையைப் பெறுவார்.

 

அவரது ஜோடியான மேத்யூ எப்டன் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். அவர் தன் சொந்த மண்ணில் அரையிறுதி வரை முன்னேறி இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் ஆடவர் இரட்டையர் தரவரிசையிலும் முதல் இடத்தைப் பிடித்துச் சாதித்து இருக்கிறார்.

 

பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு

 

43 வயதில் டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ள ரோகன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா, மல்லர்கம் பயிற்சியாளர் உதய் விஷ்வநாத் தேஷ்பாண்டே, வில்வித்தை பயிற்சியாளர் பூர்ணிமா மஹட்டோ, கவுரவ் கண்ணா (பாரா பேட்மிண்டன் பயிற்சியாளர்), சதேந்திர சிங் லோஹியா (நீச்சல்), ஹர்பிந்தர் சிங் (ஆக்கி பயிற்சியாளர்) ஆகியோருக்குப் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

by Kumar   on 30 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருது
இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது  EPFO 3.0 இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது EPFO 3.0
இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது  EPFO 3.0 இனி எளிமையாக வருங்கால வைப்பு நிதியை ஏ.டி.எம் மூலம் எடுக்கலாம் - வருகிறது EPFO 3.0
கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர்  கடிதம் கர்நாடகா இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவது அவசியம் - முதல்வர் சித்தராமையாவுக்கு கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் கடிதம்
தமிழர்கள் உலகமெங்கும் சாதிக்கிறார்கள் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தமிழர்கள் உலகமெங்கும் சாதிக்கிறார்கள் - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு
அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்  - சந்திரபாபு நாயுடு அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு
பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்
கொல்கத்தா -சென்னை... 600 ரூபாய் கட்டணத்தில் வெறும் 3 மணி நேரத்தில் பயணிப்பது சாத்தியமா? கொல்கத்தா -சென்னை... 600 ரூபாய் கட்டணத்தில் வெறும் 3 மணி நேரத்தில் பயணிப்பது சாத்தியமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.