LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

ரோசா பார்க்ஸ்

Each person must like their

life as a model for others.

பெண் உலகின் கறுப்பின காந்தி என அழைக்கப்படுபவர் ரோசா பார்க்ஸ் ( Rosa Parks ) ஆவார் . இவர் நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என ஐக்கிய அமெரிக்க காங்கிரசால் அழைக்கப்படுகிறார் . இவர் 1913 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள் அமெரிக்காவின் மாநிலமான அலபாமாவில் டஸ்கிகீ என்னும் நகரில் பிறந்தார் . இவர் கலப்பு இனத்தவர் . அக்காலத்தில் நிறவெறி தலைவிரித்தாடியது . கறுப்பர்கள் குறைவாகவே கல்வி கற்றிருந்தனர் . பேருந்துகளில் முதல் நான்கு வரிசை வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது . கறுப்பர்களுக்கு பின் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன . வெள்ளையர்கள் இல்லை என்றாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமரக்கூடாது . ஒரு முறை ரோசா பார்க்ஸ் அமர்ந்தபோது ஓட்டுனரால் இறக்கி விடப்பட்டார் .

ஒரு முறை ரோசா பார்க்ஸ் பஸ்ஸில் பயணித்தபோது வெள்ளையர்கள் அதிகம் ஏறியதால் பின் வரிசைக்கு நகருமாறு நடத்துனர் கூறினார் . எழுந்திரிக்க மறுத்ததால் சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார் . இதனை எதிர்த்துப் போராடியபோது 40000 கறுப்பின மக்கள் பேருந்தில் செல்லுவதை புறக்கணித்தனர் . இவர் வேலை செய்த இடத்திலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டார் . பலர் வேலை கொடுக்க மறுத்தனர் . இவரின் போராட்டத்தால் பஸ்ஸில் கறுப்பின மக்களும் சமமாக உட்கார உரிமை கிடைத்தது . இவர் 2005 ஆம் ஆண்டில் இறந்தபோது இவரின் நகரிலிருந்து சென்ற பேருந்துகளில் முன்வரிசைகளில் கருப்புநிற ரிப்பன்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.