|
|||||
நடிகர் சரத் பாபு காலமானார்...அஞ்சலி.. |
|||||
![]() பிரபல நடிகர் சரத்பாபு இயற்கை எய்தினார்.. தமிழ் சினிமாவில், இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டினப்பிரவேசம்' திரைப்படத்தின் மூலம், அறிமுகமானவர் சரத்பாபு. கதாநாயகனாக, நண்பனாக, வில்லனா என குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சரத்பாபு. ரஜினியின் `முள்ளும் மலரும்' `வேலைக்காரன்', `அண்ணாமலை' போன்ற பல படங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர். தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சரத் பாபு!
உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வலைத்தமிழ் வாசகர்கள் சார்பாக நடிகர் சரத்பாபு அவர்களுக்கு எமது அஞ்சலிகள்.. |
|||||
by Swathi on 22 May 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|