LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஸ்னோடென்னு தஞ்சம் அளிக்க ரஷ்ய அரசு ஒப்புதல் !

அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட, எட்வர்டு ஸ்னோடென்னுக்கு ரஷ்ய அரசு தஞ்சம் அளித்துள்ளது.


அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பில், முன்னால் கணினி நிபுணராக பணிபுரிந்தவர், எட்வர்டு ஸ்னோடென். இவர் அமெரிக்காவின் பல புலனாய்வு ரகசியங்களை சமீபத்தில் வெளியிட்டார். இதில் அமெரிக்கா மற்ற நாடுகளை உளவு பார்பதாக அவர் கூறியது, உலக நாடுகளின் கவனத்தை இவரது, பக்கம் திருப்பியது. இதனை அடுத்து, அமெரிக்கா அரசு, ஸ்னோடென் மீது, உளவு பார்த்தல், அரசு ஆவணங்களை திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கைது செய்ய அரசு முடிவு செய்தது. இதனால், அமெரிக்காவிலிருந்து தலைமறைவான ஸ்னோடென், சீனாவின் ஹாங்காங்கில் 
தங்கியிருந்தார். அவரை, தன்னிடம் ஒப்படைக்கும்படி, அமெரிக்கா சீனாவிடம் வற்புறுத்தியது. இதையடுத்து, ஸ்னோடென், ரஷ்யா சென்று சென்றார். மாஸ்கோ விமான நிலையத்தில், சர்வதேச பயணிகள் தங்கியுள்ள பகுதியில், ஸ்னோடென் உள்ளதால், அவரை நாங்கள் கைது செய்ய முடியாது,'' என, அமெரிக்காவுக்கு, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தார். மேலும் ஐஸ்லாந்து அல்லது ஈக்வடார் நாடுகளில் தஞ்சம் அடைய, ஸ்னோடென் திட்டமிட்டிருந்தார். அந்நாடுகளுக்கு செல்லும் வழியில், அவரை அமெரிக்கா கைது செய்ய காத்திருக்கிறது. எனவே, ஸ்னோடென் ரஷ்யாவில் தஞ்சம் அடைய 
விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு தஞ்சம் அளிக்க ரஷ்யா அரசு ஒப்புக்கொண்டதையடுத்து, மாஸ்கோ விமான நிலையத்தில், பல வாரங்களாக தங்கியிருந்த ஸ்னோடென், நேற்று அங்கிருந்து வெளியேறி ரகசிய இடத்தில் தங்கி இருக்கிறார்.  ஸ்னோடென்னுக்கு ரஷ்யா தஞ்சம் அளித்துள்ளதை அடுத்து, அமெரிக்க - ரஷ்ய உறவில் விரிசல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

by Swathi   on 01 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.