|
||||||||
சங்ககாலமும் தமிழிசையும், தொகுப்பு: கொழந்தவேல் இராமசாமி |
||||||||
சங்ககாலமும் தமிழிசையும், தொகுப்பு: கொழந்தவேல் இராமசாமி ஒருங்கிணைப்பாளர், மக்கள் தொடர்புக்குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
உலகிலேயே தமிழன் மட்டும் தான் தனது மொழியை வளர்க்கப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு அமைப்பை உருவாக்கினான் என்பது வரலாறு. ஏறத்தாழ ஐயாரயிம் ஆண்டுகளுக்கு முன்னர் பஃறுளி ஆற்று (இலமுரியா& குமரி)க் கண்டத்திலேயே முதற்சங்கத்தை நிறுவித் தமிழ் மொழியையும் கலையையும் வளர்த்தான் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். பஃறுளிக்கண்டம் ஆழிப்பேரலையால் கடலுக்குள் மூழ்கிய பிறகு அந்நிலப்பரப்பி லிருந்து வடக்கே (கபாடபுரம்) வந்து மீண்டும் தமிழ்ச்சங்கம் தொடங்கினான். கடலின் பசி மீண்டும் கரையை விழுங்கியதால் இன்றுள்ள மதுரை நகரில் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தை தோற்றுவித்தான்.அச்சங்கத்தில் தோன்றிய இசை நூல்பரிபாடல். இன்று பாடல் இயற்றுபவர் ஒருவராகவும் இசை அமைப்பவர் ஒருவராகவும் இருப்பதுபோல், பரிபாடல்காலத்திலும் இருந்தது என்பதனை அந்த நூல் தெளிவாக விளக்குகிறது. நம் நாட்டின் மீது அந்நியர் படையெடுத்த தால் நமது கலைகள் மறையத் தொடங்கின. அவை சமணர்கள், பௌத்தர்கள், களப்பிறர் களால் முழுவதுமாக அழிந்துவிட்டது. நாயனமார்களும் ஆழ்வார்களும் கி.பி. 8 மற்றும் 9-&ஆம் நூற்றாண்டில் மீண்டும் தமிழ் இசைக்கு உயிர்கொடுதனர். ஆனால் 12-&ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி தொடங்கியது. 13, 14 மற்றும் 15-&ஆம் நூற்றாண்டின் இறுதிவரை தெலுங்கர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. ‘‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’’ என்பதற்கிணங்க தெலுங்கு இசை செழிக்கலானது. இசைத்தமிழின் தோற்றம் சோழ நாட்டின் தஞ்சையைச் சார்ந்த சீர்காழியில் தாண்டவர் என்ற ஒரு அரிய இசை ஞானி பிறந்தார். இவர் கி.பி. 1525-& ஆம் ஆண்டில் பிறந்து நூறாண்டுகள் (1625) வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பு. இசைக்குடும்பத்தில் பிறந்த இவர், சங்க இலக்கியமான கலித்தொகையில் காணப்படும் ‘‘தமிழிசையை அடியற்றிக் கீர்த்தனை வடிவ இசைப் பாடல்களை இயற்றினார். பல்லவி (எடுப்பு) அனுபல்லவி (தொடுப்பு) சரணம் (முடிப்பு) என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட கீர்த்தனை வடிவப்பாடலை இயற்றிய இவரே இன்றைய தமிழிசையின் ஆதிமூர்த்தியாவார். இவர் எழுதிய பாடல்களில் இன்று கிடைத்துள்ள 60 பாடல்களும் 25 பதங்களு மேயாகும். பாடல்கள் என்பவை பாடுவதற்கும் பதங்கள்என்பவை ஆடுவதற்கும் ஏற்ற பாடல்களாகும். அருணாசலக்கவிராயர்: கி.பி. 1711 -&1778: கீர்த்தனை வடிவப்பாடலின் தந்தை (பிதாமராகிய) முத்துத்தாண் டவருக்குப் பின்னர் கி.பி.1711-&ல் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடியில் கார்காத்த சைவ வேளாளர் மரபில் பிறந்தவர் அருணாசலக் கவிராயர். தந்தை நல்லதம்பிப்பிள்ளை; தாய் வள்ளி யம்மை. இவர் தமிழ்மொழிக்குப் பற்பல அரும்பணிகளை ஆற்றியுள் ளார்.கவிச்சக்கரர்த்தி இயற்றிய இராமகாதையை அடியற்றி ராமநாடகக் கீர்த்தனைகளை இயற்றினார். கம்பரைப் போலவே தனது இராம நாடகக் கீர்த்தனைகளை திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள அரங்கன் திருக்கோயிலிலேயே அரங்கேற்றினார். இவரது இராமக் கீர்த்த்னைகளுக்கு இணையாக இன்றுவரை வேறு நாடகக் கீர்த்தனைகள் தோன்றவில்லை. மாரிமுத்தாப்பிள்ளை: கி.பி. 1712 &-1787: சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை கி.பி.1712-ல் பிறந்தார்.தகப்பனார் தெய்வப்பெருமாள் பிள்ளை.இவரும் முத்துத்தாண்டவர் வகுத்து கொடுத்த கீர்த்தனை வடிவத்திலேயே இசைப்பாடல்களை இயற்றினார்.இவரது பாடல்கள் பெரும்பாலும் நிந்தாஸ்துதி பாடலாக - அதாவது இறைவனைத் திட்டி வைவது போலத் தொடங்கிப் புகழுகின்ற முறையில் பாடல்களை இயற்றினார். இவர் ஒரு புரட்சியாளர்.ஆட்சியாளரை எதிர்த்தும் புரட்சி செய்துள்ளார். இவர் எழுதிய புலியூர் வெண்பா என்ற பாடல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் பட்டப்படிப்பிற்குப் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது. ஆதி மும்மூர்த்திகள்: முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக்கவிராயர் ஆகிய மூவரும் ஆதி மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வகுத்துக் கொடுத்த கீர்த்தனை வழி முறையை ஒட்டித்தான் இசை மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் திருவையாறு தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் பாடல்கள் இயற்றினர். தமிழிசைக்கு மீட்டுருவம் கொடுத்து உயிர்பித்த ஆதி மும்மூர்த்திகள் பாடல்களைப் பாடிப் பாதுகாக்க வேண்டியது தமிழர்களின் கடமை. |
||||||||
by Swathi on 28 Jan 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|