LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

ஆணிவேர்....

கணிப்பொறிச்

சுவாசம் கொள்கிற

தமிழ்த் தோழமைகளே ...

 

உங்கள் நேரத்தைக்

கொஞ்சம் கடன்கொடுங்கள் ...

 

ஒரு

விசயம் பேசுவோம்

கொஞ்சம் செவிமடுங்கள் ...

 

தமிழுக்கு

இருபுறமும்

இறகு முளைக்க வேண்டும் ...

 

அது

அழகாய்ச் சிறகடித்து

உலகாளும் காவலனாய்

உலாவர வேண்டும் ...

 

கணிப்பொறியெல்லாம்

தமிழுக்குத்

தலை வணங்க வேண்டும் ..

 

கணினியின்

கதவு திறந்தால்

தமிழ் என்னை

வரவேற்க்க வேண்டும் ...

 

கணிப்பொறிச்

சுட்டானெல்லாம்

தமிழை மட்டுமே

பிடித்திழுக்க வேண்டும் ...

 

திரை பார்த்து

திரை பார்த்து

கண் எறியும் போது

தமிழ் வந்தென்

இமை மூடி

இதயம் புகுந்து

குளிரூட்ட வேண்டும் ...

 

கணிப்பொறி

மொழிகளெல்லாம்

அழகுத்தமிழின்

கிளைகளாக வேண்டும் ...

 

கட்டுமொழிகளெல்லாம்

247 எளுத்துக்களுக்குள்ளே

அடங்கிப் போக வேண்டும் ...

 

கணிப்பொறிக்கு

நம் ஆயுத எழுத்து

மாத்திரமே

காவலிருக்க வேண்டும் ...

 

உலகத்தின் ஆணிவேர்

தமிழாக வேண்டும் ....

 

இனிவரும்

மனிதர்களெல்லாம்

தமிழை மட்டுமே

சுவாசிக்க வேண்டும் ..

 

நம்

முன்னோர்களின்

ஆசைக்கு

முடிசூட்ட வேண்டும் ...

 

கணிப்போறிச்

சாதியில் பாதிச்சாதி

நம் தமிழ்ச் சாதி ...

 

நாமெல்லாம்

நெறிப்பட்டுப்

புறப்பட்டால் ...

 

என்

இளைய தேசமே ...

 

என்

தமிழ்த் தோழமையே ....

 

தோள்கொடு ...

 

அறிவுமிகுந்த

தமிழ்ச் சாதியே ...

 

அன்றாட

வாழ்க்கையில்

அரைமணி நேரம் ...

 

கணிப் பொறியை

தமிழின் கட்டுக்குள்

கொண்டுவர

நீ

உன் அறிவுப்பொறி 

பற்றவை ...

 

அதற்க்குமேல்

வேண்டாம் ....

 

சாத்தியமில்லை

என்பவர்களுக்கு

சாத்தியம் சொல்லும்

இரு சேதி

சேகரித்திருக்கிறேன் ...

 

ஒன்று ...

 

கணினிக்குத்

தெரிந்ததெல்லாம்

ஒன்றும் பூஜ்ஜியமும்

தானாம் ...

 

இன்னொன்று ...

 

ஜப்பானில்

ஆதிக்கம் செலுத்துவது

அவர்கள் மொழிதானாம் ....

 

இந்த உலகமெல்லாம்

இப்போது

இந்த சின்னபெட்டிக்குமுன்னே ...

 

இப்போது

அது

நமக்குமுன்னே ...

 

வரும் தலைமுறைக்கு

விதை விதைக்க

உன்னால்

முடிந்ததை

செய்துவிட்டுப் போ ...

 

முடியாத போது

உழுது விட்டாவது போ ...

 

உழும்போது

இதைமட்டும்

நினைவில் வை ...

 

“ தமிழுக்கு

இருபுறமும்

இறகு முளைக்க வேண்டும் “ ...

 

-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.