|
|||||
இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார் ரோஷினி நாடார் |
|||||
![]() தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார்.
இவர், ஹெச்.சிஎல் கார்ப்பரேஷன் மற்றும் வமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டெல்லி) ஆகியவற்றில் தன் வசம் உள்ள 51-ல் 47 சதவீதப் பங்குகளை, தனது ஒரே மகள் ரோஷினி நாடார் மல்கோத்ராவுக்கு (43) பரிசாக வழங்கி உள்ளார். கடந்த 6-ம் தேதி பதிவு செய்யப்பட்ட தான பத்திரம், 7-ம் தேதி தேசியப் பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் ஹெச்.சிஎல் குழுமத்தைச் சேர்ந்த ஹெச்.சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் ஹெச்.சிஎல் இன்போசிஸ்டம்ஸ் ஆகிய 2 முக்கிய நிறுவனங்கள் இவரது கட்டுப்பாட்டில் வந்துள்ளன.
இதன் மூலம் ரோஷினி இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
ரூ.7.66 லட்சம் கோடி சொத்துடன் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ரூ.5.99 லட்சம் கோடி சொத்துடன் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 2-ம் இடத்திலும் உள்ளார். இப்போது ரோஷினி 3-ம் இடம் பிடித்துள்ளார்.
ஷிவ் நாடார், கிரண் நாடார் தம்பதிக்கு 1982-ல் ஒரே மகளாகப் பிறந்த ரோஷினி, டெல்லியில் உள்ள வசந்த் வேலி பள்ளியில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கினார்.
அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலை.யில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் முதுநிலை வணிக நிர்வாகம் பட்டம் பெற்றார்.
தொடக்கத்தில் ஊடகத் துறையில் செய்தி தயாரிப்பாளராகப் பணியாற்றிய ரோஷினி, ஹெச்.சிஎல் குழுமத்தில் இணைந்தார். 2020-ல் ஹெச்.சிஎல் டெக்னாலஜிஸ் தலைவர் ஆனார்.
ரோஷினி தலைமையின் கீழ், ஹெச்.சிஎல் டெக்னாலஜிஸ் பாலின சமத்துவத்தை நிலைநாட்டியது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கால் பதித்தது.
ரோஷினி ‘ஷிவ் நாடார் அறக்கட்டளை’ மூலம் சமூக சேவை செய்து வருகிறார். 2010-ல் ஷிகர் மல்கோத்ராவைத் திருமணம் செய்து கொண்டார். 2 மகன்கள் உள்ளனர்.
போர்ப்ஸ் இதழ் 2023-ல் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ரோஷினி 60-ம் இடம் பெற்றிருந்தார்.
|
|||||
by hemavathi on 27 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|