LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

தமிழ் நாட்டு கிராமமான சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி.

மாக்கோளமிட்டு திறந்த  வெளியில்   பொங்கல், உரியடித்தல்,  பறை இசை, கயிறு இழுத்தல்,சிலம்பாட்டம்  என பொங்கல் கொண்டாட்டங்கள்   தமிழக கிராமங்களிலேயே அரிதாகிவிட்ட போதிலும்   சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற தமிழ் விழாவில் கலிபோர்னிய தமிழர்கள்  பாரம்பரிய மணத்தோடு பொங்கள் திருவிழாவை சிறப்பாக  கொண்டாடினர். அழகிய கிராமத்து குடில் அமைத்து, இனிக்கும் செங்கரும்பு, மணக்கும் மதுரை மல்லிகையோடு  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து  குடும்பம் குடும்பமாக திறந்த வெளியில் பொங்கள் வைத்து குலவியிட்டு மகிழ்ந்தனர். பறை இசை குழுவினர் கிராமிய பொங்கள் பாடல்களுடன் பொங்கலிடும் அரங்கை வலம் வந்தனர் .துணிக்கடை, நகைக்கடை, புத்தக கடை என ஒரு சிறிய கிராமத்து சந்தையே அங்கு உருவாக்கியிருந்தனர்..


35 வருடங்களுக்கு முன் தமிழ் மன்றத்தை தொடங்கி வைத்த திரு தமிழன் அவர்கள்  விழாவை குத்துவிளக்கிட்டு தொடங்கி வைத்தார்.1965 ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் இறந்தோருக்கு 50ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தபட்டது. பத்மஷிரி விருது பெற்ற  கலிபோர்னிய பலகலைகழக முன்னால் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், இந்திய தூதரக அதிகாரிகள் திரு.அசோக் வெங்கடேசன் , திரு பாஸ்கரன் மற்றும் டெஸ்லா மோட்டார் தலைமை தகவல் அதிகாரி திரு ஜெய் விஜயன் ஆகியோருக்கு மரியாதை செய்யபட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கரகம், காவடி,வில்லுபாட்டு, நாட்டு புற பாடல்கள்,கிராமிய நிகழ்ச்சிகள், திரை இசை நடனம் என அரங்கமே அதிரும்  வகையில் பங்கெடுத்து பொங்கல் விழாவை சிறபித்தனர்.சூலை மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெற உள்ள வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் தமிழ்விழா பற்றிய அறிவிப்பும் அரங்கில் வெளியிடபட்டது.

வளைகுடா பகுதியில் தமிழ் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் இனம் கண்டு வாய்ப்பளித்து ஊக்குவிக்கவும், புலம் பெயர்ந்த புதிய எழுத்தாளர்களை உருவாக்கவும்,  தமிழ் மன்ற வரலாற்றிலேயெ முதல் முறையாக விழுதுகள் என்னும் காலாண்டு இதழ் வெளியிடபட்டது.இது வளைகுடா பகுதி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், புலம் பெயர்ந்த தமிழர்களும் தமிழையும் தமிழர் அடையாளத்தையும் காக்கும் பொறுப்பில் ஆலம் விருஷமாய் வளரும் விழுதுகளாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. உலகம் முழுவதும் 6000க்கும் மேலான  மேடைகளில் பங்கேற்று முத்திரை பதித்த  திருமதி. உமையாள் முத்து அவர்கள் தலைமையில் "தமிழ் தழைத்திட தளராமல் உழைப்பது தாயக தமிழரே! இல்லை புலம் பெயர் தமிழரே!" என்ற தலைப்பில் வளைகுடா  பகுதி தமிழ்  பேச்சாளர்களை கொண்டு மிகவும் சிறப்பான பட்டிமன்றம் நடைபெற்றது.

தாய் நாட்டை விட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும் தமிழ் கலாசாரத்தையும் பண்பாட்டையும் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்து செல்ல உதவும் இது போன்ற விழாக்களை எடுத்து நடத்தும் தமிழ்மன்ற குழுவினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பாராட்டுகுறியவர்கள்.

FeTNA
by Swathi   on 03 Feb 2015  1 Comments
Tags: பொங்கல் விழா   Sanfransisco Bay area Tamil Manram   Pongal Vizha              
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் நாட்டு கிராமமான சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி. தமிழ் நாட்டு கிராமமான சான்பிராசிஸ்கோ வளைகுடா பகுதி.
மாட்டுப் பொங்கல் மாட்டுப் பொங்கல்
கருத்துகள்
19-Mar-2015 08:56:43 முனைவர். ச.குருஞானம்பிகா said : Report Abuse
தமிழர்களின் இனம், மொழி ,கலாசாரம் இவைதான் அடையாளம்.அந்த அடையாளம் விழாக்களின் மூலமும்,மரபு சார் நிக ழ்வுகளின் மூலமும் இன்றைக்கு உலக அரங்கில் பதிவாகி கொண்டிருக்கிறது.கடல் கடந்து சென்றாலும் தமிழை சுவாசித்தும், தமிழின் தொன்மையை மறக்காமலும் அரும்பணி ஆற்றி வருகிற தங்கள் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும்,வணக்கங்களும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.