|
||||||||
சங்க தமிழ் நூல்களில் வடமொழி ஊடுருவல் புள்ளிவிவரம் |
||||||||
![]() சங்க நூல்களில் தமிழ்ப் புலவர்கள் வடமொழியை முடிந்தவரை தவிர்த்து எடுத்தாளமல் இருந்த போதிலும் இடைச் சொற்கள் எல்லாம் நீக்கி தமிழாக இருந்த போதிலும் சில வடசொற்கள் கலந்திருப்பதை புள்ளியியல் விவரம் அறிய நேரிடுகிறது அவ்வையார் ஆத்திச்சூடி மொத்தமுள்ள 2020 சொற்களில் 156 வடசொல் இருக்கிறது. இது 100 க்கு 8 சதவீதம் நறுந்தொகையில் 600 சொற்களில் வடசொல் 24 உள்ளது. நைடதம் மொழிபெயர்ப்பு நூலாக இருந்த போதிலும் சராசரியாக மூன்று பாட்டில் இரண்டு வடசொல் இடம் பெறுகிறது. திரிகடுகம் 25 வடசொல் இடம் பெறுகிறது. இது நான்கு வெண்பாவுக்கு ஒரு வடசொல் வீதம் எனலாம். திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்தினுக்கு இரண்டும், ஒவ்வொன்றில் ஒன்று தானும் காண்பது அரிதாக இருந்த போதும் தென்மொழியில் வழக்கு மிகுதியாகவுள்ள வடசொற்களை கணக்கிட்டால் ஏறக்குறைய 60 சுத்த வடசொல் காணலாம். நாலடியாரில் 5 வெண்பாவுக்கு ஒரு வடசொல் காண்பது அரிது. கலித்தொகையில் கலிப்பாட்ட்டு ஒவ்வொன்றிலும் ஒன்றினுக்கு மேல் மிகையில்லை. கல்லாடத்தில் அகவல் ஒன்றில் ஐந்துக்கு மேல் வடசொல் இல்லை. பத்துப்பாட்டில் வடசொல் ஐந்துக்கு மேல் இல்லை பதார்த்த குணசிந்தாமணி தமிழுக்கே உரிய மருத்துவநூல். அகத்தியர் தமிழில் செய்த நூல்கள் எல்லாம் அழிந்து போயின. அகத்தியர் பெயரால் தற்காலத்தில் விளங்கும் நூல்கள் புரட்டு நூல்களே. சமணமும் பவுத்தமும் பரவிய காலத்தில் பல வடசொற்கள் நவீன மதத்தைப் போல் வந்தேறிகளாக இடம் பெற்றனவே. தமிழ் பிறிதொரு பாடையின் சார்பின்றி தன்னிற் தோன்றிய சிறந்த மொழி. - ஆதாரம்: தமிழ்ப்பாஷை. தொகுத்தவர்: ரங்கூன் திரு. கபாலமூர்த்தி. 1914. |
||||||||
![]() |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 10 Mar 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|