LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரமாண்டமாக உருவாகிய ரோமியோ ஜூலியட் பாடல் காட்சிகள் !!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ரோமியோ ஜூலியட்.


லக்ஷ்மன் எழுதி இயக்கும் இந்த படத்தில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  ஹன்சிகா மோத்வானி  -  பூனம்பாஜ்வா  இருவரும் நடிக்கிறார்கள். 


இவர்களோடு வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.


இந்த படத்திற்கு D.இமான் இசையமைக்கிறார். 


இந்தப் படத்திற்காக  மும்பையிலும், சென்னையிலும் மிகப் பிரமாண்டமான முறையில் பாடல் காட்சி  ஒன்று  படமாக்கப்பட்டது.


“ ரோமியோ  ரோமியோ “ "ஜூலியட் ரோமியோ” என்ற பாடல்காட்சியில் ஜெயம்ரவி  - ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா பங்கேற்றனர்.. 


மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளுக்கு இமான் இசையமைத்த இந்த பாடல் காட்சி மிகப் பிரமாண்டமான முறையில் படமாகப் பட்டுள்ளது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டு நடன கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த பாடலை மும்பையின் பிரபல பாடகரான விஷால் தட்லாணி பாடி இருக்கிறார்.


அத்துடன் “ அடியே அடியே  - என் வாழ்கையை வீணாக்க பொறந்தவளே “  என்ற பாடல் காட்சியில் ஜெயம்ரவி - ஹன்சிகா பங்கேற்க சென்னை அருகே துறைமுகம், காசிமேடு மற்றும் விமான நிலையம் போன்ற இடங்களில் நடைபெற்றது.  


மிக பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தை தயாரிக்கும் எஸ்.நந்தகோபால் கூறியதாவது... ஜாலியான படமாக ரோமியோ ஜூலியட் உருவாகிறது என்றார். படத்திற்கு சினிமா வட்டாரத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது...டப்பிங் நடைபெற்ற தியேட்டரிலிருந்து படத்தின் சில காட்சிகளை பார்த்து பரபரப்பாக பேசுகிறார்கள் என்றார். 

Jayam Ravi and Hansika in Romeo Juliet
by Swathi   on 09 Oct 2014  0 Comments
Tags: Romeo Romeo Juliet Romeo Song   ரோமியோ ஜூலியட்   Romeo Juliet   Romeo Juliet Song           
 தொடர்புடையவை-Related Articles
டண்டனக்கா பாடல் மீது டி.ராஜேந்தர் வழக்கு !! டண்டனக்கா பாடல் மீது டி.ராஜேந்தர் வழக்கு !!
ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !! ஜெயம் ரவி படத்தில் ஆர்யா !!
பிரமாண்டமாக உருவாகிய ரோமியோ ஜூலியட் பாடல் காட்சிகள் !! பிரமாண்டமாக உருவாகிய ரோமியோ ஜூலியட் பாடல் காட்சிகள் !!
வில்லியான பூனம் பாஜ்வா !! வில்லியான பூனம் பாஜ்வா !!
ஜெயம் ரவி - ஹன்சிகா மீண்டும் ஜோடி சேரும் ரோமியோ ஜூலியட் !! ஜெயம் ரவி - ஹன்சிகா மீண்டும் ஜோடி சேரும் ரோமியோ ஜூலியட் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.