|
||||||||
சனிப்பெயர்ச்சி - தனுசு ராசி பலன்கள் (2017 - 2020) |
||||||||
ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158 (மூலம், பூராடம், உத்தராடம் 4ம் பாதம்) (யே, யோ,பா,பீ, பு, பூ, த, ப, ட, பே) போன்ற எழுத்துகளை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களும் மார்கழி மாதத்தில் பிறந்தவர்களுக்கும் இப்பலன்கள் ஓரளவு பொருந்தும்) வான மண்டலத்தில் 9வது ராசியாக வலம் வரும் தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் – நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்குகிறார். இவருடைய ராசியில் ஜனனமான நீங்கள் தலைமை பதவி ஏற்கும் ஆற்றலும் எதிலும் உங்களை முன்னிலைபடுத்துவதிலும் முதன்மையானவர்கள் இயற்கையாகவே இறை சிந்தனை மற்றும் தெய்வ அனுகூலத்தையும் பெற்றவர்கள். மக்கள் மத்தியில் உங்களுக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் சமர்த்தர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் உடையவர்கள். செலவு செய்வதில் கணக்கு பார்க்காதவர்கள். உழைப்புக்கு உறைவிடமாகிய நீங்கள் எப்பொழுதும் ஓடி ஓடி உழைப்பவர்கள். அடிக்கடி மாற்றத்தை விரும்புவீர்கள். இத்தகைய உயர் குணமுடைய உங்களுடைய ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதியாகி அவர் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வது நன்மையும் தீமையும் கலந்த பலன் பயங்களாகவே நடந்து வரும். இதுவரை விரயச் சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களை உருவாக்கிய சனிபகவான் இப்பொழுது தேவையற்ற விரயங்களையும் நஷ்டங்களையும் வைத்யச் செலவுகளையும் குறைத்து ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் வாழ வைப்பார். எடுக்கும் முயற்சிகளில் போராட்டங்கள் வலுவாக இருந்தாலும் இறுதியில் அவை நாம் எதிர்பாராத வெற்றியில் முடியும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். அதனால் நன்மையும் தீமையும் கலந்த பலன்களாக அமையும். இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்கள், சஞ்சலங்கள் சற்று குறைந்து காணப்படும். எதையும் தைரியமாகவும் விவேகமாகவும் சிந்தித்து செயல்பட்டால் எதிர்பாராத வெற்றி அடைவீர்கள் என்பது நிச்சயம். பேச்சில் அதிக எச்சரிக்கை தேவை. பணவரவு தாராளமாக இருந்து வரும். அதற்கேற்ப செலவினங்களும் அதிகரித்துக் காணப்படும். தேவையற்ற பேச்சைக் குறைத்து உழைப்பை அதிகரித்தல் வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தடை ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சகோதர சகோதரிகளால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. எதிர்பார்த்த செய்திகள் வருவதில் சற்று தடை ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் குறைந்து காணப்படும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துதல் வேண்டும். ஆரம்பத்தில் சொத்துகள் வாங்கினாலும் அதைப் பின்னால் கொடுக்க வேண்டியது வரும். ஒரு சிலருக்கு பழைய சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகள் வாங்க வாய்ப்பு அமையும். உயர்கல்வியில் தடை ஏற்படும். எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். வீடு மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு சாதகமாக அமையும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையாகச் சென்று வருதல் வேண்டும். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்த்து எதையும் நன்கு சிந்தித்து செயல்பட வெற்றி நிச்சயம் உண்டாகும். விருந்து, கேளிக்கை இவைகளில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள சந்தர்ப்பம் உருவாகும். குடும்பத்தில் புது வரவால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வலுவான போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஆரம்பத்தில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் விருப்பமான வேலையை தேர்வு செய்தல் வேண்டும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டி வரும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுத்தல் கூடாது. எதிர்பார்த்த பணம், பொருள் வருவதில் சற்று கால தாமதமாகும். உடல் உழைப்பை அதிகப்படுத்தவும், வழக்குகள் சாதகமாக இருந்து வரும். வேலையில் ஊதிய உயர்வில் உத்யோக உயர்வில் வலுவான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் பெற சிரமப்பட்டாலும் வேலை என்ற ஒன்று தொடர்ந்து நடந்து வரும். அதன் மூலம் வருமானமும் வந்து சேரும். புதிய தொழில்கள் அல்லது கூட்டுது தொழில் செய்ய சந்தர்ப்பம் அமையும். சிறு தொழில்கள் சற்று சுமாராக இருந்து வரும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாக இருந்து வரும். புதிய நண்பர்கள் பழக்கமாவார்கள். அவர்களால் நன்மை ஏற்படும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் அதிகரித்து காணப்படும். காதல் விஷயங்கள் சந்தோஷமாக அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிட்டும். வேலையாட்களால் எதிர்பார்த்த நன்மை அமையும். தாய்மாமன்களின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். தேவையற்ற செலவினங்களைக் குறைத்தல் வேண்டும். வேலை அல்லது தொழில் (JOB) உங்கள் ராசியிலே சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் கிடைத்த வேலையில் முதலில் சேருதல் வேண்டும். ஒரு சிலருக்கு அரசு வேலையும் பெயர் போன கம்பெனியில் வேலை செய்யவும் வாய்ப்புகல் வந்து சேரும். சக ஊழியர்களின் நட்பும் ஒத்துழைப்பும் கிட்டும். வேலையின் நிமித்தமாக அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பம் கிட்டும். உயர் அதிகாரிகள் விஷயத்தில் அலட்சியம் கூடாது. அன்றைய வேலையை அன்றே முடித்தால் மட்டுமே நன்மைபயப்பதாக அமையும். தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE) உங்கள் ராசியிலியே சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் சுயதொழில்கள் அல்லது கூட்டுத் தொழில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிறிய தொழில்கள் சற்று லாபகரமாக அமையும். அலைந்து திரிந்து, தொழில் புரிபவர்கள், கனரக தொழில் புரிபவர்கள் சாலையோர வியாபாரிகள் நன்மை அடைவர். சிறு தொழில்கள் குடிசைத் தொழில்கள் பலவறாக அதிகரித்து லாபத்தின் அளவு குறைந்து காணப்படும். மருத்துவம், விஞ்ஞானம் பொறியியல் துறைகள் நல்ல லாபகரமாக இருந்து வரும். போக்குவரத்து, தகவல் தொடர்பு, ரியல் எஸ்டேட், பத்திரிக்கை, தொலைத் தொடர்பு தொலைக்காட்சி சாதகமாக இருந்து வரும். ஓட்டல், உணவு, சுற்றுலாத் துறைகள் லாபகரமாகவும் ஆடை, ஆபரணம், இரும்பு, எஃகு, சிமிண்ட், ஈயம், தகரம், எண்ணெய் வித்துக்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். கமிஷன் ஏஜென்ஸிஸ், கன்சல்டன்சி, புரோக்கர்ஸ், போட்டி மிகுந்து காணப்படும். கப்பல், நீர், மீன்பிடித் தொழில், மெக்கானிக், லாபம் குறைந்தும் சற்று சுமாரகவும் இருந்து வரும். பள்ளி கல்லூரி, பல்கலைக் கழகங்கள், பிளாஸ்டிக், உப்பு ஏற்றுமதி, இறக்குமதி லாபம் குறைந்தும், நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் ஓரளவு சாதகமாக இருந்து வரும். திரையரங்கம், திரைப்பட விநியோகம் அழகு சாதனங்கள், பெண்கள் விரும்பும் பொருட்களின் உற்பத்தி அதிகரித்தும் சற்று லாபம் அதிகரித்தும் அமையும். விவசாயம் பருவத்தே பயிர் செய்தல் வேண்டும். இருப்பினும் உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்கும். காய்கறிகள், பழங்கள் உற்பத்தி அதிகரித்தும் லாபம் கூடியும் காணப்படும். பூக்கள் உற்பத்தி சற்று சுமாராக இருந்து வரும். எதிர்பார்த்த மான்யம் வருவதில் சற்று தடையேற்பட்டுப் பின் வந்து சேரும். நெல், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள் லாபகரமாகவும், பயறு வகைகள், வாழை, வெற்றிலை சுமாராகவும், ஏலம், மிளகு, கிராம்பு, முந்திரி உற்பத்தி அதிகரித்தும் லாபம் கூடியும் அமையும். அரசியல் கட்சி பணியும், அரசியல் பணியும், கடுமையாக நெருக்கடிகளை உருவாக்கும். அரசாங்க விஷயத்தில் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும். தொண்டர்களின் அன்பும் மக்களின் ஆதரவையும் பெற பாடுபட வேண்டியது இருக்கும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் வந்து போகும். அரசியல் எதிரிகள் விஷத்தில் அதிகக் கவனம் தேவை. உங்களை முடக்கி வைக்க நடக்கும் முயற்சிகளை முறியடித்து வெற்றி பெற உங்கள் முழு பலத்தையும் உபயோகித்தல் வேண்டும். கலை எதிலும் அலட்சியம் காட்டாமல் கடுமையாக உழைத்தல் வேண்டும். நேரம் தவறாமல் பணியாற்றுதல் வேண்டும். பொறுப்புகளை உணர்ந்து செயல்படுதல் வேண்டும். நடனம், நடிப்பு, பாட்டு, ஒப்பனை, நிர்வாகம், டைரக்க்ஷன் போன்ற துறைகள் லாபகரமாகவும், சின்னத்திரை, சினிமா, ஓளிப்பதிவு சாதகமாகவும் இருக்கும். விருதுகள், பட்டங்கள், பரிசுகள், பாராட்டுகளும் ஒரு சிலருக்கு வந்தமையும். இசை, ஓவியம், ஜோதிடம், நாடகம் லாபகரமாக அமையும். மாணவர்கள் ஞாபகசக்தியை நங்கு அதிகரித்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நன்கு மதிப்பெண் பெற முடியும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க பழகுதல் வேண்டும். எதிர்பார்த்த கல்வி கடன் கிடைக்கும். உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு அமையும். சாதுர்யம், தன்னம்பிக்கை, முயற்சி இவற்றை அதிகரித்துக் கொள்ளல் வேண்டும். பெண்கள் உங்களுக்கான முக்கிய்த்துவம் குறைவது போல் ஆரம்பத்தில் தோன்றினாலும் குடும்பத்தில் உங்கள் பங்கு காலப் போக்கில் அதிகரிக்கும். விருந்து, விசேஷங்களில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்த்தல் நலம். எடுக்கும் முயற்சிகளில் ஆரம்பத்தில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிட்டும். அடிக்கடி ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் அமையும், காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க நிறைய போராட வேண்டியது வரும். கிடைக்கும் வேலையில் திருப்திபடல் வேண்டும். சக ஊழியர்களின் அனபும் ஆதரவும் கிட்டும். உயரதிகாரிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் தோன்றும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப் போன திருமணம் போன்ற சுபகாரியம் இனிதே நடந்தேறும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உடல் ஆரோக்யம் உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. சர்க்கரை, உப்பு சத்துக்கள் இருப்பின் அவற்றை கட்டுக்குள் வைத்து கொள்ளவும். சளித் தொல்லை, இருமல், காய்ச்சல் போன்றவைகள் வராமல் உடல்நலம் பேணுதல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அமையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். அடிவயிறு கால், பாதம், போன்ற உடல் உறுப்புகளில் கவனம் தேவை. சனி பகவான் வகரம் மற்றும் வக்ர நிவர்த்தி பலன்கள் (மூலம், பூராடம், உத்தராடம், கேட்டை) மூலம் சனி பகவன் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கலங்களில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 3ம் மற்றும் 2ம் இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். எடுக்கும் காரியங்கள் ஓரளவு சாதகமான பலனை அளிக்கும். அடிக்கடி அலைச்சல்கள் அல்லது பயணங்கள் அமையும். அதனால் நன்மைகள் ஏற்படும். அந்நிய மனிதர்களின் நட்பும் உதவியும் அவர்களால் நன்மையும் ஏற்படும். காதல் விஷயங்களில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். உங்களைப் பற்றிய வீண் வந்தந்திகள் உலவிய வண்ணம் இருக்கும். நேரத்தை வீணாக்காமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறப் பாடுபடுதல் வேண்டும். சிறு தொழில்கள், சாலையோரம் தெருவோர வியாபாரம் லாபகரமாக அமையும். பங்குசந்தை சாதகமாக இருந்து வரும். கணவன் மனைவி உறவு அன்பாகவும் நேசமாகவும் இருந்து வரும். குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். பூராடம் அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபட சந்தர்ப்பம் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் இதுவரை இருந்து வந்த மன வருத்தங்கள் விலகும். இதுவரை நெருக்கடி கொடுத்த பிரச்சனைகளிலிருந்து விடுபட சந்தர்ப்பம் வாய்க்கும். ஸ்திர சொத்துக்கள் கால்நடைகள் வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். புதிதாக அடிக்கடி ஆடை அணிகலன்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். கால்நடை வளர்ப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். நண்பர்கள் வசம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து நட்பு பலப்படும். உத்தராடம் உயர்கல்வி பயிலுவதில் இருந்து வந்த தடை நீங்கி நல்ல உயர் கல்வி அமையும். உறவினர்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேர வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடு செல்வதில் இருந்து வந்த தடை நீங்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் சீராக இருந்து வரும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் ஓய்வும் அல்லது வேலையை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையும் அமையும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் சாதகமாக இருந்து வரும். காதல் விஷயங்கள் சந்தோஷமாக இருந்து வரும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி ஏற்படும். சுற்றுலா விருந்து கேளிக்கைகளில் அதிக ஈடுபாடுடன் இருந்து வருவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஓற்றுமையுடன் செயல்பட ஆரம்பிக்கும். கணவன் மனைவி உறவுகள் மகிழ்ச்சியாக அமையும். வீடு, இடம், வாங்க வாய்ப்புகள் அமையும். உடலில் இதுகானும் இருந்து வந்த நோயின் தன்மை குறைந்து உடல் ஆரோக்யம் கூடும். கேட்டை உடன் பணிபுரிவர்களிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்கவும். தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். வழக்குகள் சாதகமாக இராது. சுய தொழில், சிறு தொழில்கள் வருமானம் தரும். ஒரு சிலருக்கு கூட்டுத் தொழில் செய்ய வாய்ப்பு அமையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபம் கிட்டும். முதலாளி என்ற அந்தஸ்தை ஒரு சிலருக்கு கூட்டிக் கொடுக்கும். வெளிநாடு செய்திகள் சாதகமாக இருந்து வரும். எப்பொழுதும் சுறு சுறுப்பாகவும் உற்சாகமும் இருந்து வரும். அடிக்கடி வெளியூர் மற்றும் வெளி மாநிலம் செல்வதற்கு ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உயர்கல்வி பயில வாய்ப்பும் வேலை நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். தாய்மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். உறவினர்களிடம் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடு நீங்கி நட்பும் நேசமும் உருவாகும். வீடு வாடகைக்கு அல்லது ஒத்திக்கு விட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாகவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். |
||||||||
by Swathi on 29 Nov 2016 6 Comments | ||||||||
Tags: Dhanusu Rasi Palangal தனுசு ராசி பலன்கள் தனுசு ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் Sani Peyarchi Palangal | ||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|