LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- லோக் சத்தா (Lok Satta )

கல்வி உரிமை சட்டம் பற்றிய விழிப்புணர்வு - தேர்தல் நடத்தை விதிமுறை தடையல்ல​

கல்வி உரிமை சட்டத்தை பற்றி தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த'தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டாமல் தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டுமென்று லோக்சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது.

முன்னதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திருமதி. சபீதா அவர்களை சந்தித்துகல்வி உரிமை சட்டத்தில் உள்ள பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் திரு. 'பாடம்நாராயணன் அவர்கள் தலைமயிலான சமூக ஆர்வலர் குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இப்பொழுது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் எதுவும் செய்ய முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து சிறப்பு தேர்தல் ஆணையர் திரு. கார்த்திக் அவர்களை தமிழக லோக்சத்தாவின் மாநில தலைவர் திரு. பழனிகுமார் அவர்களும் பொதுச் செயலாளர் திரு. ஜெகதீஸ்வரன் அவர்களும் இன்று சந்தித்தனர். சிறப்பு தேர்தல் ஆணையர் தமிழத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஏற்கனவே தளர்த்தப்பட்டு விட்டதென்றும்கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தடை ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். எனவே தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டாமல் தமிழக அரசு தீவிரமாக செயல்பட வேண்டுமென்று லோக்சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது.

அதே போல் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை அரசாங்கம் இன்னும் அந்த பள்ளிகளுக்கு வழங்காததால்தனியார் பள்ளிகள் இந்த வருடம் 25% இடஒதுக்கீட்டை செயல்படுத்த மறுக்கின்றன. இது குறித்து அரசிடமிருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை இல்லை. இரண்டு ஆண்டுகளாக அரசு இதை கண்டுகொள்ளாதது அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள நிலுவைத் தொகை 25 கோடி ரூபாய் ஆகும். இலவசங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்யும் அரசுமக்களின் அடிப்படை தேவையான கல்விக்கு இந்த தொகையை செலவு செய்யாமல் இருப்பது இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ஆர்வம் இல்லாததையே காட்டுகிறது.

இனியும் காலம் தாமதிக்காமல் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென்று லோக்சத்தா கட்சி கோருகிறது. கல்வி அளவீடுகளில் உலகில் பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிக மோசமான நிலையில் இருக்கும் தமிழகத்தின் நிலையுணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சி கோரிக்கை விடுக்கிறது.

RTE awareness campaign in TN - Election Model code of conduct not a showstopper​​

Loksatta Party demands that the Tamil Nadu government should proactively spread awareness about the Right To Education act in the state without evading its responsibility citing the Election Model code of conduct as an excuse

 

Earlier the team of social activists headed by Mr. ‘Paadam’ Narayanan gave a representation to the Secretary of Department of School education Mrs. Sabitha to address the practical issues in the effective implementation of this act in Tamil Nadu. However we were informed that the Election Model code of conduct prevents the Government from taking any action in this regard.

 

Loksatta state President Mr. Palanikumar and General Secretary Mr. Jagadheeswaran today met Special Election Officer Mr. Karthik and requested him to exempt RTE awareness campaigns from the Model code of Conduct as education is a fundamental right. Mr. Karthik has confirmed that the Election Model code of Conduct has already been relaxed and nothing prevents the Government from organizing RTE awareness campaigns in Tamil Nadu. Based upon this confirmation, the party demands that the government should proactively spread awareness about RTE act without any delay.

 

Also the consortium of Private schools has announced that they will be suspending student admissions under the 25% reservation, as the government has not reimbursed the fee amount for the past two years. The total amount pending for reimbursement for the two years is 25 Crores. The government spends thousands of Crores for freebie schemes and its reluctance to pay this amount for school education is appalling and this shows the lethargic attitude of the government in implementing this act.

 

The party demands that government should show its commitment to the efficient implementation of the RTE act by reimbursing the private schools immediately. The government should note that in the Quality of Education, Tamil Nadu ranks at the bottom when compared with other countries of the world and should take relevant steps to improve the quality.

 

by Swathi   on 07 May 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.