LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்கா வந்துள்ள முனைவர் சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். அவர்களை வரவேற்று வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் சிறப்புக் கூட்டம் நடத்தியது

தமிழகத்தில் இருந்து வாசிங்டன் வந்திருந்த தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி முனைவர் சைலேந்திரபாபு IPS அவர்களை வாசிங்டன் தமிழ்ச்சங்கம் வரவேற்று ஒரு சிறப்புக் கூட்டத்தை வியாழக்கிழமை, ஜூலை 31, 2014, மாலை 6:30 - 9:30 மணி வரை ஏற்பாடு செய்திருந்தது. Clarion Inn/Asia Fusion, 8601 Baltimore Ave, College Park, MD 20740 -ல் நடந்த இக்கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட  தமிழர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். குறிப்பாக வார நாட்களில் இம்மாதிரி நிகழ்ச்சிகளை நடத்துவது மிகவும் சிரமம். இருப்பினும் முனைவர் சைலேந்திரபாபு அவர்களை ஒரு காவல்துறை அதிகாரியாக மட்டும் பார்க்காமல், அவரின் எழுத்து, பேச்சு, அவர் வகிக்கும் பதிவிற்கு அவர் சேர்த்துவரும் சிறப்பு,சமூகப்பணியில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு, இளைஞரைகளை நல்வழிப்படுத்த அவர் செய்துவரும் செயல்கள் ஆகியவை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்பதற்கு இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்களின் ஆர்வத்தால் புரிந்துகொள்ள முடிந்தது. 


இந்த நிகழ்ச்சியை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி கல்பனா மெய்யப்பன் தலைமை உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.விருந்தினரை திரு. செந்தில்முருகன் வேலுச்சாமி, பொருளாளர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் அவர்கள் அறிமுகப்படுத்தி பேசினார், அதனைத் தொடர்ந்து முனைவர் சைலேந்திர பாபு, I.P.S, (Additional Director General of Police of the Coastal Security Group, Tamilnadu) அவர்கள் விருந்தினர் உரை நிகழ்த்தினார், இதில் முழுக்க அவர் தமிழில் தமிழ்நாட்டு நடப்பை குறித்தும், தமிழ் இலக்கியச் சிறப்புகள் குறித்தும்,வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இந்தியாவிற்கு குறிப்பாக  தமிழகத்திற்கு என்ன மாதிரி பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதைக் குறித்தும்  உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மேரிலாந்து மாகாண துணைச் செயலர் டாக்டர் ராஜன் நடராஜன் அவர்கள் வாழ்த்திப் பேசி மேரிலாந்து மாகாண கொடியை விருந்தினருக்கு பரிசாக அளித்து மாகாண ஆளுநர் கொடுத்த வாழ்த்துச் செய்தியை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து கேள்வி பதில் பகுதியை சுந்தர் குப்புசாமி, துணைத் தலைவர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் நெறிப்படுத்தினார். 


இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவராக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திரு.நாஞ்சில் பீற்றர் அவர்கள் விருந்தினரை பாராட்டி பேரவை மலரை வழங்கினார்கள்.  


இதனைத் தொடர்ந்து தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், புரவலருமான திரு. பாலகன் ஆறுமுகசாமி அவர்களும் திருமதி கல்பனா மெய்யப்பன் அவர்களும் விருந்தினருக்கு பட்டயம் வழங்கி கவுரவித்தார்கள்.  இந்த நிகச்சியை தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் மிகவும் நேர்த்தியாக நெறிப்படுத்தினார். 

babu1
by Swathi   on 03 Aug 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.