|
||||||||
சகர ஏகார வருக்கம் |
||||||||
சேயெனும் பெயரே சிவப்புஞ் செவ்வேளும்
செவ்வாய்க் கிரகமும் சிறுவனு நீளமும்
தூரமு மிளமையுஞ் சொல்லுவர் புலவர். ....769
சேடி யெனும்பெயர் விஞ்சையர் நகரமும்
சிலதியு மெனவே செப்பப் பெறுமே. ....770
சேக்கை யெனும்பெயர் முலையும் சயனமும்
விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர். ....771
சேடனெ னும்பெயர் அனந்தனும் பாங்கனும்
இளையோன் பெயருட னடிமையு மியம்புவர். ....772
சேணுனும் பெயரே யகலமு நீளமும்
உயரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....773
சேடெனும் பெயரே சிறப்பு நன்மையும்
அழகுந் திரட்சியு மிளமையு மாமே. ....774
சேதக மெனும்பெயர் சேறு செந்நிறமுமாம். ....775
சேவ லெனும்பெயர் புள்ளி னாண்பாலும்
காவலுஞ் சேறுஞ் சாவலும் கருதுவர். ....776
சேவக மெனும்பெயர் யானை துயிலிடமும்
வீரமு மெனவே விளம்புவர் புலவர். ....777
சேதார மெனப்பெயர் தேமாவும் வெட்சியும்
பொன்னின் பெயரும் புகன்றனர் புலவர். ....778
சேயெனும் பெயரே சிவப்புஞ் செவ்வேளும் செவ்வாய்க் கிரகமும் சிறுவனு நீளமும் தூரமு மிளமையுஞ் சொல்லுவர் புலவர். ....769
சேடி யெனும்பெயர் விஞ்சையர் நகரமும் சிலதியு மெனவே செப்பப் பெறுமே. ....770
சேக்கை யெனும்பெயர் முலையும் சயனமும் விலங்கு துயிலிடமும் விளம்புவர் புலவர். ....771
சேடனெ னும்பெயர் அனந்தனும் பாங்கனும் இளையோன் பெயருட னடிமையு மியம்புவர். ....772
சேணுனும் பெயரே யகலமு நீளமும் உயரமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....773
சேடெனும் பெயரே சிறப்பு நன்மையும் அழகுந் திரட்சியு மிளமையு மாமே. ....774
சேதக மெனும்பெயர் சேறு செந்நிறமுமாம். ....775
சேவ லெனும்பெயர் புள்ளி னாண்பாலும் காவலுஞ் சேறுஞ் சாவலும் கருதுவர். ....776
சேவக மெனும்பெயர் யானை துயிலிடமும் வீரமு மெனவே விளம்புவர் புலவர். ....777
சேதார மெனப்பெயர் தேமாவும் வெட்சியும் பொன்னின் பெயரும் புகன்றனர் புலவர். ....778
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|